ஒரு சிலர் மனம் பதட்டமடைவதாலும் அதிகம் உடலை வருத்தி கொள்வதாலும் இதயத்தில் படபடப்பு தன்மை அதிகம் ஏற்படும். இக்குறைபாட்டை போக்க மாசிக்காய் பொடியை சிறிது பசும்பாலில் விட்டு குழைத்து நாக்கில் தடவினால் சிறிது நொடிகளிலேயே இதய படபடப்பு நிற்கும்.
மாசிக்காய் பொடியுடன் சிறிதளவு, பனங்கற்கண்டு 1ஸ்பூன் சேர்க்கவும். இதனுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து பின்பு வடிகட்டி அதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து குடித்துவந்தால் வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும்.
நமக்கு இளமையான தோற்றம் தருவதில் நமது சருமம் முக்கிய பங்கு வகிக்கிறது. தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும், இளமை தோற்றம் பெறவும் மாசிக்காய், ஜாதிக்காய் மற்றும் கிராம்பு ஆகியவற்றின் பொடிகளை ஒன்றாக கலந்து உடலுக்கு பூசி குளித்து வர சரும சுருக்கம் விலகும்.
மூல நோய் குணமாக ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் 250 மில்லி அளவு ஊற்றி இதனுடன் சிறிதளவு அகத்தி கீரையை போட்டு வதக்கவும். கீரை நன்றாக வதங்கியதும் அதனுடன் மாசிக்காய் பொடி 2ஸ்பூன் சேர்க்கவும். இந்த தைலத்தை வடிக்கட்டி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதை மேல்பூச்சாக ஆசனவாயில் பயன்படுத்தும்போது, மூல நோய் சரியாகும்.
பெண்களுக்கு மாதந்தோறும் வெளியேறும் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் பல பெண்களுக்கு உண்டு. அவர்கள் இந்த மாசிக்காய் பொடியை தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட்டு வர மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும். கருப்பையில் இருக்கும் அழுக்குகள், நச்சுக்கள் நீங்கி கருப்பை பலம் பெறும்.
முகப்பரு மறைய மாசிக்காய் பொடி சிறிதளவு , சாதிக்காய் பொடி சிறிதளவு , எலுமிச்சம் பழம் சாறு சிறிதளவு இவை மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை இரவு நேரத்தில் முகப்பருவின் மீது பூசி பின்பு காலையில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மறையும்.
மாசிக்காய் பொடியை நீர்விட்டு நன்கு குழைத்து ஆசனவாயில் மூலம் பாதிப்பால் ஏற்பட்ட புண்கள், கட்டிகள் போன்றவற்றின் மீது தடவி வர சிறந்த நிவாரணம் அளிக்கும். தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீதும் மாசிக்காய் பொடியை தினமும் நீரில் குழைத்து தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்
குழந்தைகளுக்கு ஏற்பட்டும் வயிற்று போக்கு பிரச்சனைக்கும் மாசிக்காய் ஒரு சிறந்த மருந்தாகும். மேலும் வயிற்றுபோக்கு பிரச்சனை உள்ளவர்கள் மாசிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதை தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும்.
அடிபட்ட காயத்தில் ரத்தம் அதிகம் வெளியேறுவதை தடுக்க, மாசிக்காய்கள் சிலவற்றை நெருப்பில் சுட்டு, அந்த சாம்பலை ரத்த காயத்தின் மீது வைத்து அழுத்த, ரத்தம் வெளியேறுவது நிற்கும்.
ரசாயன பொருள்கள் மற்றும் போதைப்பொருட்கள், விஷ தன்மை கொண்டவை. இதை உண்டவர்கள் உடலில் இருக்கும் இந்த நச்சை நீக்குவதற்கு மாசிக்காய் தூளை 5 கிராம் அளவில் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் கஞ்சா, மது மற்றும் விஷத்தன்மை கொண்ட பொருட்களின் நஞ்சை குறைக்கும்.
பெரும்பாலானவர்களுக்கு ஜலதோஷம் ஏற்படுகிறது. மேலும் டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் நமது சுவாசப் பாதைகளில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட இப்பிரச்னைகளிலிருந்து சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
நாம் உணவை உண்பதற்கு வாய், நாக்கு, பற்கள் போன்ற உறுப்புக்கள் உதவி புரிகின்றன. மாசிக்காய் பொடியை குடிநீரில் கலந்து வாய்கொப்பளித்து வர நாக்கில் இருக்கும் புண்கள் ஆறும். ஈறுகள் உறுதிபெறும். ஈறுகளில் ரத்தம் வடிவது நிற்கும். பற்சொத்தை மற்றும் உஷ்ணம் காரணமாக வாயில் ஏற்படும் புண்கள் குணமாகும்.