Breaking News :

Friday, April 26
.

புத்தகத்தின் பெயர் பண்டாரநாயக்க கொலை


*Reading Marathon  2022-50*
*ID 22RM 246  *13/50* 
* புத்தகத்தின் பெயர்:- *பண்டாரநாயக்க கொலை *

* ஆசிரியர் :-                   *என். சரவணன் * **
* நூல் வெளியீடு .        *குமரன் புத்தக இல்லம் * *
* விலை:-               '         *375/-* (இலங்கை ரூபா) 
* பக்கம்:-                         *91*
* பெறுவதற்கு :-           *பாத்திமாபுக்ஸ், ஏறாவூர், 
                                             இலங்கை.

 நண்பர்களே,
மாற்றம் என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். அதனைத் தடுத்து நிறுத்த முடியாது. இந்த உலக மக்களின் துன்பங்களை மாற்றி அமைக்கப் பல சிந்தனையாளர்கள் வந்தாலும், அதில் ஒரு சிலரே தங்கள் சிந்தனைகளை  மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்தனர். அதிலும் இந்த உலகத்தையே ஒரு உலுப்பு உலுப்பி, அப்படியே திகைக்க வைத்தவர் என்றால் *பகவான் புத்தர்* அவரது கொள்கைகள், கோட்பாடுகள், சிந்தனைகள், எல்லாவற்றையும் இந்த மக்களுக்கு எடுத்துக் கூறும் *பிக்கு* அதாவது *சோமராம தேரர்* என்பவரின் துப்பாக்கிக்கு இரையானவர் தான் *S. W. R. D பண்டாரநாயக்க*.

 இங்கே ஆசிரியர் *என். சரவணன் அவர்கள், இக் கொலை சம்பந்தமாக ஒரு ஆய்வினை ஆவணபடுத்தியுள்ளார் என்றே சொல்லலாம். அவருடைய தேடல் மிக ஆழமாக, இதுவரை நாம் கேள்விப்பட்ட வதந்திகளுக்கு மாறாக, தனது தெளிவான கருத்துக்களை எங்கள் முன் நிறுத்துகிறார்.

கண்டிப்பாகத் தமிழ் மக்கள் வாசிக்க வேண்டிய புதினம். காரணம், மிகைப்படுத்தப்பட்ட செய்திகளுக்கும், சந்தேகங்களுக்கும் தனது உறுதியான பதிலைத் தருகிறார் ஆசிரியர் *என். சரவணன் அவர்கள்.

25.09.1959 ஆம் ஆண்டு *சோமராம தேரர் * அவர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட *பண்டாரநாயக்க* , வெறும் 3 வருடங்களே இலங்கையை ஆட்சி செய்துள்ளார். இலங்கை சுதந்திரம் அடைந்தபின் முதல்முதலாக *ஒரு அரசியல் தலைவர்* கொலை செய்யப்பட்டது *பண்டாரநாயக்க* என்றும், அதனைத் தொடர்ந்து பின் வரும் ஆண்டுகளில் பல அரசியல் கொலைகள் நடந்தேறின, அதனை நாம் காணக்கூடியதாக உள்ளது என்கிறார் ஆசிரியர்.

இங்கே ஆசிரியர் 7 சிறிய தலைப்புகளில் இப் புதினத்தை சிறப்பாக நகர்த்துகிறார்.
1* பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள்.
2* புத்த ரக்கித்த தேரர்.. பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி.
3* பண்டாரநாயக்கவைக் கொன்ற பண்டாரநாயக்கவாதிகள்.
4* இலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை.
5*பண்டாரநாயக்க கொலையில் CIA.
6*பண்டாரநாயக்கவின் வர்க்க, வம்சாவளிப் பின்புலம்.
7*அவரது காலத்தின் முக்கிய நிகழ்வுகள்.

*தூக்குத் தண்டனை இலங்கை நாட்டில் இனிக் கிடையாது * என்ற சட்டத்தினை பாரளுமன்றத்தில் 09.05.1958 அன்று கொண்டுவருகிறார் பண்டாரநாயக்க, (மரணதண்டனையொழிப்பு) அதனை நிறைவேற்றியும் விடுகிறார். ஆனால் அச்சட்டம் கொண்டுவந்தது 2 வாரங்களில் அவர் சுடப்படுகிறார். மீண்டும் *தூக்குத் தண்டனைக்கு * உயிர் கொடுக்கப்பட்டு, தேரர் தூக்கிலிடப்படுகிறார்.

நண்பர்களே, எதற்காக அவர் சுடப்பட்டார், இதன் மிக மிக்கிய புள்ளி யார்?, உண்மையில் சுட்டவருக்கு அப்படியொரு தீர்மானம் இருந்ததா? இதன் பின்னணியில், *பண்டாரநாயக்க* சுடப்படும் போது ஏதும் நோய்த் தாக்கத்தால் இறந்தாரா? இப்படியான பல கேள்விகளுக்கு ஆசிரியர் *என். சரவணன் அவர்களின் பதில்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.. வாசியுங்கள்.

*பண்டாரநாயக்கவின் கொலையை மட்டுமன்றி, அவரது *வம்சாவளி* பற்றியும் பல விரிவான தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். அத்துடன் இலங்கையைத் தன் வசம் வைத்திருக்கும் *விஜேவர்தன**குடும்பங்களையும் ஆசிரியர் குறிப்பிடத்  தவறவில்லை என்றே கூறலாம்.

 இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரும் *புத்த பிக்குகளின்* அதிகாரம் தொடர்ந்தும் (இன்றும் கூட) அரசியலிலும், பொருளாதாரத்திலும் எவ்வளவுக்குத் தங்கள் *கை* ஓங்கியிருக்கிறது என்பதனை *புத்த ரக்கித்த தேரர்* மூலமாகக் காட்டுகிறார் ஆசிரியர் *என். சரவணன்.
 இறுதியாக *சோமராம தேரர்* ருக்கு *மரணதண்டனை* நிறைவேற்றப்பட்டபோது, அவர் புத்த மதத்திலிருந்து விலகி கிறிஸ்தவ சமயத்தில் *(தூக்கில் தொங்குவதற்கு முதல்நாள்)*  *பீற்ரர்* என்ற பெயருடன் அவர் இதனை ஏற்றுக் கொண்டார், என்று ஆவணப்படுத்துகிரார்.

எதற்காக அவர் இறுதி நேரத்தில் தனது மதத்தை மாற்றினார் என்பது ஒரு புதிரான விடையமாகத்தான் உள்ளது. ஒருவேளை அவர் *புத்தரைக்* காப்பாற்ற முயற்சித்திருக்கலாம்  அல்லது, தான் ஒரு *துறவி* என்பதனையும், *பண்டாரநாயக்க * இறப்பதற்கு முன் சுட்டவரைத் தண்டிக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார்,.இதனையும் *தாண்டி* அங்குள்ள *பண்டாரநாயக்கவாதிகளின்* தொடர்ச்சியான வன்மக் குகரலுக்காக இருக்கலாம் எனத் தோன்றுகின்றது.

இதில், உலக மறைமுக கெடுபிடிகளின் தலைவராகிய *CIA* யின்  தொடர்பு இருப்பதை  *Who is Who CIA*என்ற புத்தகத்தின் மூலம் உறுதிப்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.
நண்பர்களே, சிறந்த முறையில் ஆவணப்படுத்தியுள்ள இப் புதினம், உங்களையும் ஒரு தரம் 1959 ம் ஆண்டிற்குக் கூட்டிச் செல்லும் என்று உறுதியாகக் கூறுகிறேன்.. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய *புதினம். ஆசிரியர் *என். சரவணன்* அவர்களது மற்றுமொரு படைப்பான *அறிந்தவர்களும் அறியாதவைகளும் * என்ற புதினம், பல அறியாத இலங்கைத் தகவல்களைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது..

நன்றிகள்.
பொன் விஜி - சுவிஸ்


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.