உங்களின் நட்சத்திரமும் அன்னதானமும்?

natchathiram-annathanam
உங்களின் நட்சத்திரமும் அன்னதானமும்?

அசுபதி, பரணி, கார்த்திகை1ஆம் பாதம் (மேஷம்)
இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமியன்றும்,

கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2ஆம் பாதம் (ரிஷபம்)
நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் கார்த்திகை மாதம் வரும் பவுர்ணமியன்றும்

மிருகசீரிடம் 3,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் பாதம் (மிதுனம்)
நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் மார்கழி மாத பவுர்ணமியன்றும்,

புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம் (கடகம்) நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் தைமாத‌ பவுர்ணமியன்றும்,

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் (சிம்மம்)
நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் மாசிமாத பவுர்ணமியன்றும்,

உத்திரம் 2,3,4ஆம் பாதம், அஸ்தம், சித்திரை1,2ஆம் பாதம்(கன்னி)
நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பங்குனி மாத பவுர்ணமியன்றும்,

சித்திரை 3,4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதம் (துலாம்)
நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் சித்திரை மாத பவுர்ணமியன்றும்,

விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை (விருச்சிகம்)
நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் வைகாசி மாத பவுர்ணமியன்றும்,

மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் (தனுசு)
நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் ஆனி மாத பவுர்ணமியன்றும்,

உத்திராடம் 2,3,4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம் (மகரம்)
க்ஷநட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் ஆடிமாத பவுர்ணமியன்றும்,

அவிட்டம் 3,4 ஆம்பாதம், சதயம், பூரட்டாதி1ஆம் பாதம் (கும்பம்)
நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் ஆவணி மாத பவுர்ணமியன்றும்,

பூரட்டாதி 2,3,4ஆம்பாதம், உத்திரட்டாதி, ரேவதி (மீனம்)
நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமியன்றும்

பின்வருமாறு ஏதாவது ஒரு இடத்தில் அன்னதானம் தொடர்ந்து செய்துவர, வாழ்க்கையில் முன்னேற்றமில்லாத நிலை மாறும். தோஷங்கள், சாபங்கள், கண் திருஷ்டி நீங்கிடத் துவங்கும்.

1.உங்களின் குலதெய்வக்கோவில்
2.உங்கள் வீட்டின் அருகிலிருக்கும் அம்மன் கோவில் அல்லது உங்களின் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயம்

3.நதிக்கரையோரம் அல்லது கடலோரம் அல்லது மலைமீதிருக்கும் எந்தக் கோவிலாக இருந்தாலும்,

4.சதுரகிரி அல்லது அண்ணாமலை அல்லது பர்வதமலை
இவ்விடங்களில் சமையல் செய்து அன்னதானம் செய்தால் 100% புண்ணியமும், கடையில் வாங்கிக்கொடுத்தால் 70% புண்ணியமும், உங்களின் இரத்த உறவினர் நீங்கள் கொடுத்த பணத்தினைக் கொண்டு கடையில் வாங்கிக் கொடுத்தால் 60% புண்ணியமும், பிறர்(தனி நபர்,அறக்கட்டளை) வாங்கிக்கொடுத்தால் 50% புண்ணியமும் உங்களை வந்துசேரும்.

ஒரே ஒருமுறை அவ்வாறு அன்னதானம் உரியவர்கள் செய்ததும், அவர்களின் நீண்டகாலச் சிக்கல் தீர வழி கிடைக்கும். இது அனுபவத்தில் கிடைத்த உண்மை.