மனைவியுடன் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபுதேவா!

actor-prabudeva-wife-marriage-function
மனைவியுடன் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபுதேவா!

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி, தனது அசாத்தியமான நடன அசைவுகளால் அகில இந்திய அளவிலும் 'இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்' என ரசிகர்களாலும் திரைத்துறையினராலும் கொண்டாடப்படுபவர் பிரபுதேவா.கடந்த 1994ஆம் ஆண்டு 'இந்து' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரமெடுத்த பிரபுதேவா, அதை தொடர்ந்து காதலன் படத்தில் நடித்தார். அந்த படத்தின் பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் தென்னிந்தியா முழுவதும் கொடிகட்டி பறந்தார். நடிகர், நடன இயக்குநர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என திரைத்துறையின் பல தளங்களில் தனது தனித்துவமான முத்திரையைப் பதித்து வருகிறார்.

கடந்த 1995-ஆம் ஆண்டு ரமலத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா, பின் கருத்து வேறுபாடு காரணமாக 2011 ஆம் ஆண்டு அவரை விட்டு பிரிந்து விவாகரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து, மும்பையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவராக இருந்த ஹிமானி சிங் என்பவரை காதலித்து வந்த பிரபுதேவா, கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் எளிமையான முறையில் அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு அண்மையில் ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. வழக்கமாக தனது மனைவியுடன் பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது மேடைகளிலோ தலைகாட்டாத பிரபுதேவா, முதன்முறையாக தனது இரண்டாவது மனைவி ஹிமானி சிங்குடன் ஒரு திருமண விழாவில் நேரில் கலந்துகொண்டுள்ளார். பொது நிகழ்ச்சிகளுக்கு தனது மனைவியை அழைத்து வராத பிரபுதேவா, குடும்பத்துடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோவில் பிரபுதேவா மற்றும் அவரது மனைவி ஹிமானி சிங் ஆகிய இருவரும் ஜோடியாக வந்து இருந்தனர். பொருத்தத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், பிரபுதேவா - ஹிமானி ஜோடி பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு, எப்போதும் பர்சனல் லைஃபை ரகசியமாக வைக்கும் பிரபுதேவா, மனைவியுடன் பொது நிகழ்ச்சிக்கு வந்திருப்பது செம சர்ப்ரைஸ் என சோஷியல் மீடியாவில் கமெண்ட்டுகளை அள்ளி வீசி அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.