தேவையான பொருட்கள்:
உலர்ந்த அத்திப்பழம் – 5
தண்ணீர் – ஒரு கப் (200 மி.லி)
தேன் – ஒரு தேக்கரண்டி
சூடான பால் – 50 மி.லி
ஏலக்காய் தூள் – தேவையான அளவு
செய்முறை:
உலர்ந்த அத்திப்பழத்தை தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மிக்ஸியில் இட்டு அரைத்து விழுதாக்கி, அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும்.
பாலை சூடாக்கி விழுதில் சேர்த்து, தேவையான அளவு ஏலக்காய் தூள் சேர்த்து சுவையாகச் சாப்பிடவும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், கருப்பை கோளாறுகள் ஆகியன தீரும்.
குடற்புண், தோல் நோய், ஆஸ்துமா, மூலநோய், உடல் பலவீனம், ஆண்மைக் குறைவு நீங்கும் அற்புத சாறு.