வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு குறித்து நேற்று சட்டப்பேரவையில் பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மூலமாக எனக்கு கடிதம் வந்துள்ளது. கொரானா தொற்றை குறைப்பதற்காக இரவு பகல் பாராமல் கவனம் செலுத்தி, இப்போதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்துள்ளோம். ஆகவே, இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ஆய்வு நடத்தி ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.