Breaking News :

Monday, May 27
.

புத்தகம்.சந்தித்ததும் சிந்தித்ததும் ஆசிரியர்.திரு.இறையன்பு


வாசிப்பை நேசிப்போம்
RM143-50-34
புத்தகம்.சந்தித்ததும் சிந்தித்ததும்
ஆசிரியர்.திரு.இறையன்பு
பதிப்பு.விஜயா
பக்கம்.278
50 கட்டுரைத் தொகுதிகள் அடங்கிய நூல் இது.இந்திய ஆட்சிப் பணியில் தமிழ் நாட்டின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றும் அதிகாரி.எழுத்தாளராக பெரும்பான்மையினரால் அறியப்பட்டவர்.கல்வியாளர்.தன்னம்பிக்கை பேச்சாளர்.2021மே 7அன்று Chief secretary ஆக தமிழக அரசால் நியமிக்கப்பட்டவர்.
        பிறந்த ஊர் சேலம்.காட்டூர்.ஆண்டு 1963.முப்பது ஆண்டுகள் பல்வேறுத் துறையில் பணியாற்றிய வித்தியாசமான,சமூக அக்கறைக் கொண்ட அதிகாரி.அதிகார மோகம் இல்லாமல் அலுவலக நடைமுறைகளை அப்படியே புகுத்தாமல் வேலை செய்பவர்களின் சுயத்தை மனதில் கொண்டு செயல்புரிவார்.எளியோர்களின் தேவைகளை முன்நிறுத்தி செயல் படுவார்.சிறந்த ஆளுமையும் பாரபட்சமற்ற தன்மையும்,நேர்மையும் அவருக்குத் துணை வந்தன.
              நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் நுட்பமான கதைகள் உள்ளன.அவர்களிடம் மனம் விட்டுப் பேசினால் நல்ல பண்புகள்,வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய அறியலாம்.இந்தக் ககட்டுரைகள் ஒவ்வொன்றிலும் நம்மை வியக்க செய்கிற,விம்ம செய்கிற, நம்மை நாமே பரிசோதனை செய்து கொள்ள தூண்டுகிற பலரை சந்திக்கிறார்.நாமாகப் படித்து கற்றவை சொற்பம்.கேட்டும் கவனித்தும் கற்றுக் கொண்டவை அதிகம்.சில நிகழ்வுகள்கைரேகை பதிக்கும்படி,சில மணலில் பதித்த சுவடுகளாக,சம்பவங்கள் கல்லில் பதித்த சுவடுகளாய் கௌரவிக்கப்படுகின்றன.
               இந்நூலில் அவர் வாழ்வில் சந்தித்த ஆண்,பெண்,அலுவலக ஊழியர்கள்,வெளிவட்டார இலக்கிய நண்பர்கள்,நீதியரசர்கள், பள்ளியில் படித்ததவர்கள்,கல்லூரியில் உடன் பயின்றவர்கள் அவர்களின் மாண்பையும் குறையையும் காண்கிறார்.பலரின் வாழ்க்கைப் பிரச்சனையைத் தீர்த்து வாழ்வில் ஒளியும்ஏற்றி வைத்துள்ளார்.
        முதலில் பெண்களைப் பற்றிப் பார்ப்போமா?
கணவனும் மனைவியும் வாக் போய் திரும்பும் போது ஒரு குறிப்பிட்ட பெண்ணிடம் மட்டும் பூ வாங்குவார் அந்தப்பெண்.காரணம் கேட்டதற்கு அந்த பூக்காரப்பெண் சிரித்துக் கொண்டே பூ தருவார்களாம்.ஒரு புன்னகையின் மதிப்பைப் பார்த்தீர்களா.கோலம் போடும் பெண்களுக்கு மூளையின் இரு அரைக்கோளங்களும் சேர்ந்து செயல்படுவதால் மூட்டு வலி ஏற்படாதாம்.நாம் வாசிப்பது புத்தகம் இல்லை.எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கைக் கருத்து.கோலத்தில் புள்ளிகள் வைப்பது,வட்டம்,கற்பனை டிசைன்கள் கணித அறிவைக் காட்டுகிறது என்கிறார்.மேலும் victim of left overs குடும்பத் தலைவிக்கு சரியான பொருத்தம் என்கிறார்.கணவன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் வீணாகலாமா.அதனால் மிச்ச மீதியை அவரேசாப்பிட்டு விடுகிறார் என புகழ்ந்து உடனேவயிறுஎன்ன குப்பைத் தொட்டியா  அது கெடலாமா.என எச்சரிக்கிறார்.ஆசிரியை கமலாட்சியை சேலம் சென்றால் மறக்காமல் பார்ப்பார்.எப்பொழுதும் இவரை வாழ்த்தும் அன்புள்ளம் கொண்டவர்.
ரயில் பயணத்தில் பெண்கள் சகஜமாக விரைவில் நட்பு பாராட்டி விடுவார்கள்.A flower is always stronger than a stone.பெண் பாதம் படப்பட பூமிக்கு பொறுமை அதிகரிக்குமாம்.Endurance என்ற ஒற்றை நூல் தான் குடும்பம் அறுந்து போகாமல் பாதுகாக்கிறது.
                      மதுரையில் நீதியரசர் நாக முத்துவிடம் ஒரு வழக்கு வந்தது.தாய் மகளைக் காணவில்லை எனப் புகார்.அந்த மகளோஎனக்கு18 வயது முடிந்து விட்டதுபிடித்தவரை மணந்து கொண்டேன்.இனி வீட்டிற்கு வரமாட்டேன்எனக் கூறுகிறாள்.நீதி மன்றமே ஆடிப்போய்விட்டது.அப்பா மாற்றுத்திறனாளி.அம்மா பிச்சை எடுத்தும் கூலி வேலை செய்தும் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தாள்.மகளின் பதிலைக் கேட்டீர்களா.திரும்ப ஊர் போக காசு இல்லை.நீதியரசர் எல்லோரிடமிருந்து ரூ30,000 வசூல் பண்ணிக்கொடுத்தார்.
இதயத்தைத் தொட்ட நிகழ்வு மட்டுமல்ல,அந்தப் பெண்கணவனை அணைத்து அழைத்துச் சென்றதுசோக கிரேக்க காவியங்களைவிஞ்சும் அவலமாக இருந்தது என்கிறார்.
தூக்கி வளர்த்தவர்களை தூக்கி எறிந்து விட்டு
ஊட்டி வளர்த்தவர்களை உதறி எறிந்து விட்டு
நேற்று பார்த்தவனுக்காக நெடுந்தூரம் போகும்
இன்றைய பலரின் பிரதிநிதி.அழகாகக் கூறுகிறார் ஆசிரியர்.
                 1985ல் ராயக்கோட்டையில் வேளாண்அலுவராக.பணியாற்றிய இடத்திற்கு அண்மையில் செல்ல நேர்ந்தது.எல்லா இடமும்  முழுமையாகமாறி இருந்தது.பச்சைப் பசேலென இளசு காய்கள் கண்ணைப்பறித்தன.ஆசிரியர் மனைவி காய் வாங்க ஆசைப்பட்டு நிறைய காய்கறிகள் வாங்கினார்.பெருந்தன்மையில் எங்களை மிஞ்ச முடியுமாஎன கடைக்காரர் பத்து ரூக்குப் பதிலாக20ரூ கொத்துமல்லிக்கட்டை ஆசிரியர் பையில் திணித்தாராம்.எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்து விட்டனர்.இருவருமே.
                     காதலுக்கு கண்ணில்லை என்பது போல்தாய்மைக்கும் கண்ணில்லை. எனலாம். வான்கோழி குஞ்சுகளிடம் அதிக பாசம் காட்டும்.அன்பு.அவை சீட்சீட் என்ற ஒலி எழுப்பும்.Polecats அதன் எதிரி.அதன் குஞ்சுகள் சீட் என்ற ஒலி எழுப்புமானால் அதனை அன்புடம் வளர்க்க ஆரம்பித்துவிடுமாம்.
        ப டிப்பு தொடர்பான அனைத்திலும் பெண்களே முன்நிற்கின்றனர்.கோவை பட்மளிப்புவிழாவில் பெண்கள் நேர்த்தியான உடையுடனும்நேச முகத்தோடு தோன்றினார்கள்.இது திருமணத்திற்கு முன்பு வரையிலா,குழந்தைப் பேறு வரையாஇல்லை கடைசி வரையா.அலுவலகப்பணி+இல்லறப்பணி கத்தி மேல் நடப்பது போன்றது.உடல் உபாதைகள் சீக்கிரம் வந்து விடும்.சிறப்பான படிப்பும் பயனற்றுப் போய்விடுகிறது.இதை நீக்க ஒரு நல்லSuggestion கூறுகிறார்அலுவலகநேரத்தைப் பாதியாகக் குறைத்தல்.சம்பளமும் பாதியே.அலுவலகம் விட்டு வீட்டிற்கு சீக்கிரம் வந்து விடலாம்.பிள்ளை,கணவர்பார்த்துக் கொள்ளலாம்.இதுFlexi-timing எனப்படும்.கணவன் கையை எல்லாவற்றிற்கும் எதிர்பார்க்கும் அவலம் இருக்காது.The one that bendsnever breaks.
மற்றுமொரு ஜோடி.பெண் இஸ்லாம் ஆண் இந்து.மடிசார் புடவையில்,சிவ புராணம் கூறிப்பழகினார் மற்றவரோஇந்துToமுஸ்லீம்.காதலிக்கும் போது கஷ்டம்திருமணம் முடிந்து பெயர்மாற்றம் கலாச்சார வேறுபாடு,உணவு,பழக்க வழக்கங்கள் பேசும் மொழிஇத்தனையும் சமன்படுத்திகுழந்தைகளின் எதிர்காலம் அனைத்தையும் நினைவில் இருத்தி நல்ல இல்லற வாழ்வை இருவரும் திறம்பட நடத்தி வருகிறார்கள்.
              Man does not live by breadalone.கூட்டுப் பண்ணையில் விளைந்த தானியங்ளைவிற்று வர சந்தை சென்றார் நம் ஆள்.கஷ்டப்பட்டு மாலைக்குள் அதை விற்று விட்டார்.மனைவிக்கு ஏதாவது வாங்கிச்  செல்ல வேண்டுமென்று விலையுயர்ந்த செருப்பு வாங்கிச் சென்றுள்ளார்.அதைப் போட்டுப் பார்த்த மனைவி அடசனியனே இந்த
க் கால் சிறிது சின்னதாக இருக்கக் கூடாதாஎன புலம்பினராம்.கணவன் மனம் புண்படக் கூடாதென்று கூறிய வார்த்தைகள்.என்ன முதிர்ச்சிபாருங்கள்.Love resides more inthe coneern than in the things.லட்சுமி இவரோடு படித்தவர் பள்ளிபிரின்ஸ்பால்,தற்போதுமாண்டிசரி ஸ்கூல் ஒன்றைநிறுவ ஆசைப்பட்டு அன்புவின் உதவி கேட்டு வந்திருந்தார்.ஆசிரியருக்கும் அதில் உடன்பாடே.மாணவர்களின் தனித் திறமையைவெளிப்படுத்தும் முயற்சி.
            எழுத்தை விட எழுதுபவர்மேன்மையாக இருக்கவேண்டும்.சூடாமணி முறையாக ஓவியம் படித்தவர்.ஆயினும் தன்னிடம் ஓவியம் விற்றவரிடம்எதுவும் கூறாமல் ஓவியம் வாங்கியவர்.Deep sea is always silent.
           நீதியரசர் சந்துரு பல கூட்டங்களில் பேசி மாணவர்களுக்கு விழிப்பபுணர்வை ஏற்படுத்தியவர்கே.எஸ்.சுப்பிரமணியம்ரயில்வேயில் ஆசிரிய வளர்ச்சி வங்கி இயக்குநர்.தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.தமிழ்இலக்கியம்,சமஸ்கிருதம் ஒரே கருத்தை தொனிக்கும் கவிதைகளை பொருளோடு தொகுத்து வழங்கியுள்ளார்.சிந்தனையாளர்.பேச்சாளர்.இவர் நூல்கள் பொக்கிஷங்களேஆங்கிலம் மட்டும்அறிந்த உலகவாசகர்களுக்கு ஜெயகாந்தன் நாவல்களை மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகப்படுத்தியவர்.ஏழை மாணவர்களை மறக்காதவர்.அன்பின் மூலம் நெறிப்படுத்துவதன் மூலம் குற்றவாளிகளை தண்டிப்பதை விட செம்மையாக,சிறப்பாக செயல்படுத்த முடியும் என்கிறார்.
         நண்பர்ஸ்டாலின் குணசேகர்கொங்குப் பகுதியில் படிப்பதை பரவலாக்கிய பரவச மனிதர்.தற்போதுபுத்தகக் கண்காட்சியில் பணி
பழைய நண்பர்களில்ஆவுடையப்பன்,மணிமொழியன் முக்கியமானவர்கள்.நிலம் வாங்கும் பேரத்தில் ஏழு பேருக்கு ஏழுலட்சம் கொடுக்க வாங்க மறுத்துவிட்டனர்.பேசிய ஒரு லட்சம் போதுமென்று.A few people are remembered both in their presence or absence.
         அரசினர் தோட்டத்தில் குடியிருந்தபோது பூனை வந்து குட்டி போடும். பூனைக் குட்டிப்போட்டால் வீட்டில் குழந்தை பிறக்கும்.முதல்பூனைக் குட்டிக்கு பூனாத்தி என்றுபெயர்.ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் கழித்து பூனை குட்டி போட்ட போதுகுழந்தை பிறந்ததுஇரண்டாவது குழந்தையும் அப்படியே.
       மனிதர்களில் சிலர் புத்தமாக இருக்கிறார்கள்.ஒரு சிலர் நூலகமாக இருக்கிறார்கள்.
        படிக்க விறுவிறுப்பு.படித்து முடித்தபின் ஒரு புதிய தெளிவு.பரிசளிப்பதற்கு ஒரு சிறந்த நூல்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.