"தூக்கம் வந்தா தூங்குற மாதிரி, செக்ஸும் ஒரு வித உணர்வு தான்"!

nathicharami-movie-review
'Nathicharami' கணவனின் மரணத்திற்கு பிறகு நினைவுகளில் வாழும் பெண்ணின் திரைப்படம்

"கட்டிப்பிடிக்கக் கூடாது, முத்தம் குடுக்கக் கூடாது, எமோஷனலா கனெக்ட் ஆகக்கூடாது, முக்கியமா செக்ஸ் வச்சதுக்கு அப்புறம் எல்லா ச்சாட் உரையாடல்களையும் டெலிட் பண்ணிடனும்"

"சரி"

நினைவுகளைப் போல் நம்மை வதைக்கும் கொடிய ஆயுதம் வேறில்லை என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கும் திரைப்படம்.

Nathicharami - கணவனின் மரணத்திற்குப் பிறகு அவனின் நினைவுகளில் வாழும் பெண், 'sex outside marriage' என்பதை எப்படி அணுகுகிறாள் என்பது தான் திரைப்படம்.

"மகேஷ் இறந்தப்புறம் யார் கூடயும் நீங்க செக்ஸ் வச்சுக்கலயா?"

"என்னால அவருக்கு துரோகம் பண்ண முடியாது"

"பசிச்சா சாப்பிடுற மாதிரி, தூக்கம் வந்தா தூங்குற மாதிரி, செக்ஸும் ஒரு வித உணர்வு தான்"

"ஆனா நாம மிருகம் மாதிரி கண்டபடி வாழ முடியாதே!"

"நாமளும் மிருகங்கள் தான்குறதை மறந்துட்டோம். ரெண்டு வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. இந்த சமூகம் தான் நமக்கு அலங்காரம் குடுத்து, இப்படித்தான் வாழணும்னு நம்ப வச்சிருக்கு"

"..."

"என் வளர்ப்புப் பிராணியை நான் எந்த அளவுக்கு சங்கிலியால் கட்டி கூட்டிகிட்டுப் போறேனோ அந்தளவுக்கு அது தனியா நடக்க பயப்படும். அது மாதிரி தான் நாமளும். ஒருத்தர்கிட்ட எந்த அளவுக்கு கட்டுண்டு கிடக்குறோமோ, அதே அளவுக்கு அவங்களை மறந்துட்டு தனியா பறக்க பயப்புடுவோம்"

அன்பின் மிகப்பெரிய சிக்கலே அதை விட்டு வெளியேற முடியாததும், அதில் வேறொன்றைப் பொருத்திப் பார்க்க முடியாததும் தான்.

-----------

"உனக்கு கெளரி கூட செக்ஸ் வச்சுக்க விருப்பமில்லையா?"

"அப்படியில்ல, செக்ஸ் வச்சுக்க விரும்புறேன்னு அவளா கேட்டதுதான் என்னால ஏத்துக்க முடில, அவளை நல்ல குடும்பத்துலர்ந்து வந்த பொண்ணுனு நெனச்சேன். ச்சே!"

இங்கு எல்லாமே இப்படித்தான், கணவன் / காதலன் / அறிமுகமானவன் என யாராயிருந்தாலும், பெண் உடலுறவை நோக்கி அவனை நகர்த்தலாமேயொழிய, நேரடியாய் "எனக்கு செக்ஸ் வேண்டும் கொடு" என்று தன் விருப்பத்தை முன்வைக்க முடியாதவளாக, முன்வைக்கத் தயங்குபவளாகத்தான் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறாள். இங்கு character assassination என்பது குற்ற உணர்ச்சியைத் தவிர வேறெதையும் தருவதில்லை.

படத்தின் பெரிய பலம், நாயகியின் அந்த மிரட்சியான கண்கள் தான். வாழ்க்கையில் இனியேதுமில்லை என்பதாய், கோபத்துடன், எதிர்பார்ப்புடன், குழப்பத்துடன் என அத்தனையையும் வெளிப்படுத்தும் அந்த வறண்டு போன கண்கள், படத்தின் பெரிய ப்ளஸ். ஸ்ருதி ஹரிஹரன் நல்ல தேர்வு.

"நீ தான் செக்ஸ்க்கு கூப்பிட்ட, இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்ல, வேணாம்னு தோணுச்சுனா சொல்லிடு" என்றவனிடம், மூச்சை இழுத்தபடி "let's go home" என்று வீட்டிற்குக் கூட்டிச்செல்கையில், அவள் தலையைத் வருடிவிடத் தோன்றுகிறது.

"But why sex is so important?" என்று கேட்கலாம்.

அதைத்தான் அவர்களும் சொல்கிறார்கள், "its just a sex".

Movie name: Nathicharami (2018)

'Emotionally connect' என்பதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் மன உளைச்சலை மிக அழகாய் சொல்லியிருக்கும் திரைப்படம்.