தேவையான பொருட்கள் : -
சாமை - ஒரு கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், தண்ணீர் - 2கப், தேங்காய்த்துருவல் - கால் கப், உப்பு- ஒரு சிட்டிகை.
செய்முறை :-
சாமை அரிசியை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்த ரவை போல பொடித்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து அதில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டுக் கொதிக்கவிடவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த சாமை அரிசி ரவை, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்துகொண்டு, கொதிக்கவிட்ட வெல்லத் தண்ணீரை சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
இதைக் கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடித்துவைத்து, தேங்காய்த் துருவலால் அலங்கரித்துச் சாப்பிடவும்.