Breaking News :

Friday, April 26
.

வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர்


நமது மூளை வலப்பகுதி,இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இடப்பக்க மூளை, உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை, உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இதையே நம் பிங்கலை, இடங்கலை,நாடிகள் என வரையறுக்கிறது. 

உடலின் செயல் வலது ,இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.

உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும்.

அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.

நாடி சாத்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம். 

இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள்

இனி கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள்.

விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும்.

வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். 

வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

விநாயகர் விக்ரஹத்தின் இந்த அரிய இரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளவும்.

வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். 

இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.

வலது நாசிக் காற்று சூரிய கலை

* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.

* வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.

* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.

* உடலின் வலிமை அதிகரிக்கும்.

* மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.

* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை)

* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.

* சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.

* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.

* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.

* மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.

* அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.

விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால் தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள். 

பிராணன் (சுவாசம்)இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அவரை வழிபடுவதன் மூலம் அரசமரம் நாளொன்றுக்கு வெளியிடும் 2400 கிலோ பிராண வாயுவை சுவாசித்தும், கருப்பை கோளாறுகளை போக்கியும் அரசமரக் காற்றினால் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியை பெறுகின்றோம்.

விநாயகரின் மகிமையை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை .
அதனால் தான் நாம் விநாயகர் ஜெயந்தி என கொண்டாடுவதில்லை. 
விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ..!

‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை குறிக்கும் வலம்புரி விநாயகர்

வலம்புரி விநாயகர் ஒரு சில குறிப்பிட்ட ஆலயங்களில் மட்டுமே வழிபட முடியும். வலம்புரி விநாயகருக்கு என்று ஓர் சிறப்பம்சம் உண்டு. இதில், தும்பிக்கையின் வளைவு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் அமைப்பை ஒத்துள்ளது. வாய் பகுதியின் வலது ஓரம் ஆரம்பித்து கன்னம், மத்தாம் தொந்தி வழியாக சுழன்று தும்பிக்கை வளைந்து இருக்கும். 

வலம்புரி சங்கை தனது தும்பிக்கையில் வலது பக்கம் வைத்திருந்ததாலும் விநாயகரை வலம்புரி விநாயகர் என்று அழைக்கின்றனர். 

வலம்புரி விநாயகர் கோவில்களில் சில மிகவும் பழமையான வரலாற்று சிறப்பு மிக்கவையாக உள்ளன.

தமிழகத்தின் பழமையான பிள்ளையார் கோவிலான பிள்ளையார்பட்டி விநாயகர் வலம்புரி விநாயகர் தான். செட்டிநாட்டு பகுதிகள் பலவற்றிலும் வலஞ்சுழி விநாயகர் ஆலயம் உள்ளன.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருவலஞ்சுழியிலும் வலம்புரி விநாயகர்களை வழிபடலாம். வலம்புரி விநாயகரை வழிபட வேண்டிய வரங்களை பெறலாம்.

வினைகளை தீர்க்கும் இடம்புரி விநாயகர்

விநாயகரின் தும்பிக்கை இடது பக்கமாக சுழித்தபடி இருப்பின் இடம்புரி விநாயகர் எனப்படுவார். பொதுவாக சிற்ப சாஸ்திரத்தில் வினை தீர்க்க கூடியவர் என கூறப்படுகிறது. மேலும், இடர்களை தீர்ப்பவர் இடம்புரி விநாயகர் என பேச்சு வழக்கில் கூறுவர். அனைத்து ஆலயங்களிலும் இடம்புரி விநாயகரே அருள் புரிவார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.