Breaking News :

Friday, April 26
.

ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கு ஆதார் இருந்தா போதும்!


ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. பேருந்து, டாக்ஸி, விமானம் போன்றவற்றை விட ரயிலில் பயணம் செய்வோர் ஏராளம். தினமும் கோடிக் கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். ரயிலில் மிக வேகமாக செல்ல முடியும் என்பதோடு, டிக்கெட் செலவும் குறைவு. சௌகரியமாகவும் பயணிக்கலாம். ரயில் டிக்கெட் முன்புதிவு செய்வதும் எளிது. ஆன்லைன் மூலமாக அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஈசியா டிக்கெட் புக்கிங் செய்யலாம். அதற்கு IRCTC என்ற ஆப் உள்ளது.

IRCTC ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு இப்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. புக்கிங் தொடர்பான விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒரு மாதத்தில் ஆன்லைன் மூலமாக அதிகபட்சமாக 6 டிக்கெட் மட்டுமே புக்கிங் செய்ய முடியும். ஆனால் புதிய விதிமுறையின்படி, இனி மாதத்துக்கு 12 டிக்கெட் புக்கிங் செய்யலாம்.

இந்த வசதியைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது அதிகாரப்பூர்வ ஆதார் கார்டை IRCTC ஆப்பில் இணைத்திருக்க வேண்டும். அப்போதுதான் 12 டிக்கெட் வரை புக்கிங் செய்ய முடியும். ’My account' பிரிவில் உள்ள ‘link your aadhaar' என்ற வசதியில் நீங்கள் ஆதாரை இணைக்கலாம். ஆதார் இணைக்கப்பட்டவுடன் அது வெரிஃபை செய்யப்பட வேண்டும். ஆதார் இணைக்கப்பட்டுவிட்டால் ‘your aadhaar has been successfully verified' என்ற தகவலை நீங்கள் அதில் பார்க்கலாம்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.