Breaking News :

Saturday, December 14
.

மாஸ்டர் மகேந்திரனுடன் கைகோர்க்கும் ஜிவி


மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும், “அமீகோ கேரேஜ்” படத்தில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், சிவாங்கி இணைந்து பாடிய மெலோடி பாடல் !  

முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அமீகோ கேரேஜ்’. இப்படத்திற்காக இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையில்,  இசையமைப்பாளர், நடிகர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர். சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா இப்படத்தின் முதல் பாடலை பாடியிருந்தார்.  இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இணைந்து இப்படத்தின் இரண்டாவது மெலோடி பாடலை பாடியுள்ளனர். திரையுலகின் முன்னணி  இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் காந்தக்குரலும், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியின் வசீகர குரலும் இணைந்து, இப்பாடலை மிக அற்புத அனுபவமாக மாற்றியுள்ளது. அனைவர் மனதையும் கொள்ளை கொள்ளும் அருமையான மெலடி கீதமாக, விரைவில் இப்பாடல் வெளியிடப்படவுள்ளது.

கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக, சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது அமீகோ கேரேஜ். இப்படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, GM சுந்தர் தசரதி, தீபா பாலு, ஆதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன்  எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, கு.கார்த்திக் படத்தின்  அனைத்து பாடல்களையும் இயற்றியுள்ளார்,விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய,  ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.