Breaking News :

Sunday, September 08
.

பழம்பெரும் நடிகை எம் என் ராஜம்


ஆல மரமாய் நிலைத்திருக்கும் 70 ஆண்டுக்கு மேல் திரை வாழ்வு....

தமிழ்த் திரையுலகில் அசல் தமிழச்சியாகவும் ராஜம் இருந்தார். தமிழையும் இவரையும் பிரிக்க முடியாத அளவு நெருங்கிய தொடர்பு ராஜத்துக்கு உண்டு.

மதுரை நரசிம்ம ஆச்சாரி ராஜம் (எம்.என்.ராஜம்) என்று தன் பெயருடனேயே பிறந்த ஊரின் பெயரையும் இணைத்துக் கொண்டிருப்பவர் இவர்.

1949ல் தொடங்கிய அவரது திரைப் பயணம் 70 ஆண்டுகளுக்கு மேலாக கடந்து விட்டது. இவ்வளவு நீண்ட காலம் வேறு எவரும் நீடித்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.

சிறிய வேடங்களிலிருந்து பெரும் பாய்ச்சலாக சாதித்துக் காண்பிக்க அவருக்குக் கிடைத்த வாய்ப்புதான்

‘ரத்தக் கண்ணீர்’ திரைப்படம்.
படம் வெளி வருவதற்குள் பல சோதனைகளை அவர் எதிர் கொள்ள நேர்ந்தது. இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கதாநாயகனாக நடிக்க, ஒரு முக்கியமான பாத்திரத்தில் அறிமுகமானார் ராஜம்.

குருவி தலையில் பனங்காய் என்பதைப் போல ஒரு பதினான்கு வயது சிறுமிக்கு மிக மிக அதிகமான சுமை அந்த வேடம்.

தாசிப் பெண்ணாக ஆள் மயக்கும் கைகாரியான அந்த வேடத்தை ஏற்க பல நடிகைகளும் தயங்கிய நிலையில், துணிச்சலாக முன்வந்து அந்த வேடமேற்றார் ராஜம்.

இதற்காகவே அவருக்குத் திரைத்துறையினர் பாராட்டு விழா நடத்த வேண்டும்.

 பாய்ஸ் கம்பெனி நாடக நடிகைகள் அனைவரும் மறைந்து விட்ட நிலையில் தற்போதும் அதன் சாட்சியாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை எம்.என்.ராஜம் ஒருவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

 அவரும் தன் ஆரம்ப கால நாடக வாழ்க்கையே தனக்குப் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது என்பதில் மாறாத நம்பிக்கை கொண்டவர்.

அதேபோல, நடிகர்களுக்கான சங்கம் உருவாக்கப்பட்டது 1952 ஆம் ஆண்டில்.
நடிகர் சங்கத்தின் மூத்த, முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் அவருக்கே உரித்தானது.
 நடிகர் சங்கத்தில் எம்.என்.ராஜத்தின் உறுப்பினர் எண் : 19

நடிகை டி.ஆர்.ராஜகுமாரியைப் போலவே வில்லி, கதாநாயகி, இதர குணச்சித்திர வேடங்கள் என அனைத்தையும் ஏற்று தொடர்ந்து செய்தவர் ராஜம்.

ஒரு நடிகைக்கு எந்த வேடம் என்றாலும் ஏற்று நடிக்க வேண்டிய கடமை உண்டு என்பதில் உறுதியானவர் அவர்.

அதனாலேயே இவ்வளவு நீண்ட காலம் திரையுலகில் அவரால் நீடித்து நிலைக்க முடிந்தது.

பல்வேறு தரப்பினரையும் தன் நடிப்பால் கட்டிப் போட்டு வைத்தவர் நடிகை எம்.என்.ராஜம் அவர்கள் என்றால் அது மிகையில்லை.

எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் ‘சேவா ஸ்டேஜ்’ நாடகக்குழு அவருக்கு முகவரியானது.

தன் வாழ்நாள் துணையான 
ஏ.எல்.ராகவனின் அறிமுகம் அங்குதான் அவருக்குக் கிடைத்தது.
பின்னணி பாடும் கலைஞராக ஏ.எல்.ராகவன் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார்
ஸ்டில்ஸ் உதவி பழநியப்பன் சுப்பு

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.