Breaking News :

Sunday, November 03
.

'தி லெஜண்ட்' திரைப்படம் உலகெங்கும் 28 ஜூலை வெளியீடு


லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் டிரைலர், 'மொசலோ மொசலு' பாடல், 'வாடிவாசல்' பாடல் ஆகியவை பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான 'பொ பொ பொ' பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என அழுத்தமாக தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.

எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சினிமா பாணியில் சொல்வதென்றால் ரிபீட் ஆடியன்ஸை வரவழைக்கும் ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது.  

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களை தமிழகம் எங்கும் விநியோகம் செய்து ராசியான விநியோகஸ்தர் என பெயர் எடுத்த கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன், 'தி லெஜண்ட்' படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து "என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்" என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக் கூறி அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்.

மேலும், தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தை அவர் வெளியிட உள்ளார்.

தமிழகத்தை போல மற்ற மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது என வெளிநாடு மற்றும் அனைத்து மொழிகளில் வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு உரிமை, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் திருப்பதி பிரசாத் - கே ஜி எப், ஆர் ஆர் ஆர், டான், 2.0, காலா ஆகிய படங்களின் தெலுங்கு விநியோகஸ்தர்.
ஸ்பைடர் மற்றும் காட்பாதர் படங்களின் தயாரிப்பாளர். விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் வெளியீட்டு உரிமையையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி விநியோகம், கணேஷ் ஃபிலிம்ஸ் நம்பிராஜன்- ரஜினி நடித்த சிவாஜி, ஏவி எம் தயாரிப்பில் வெளியான அநேக படங்கள், டான், செக்க சிவந்த வானம், ராவணன், மாஸ்டர் மற்றும் நானும் ரவுடி தான் ஆகிய படங்களை வெளியீட்டாளர்.  

வெளிநாட்டு உரிமை, ஏ பி இன்டர்நேஷனல் சஞ்சய் வாத்வா - கே ஜி எப், விக்ரம், சார்லி உள்ளிட்ட பல படங்களின் வெளிநாட்டு உரிமையை பெற்றவர். வெளிநாட்டு வெளியீட்டில் முதன்மையான நிறுவனம்.

மலையாளம் உரிமை, மேஜிக் ஃபிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன்- கே ஜி எப், மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் சார்லி படத்தின் தயாரிப்பாளர்.

கன்னட உரிமை, ஃபைவ் ஸ்டார் செந்தில் - விக்ரம், டான், கோப்ரா ஆகிய படங்களின் வெளியீட்டு உரிமையை பெற்ற முன்னணி நிறுவனம்.

முதல் படத்திலேயே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம், மற்றும் உலகமெங்கும் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு கிடைத்துள்ளது என்று திரைத்துறை மற்றும் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.