Breaking News :

Thursday, May 02
.

நடிகை குட்டி பத்மினி கனகா உடனான படத்தைப் பகிர்ந்த வைரல் பதிவு


வைரலாகும்  இந்த  புகைப்படத்தில் குட்டி பத்மினியுடன் இருப்பவர் யார் என்று தெரிகிறதா? அவர் வேற யாரும் இல்லை நம்ம ‘கரகாட்டக்காரன்’ திரைப்பட நடிகை கனகா

80களில் கொடிகட்டி பறந்த கரகாட்டக்காரன் நடிகையும், அப்போது, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவருமான நடிகை கனகா வின் உடனான தனது புகைப்படத்தை நடிகை குட்டினி பத்மினி தனது எக்ஸ் தள பக்கத்தில்  பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான இவர், தமிழில் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை கனகா. கடைசியாக தமிழில் 1999-ம் ஆண்டு வெளியான ‘விரலுக்கேத்த வீக்கம்’ படத்தில் மறைந்த நடிகர் விவேக்குக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு 2000-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நரசிம்மம்’ படத்தில் நடித்திருந்தார். பின்னர் திரைத்துறையிலிருந்து விலகியிருந்த கனகா படங்களில் நடிக்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.