Breaking News :

Sunday, October 06
.

ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் “தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு !


இளம் திறமையாளர்களை,  அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்,  Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. Noise and Grains தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் “கண்ணம்மா என்னம்மா” ஆல்பம்  பாடலின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அந்நிறுவனம் தயாரித்திருக்கும் அடுத்த ஆல்பம் பாடல் “தோட்டா”.  இப்பாடலை பிரேம்ஜி, நித்யஶ்ரீ பாடியுள்ளனர். 

இப்பாடலில்  ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிக்க, தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ளார். நேற்று இப்பாடலின் வெளியீட்டு விழா,  சின்னத்திரை பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், கலந்துகொள்ள,   பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இவ்விழாவினில் படக்குழுவினருடன் பிக்பாஸ் புகழ் ராஜு, அபிராமி, ஜூலி, சக்ரவர்த்தி, கேப்ரியல்லா,  உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.  


Noise & Grains சார்பில் கார்த்திக் பேசியதாவது..

கண்ணம்மா பாடல் மிகப்பெரிய வெற்றி தந்தது. அதை தொடர்ந்து இந்த பாடல் குறித்து ரியோ சொன்ன போது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பாடலை உங்களுக்கு வழங்குவது இன்னும் மகிழ்ச்சி. பாடலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


Noise & Grains சார்பில் மகாவீர் பேசியதாவது…
Noise & Grains  நிறுவனத்தில் அனைத்தையுமே திட்டமிட்டு தான், பெரிய அளவில் செய்து வருகிறோம். சுயாதீன கலைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை  அனைவரும் கொண்டாடும் வகையில் தர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறோம், நன்றி. 


இயக்குநர் பிரிட்டோ பேசியதாவது..

கண்ணம்மா பாடல் ஹிட்டான பிறகு இந்த பாடல் செய்யலாம் என முடிவெடுத்த போது முதலில் ரியோ தான் செய்ய வேண்டும் என நினைத்தேன். அவரிடம் ரம்யா இந்த பாடலை செய்தால் நன்றாக இருக்குமென்று சொன்னேன். அவர் ஒப்புக்கொள்வார் என்றால் ஓகே என்றார். ரம்யா ஒப்புக்கொண்டு பணியாற்றி தந்ததற்கு நன்றி. என்னை நம்பி கடுமையாக உழைத்த என் குழுவினருக்கு நன்றி. இந்த பாடலை அட்டகாசமாக பாடி தந்த பிரேம் ஜி மற்றும் நித்யஶ்ரீ இருவரும்கும் நன்றி. இந்த பாடலையும் பெரிய அளவில் வெளியிடும் Noise & Grains அவர்களுக்கு நன்றி. 


நடிகர் பிக்பாஸ் பிரபலம் ராஜு பேசியதாவது…

நானும் ரியோவும் வாய்ப்பு தேடிய காலத்திலிருந்தே மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர் எப்போதும் சின்ஸியராக இருப்பார். அவர் ரொம்பவும் திறமைசாலி. இந்த பாடலில் நடனம் அற்புதமாக இருந்தது. ரம்யாவின் ரசிகன் நான், அவருக்காகவே பலமுறை பாடல் பார்த்தேன். திரைப்பட பாடல் வெளியீட்டு விழா தான் இவ்வளவு பெரிதாக நடக்கும் இந்த பாடலுக்கு நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ரியோவுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள். 

நடிகர் ரியோ ராஜ் பேசியதாவது…

கண்ணம்மா பாடல்  ஒரு மொட்டை மாடியில் எதேச்சையாக உருவானது. அது மிகப்பெரிய ஹிட்டானது. இந்த பாடல் பற்றி Noise & Grains அவர்களிடம் தெரிவித்தவுடன் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களுக்கு தான் பெரிய நன்றி சொல்ல வேண்டும். மாதேஷ் மாணிக்கம் பெரிய பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்பவர் எங்கள் டீமில் அவர் மட்டும் தான் பெரிய ஆள், அவர் இந்த பாடலை செய்து தந்ததற்கு நன்றி. பிரிட்டோ மிக அற்புதமாக இயக்கியுள்ளார். அவர் இன்னும் பெரிதாக வளர்வார். பிக்பாஸில் சண்டை போட்டுக்கொண்டாலும் நானும் ரம்யாவும் நண்பர்கள் அவர் இதில் நடித்தது மகிழச்சி. எங்களை பாராட்ட வந்த அனைவருக்கும் நன்றி. 

நடிகை ரம்யா பாண்டியன் பேசியதாவது…

நான் இதுவரை எந்த ஆல்பம் பாடலும் செய்ததில்லை. பிரிட்டோ சொன்ன ஐடியா பிடித்திருந்தது. உடனே ஒப்புக்கொண்டேன் இந்த டீம் ஜாலியான டீம். இப்பாடலில் வேலை பார்த்த அனுபவம் மிக சந்தோசமாக இருந்தது. இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ரீல்-ஸில் எங்கள் நடனத்தை ஆடி இப்பாடலை ஹிட் செய்யுங்கள் அனைவருக்கும் நன்றி
 

இயக்கம் - பிரிட்டோ  JB
இசை - தேவ் பிரகாஷ் 
பாடல்கள் -  A S தாவூத் 
பாடியவர்கள் -  பிரேம் ஜி , நித்யஶ்ரீ
நடனம் -  அபு & சால்ஸ் 
ஒளிப்பதிவு - மாதேஷ் மாணிக்கம்
படத்தொகுப்பு - கிருஷ்ணா குமார் கிரியேட்டிவ் டைரக்டர்  - கார்த்திக் ஶ்ரீனிவாஷ் 
பிஸினஸ் டைரக்டர் - மஹாவீர் அசோக்
மக்கள் தொடர்பு - நிகில் முருகன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.