மாதுளையில் ஊட்டச்சத்துக்களான ஃபைபர் போலேட் , விட்டமின் சி , விட்டமின் கே, பொட்டாசியம் உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது.
மாதுளை முத்துக்களில் புனிசிக் ஆசிட் என்னும் சிறப்பு வாய்ந்த சத்து உள்ளதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்க்குள் வைக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை வராமல் இருக்க உதவும்.
மாதுளை பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால், நம் உடலில் உள்ள ப்ரீ ராடிக்கல்ஸை அகற்றப் பெரிதும் உதவும். எனவே நமது உடலின் செல்கள் சிதைவுறாமல் காப்பாற்றப்படுகின்றன.
மாதுளம் பழம் நினைவாற்றலும், கற்கும் திறனையும் அதிகரிக்கிறது.
குடலில் ஏற்பட்ட வீக்கங்களைக் குணப்படுத்தவும், செரிமானம் கோளாறுகள் வராமல் தடுக்கவும், வயிற்றில் ஏற்படும் புண்களை குணப்படுத்தவும் உதவி புரியும்.
மாதுளை பழங்கள் உட்கொள்வதால் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
மாதுளையில் வைட்டமின் சி, நமது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் கட்டுப்படுத்தும் மற்றும் காயங்களை குணப்படுத்தும். இளமையாக இருக்கவும் பயன்படும்.
மாதுளையில் உள்ள பாலிபீனால் ( ஆன்டிஆக்சிடென்டின்) உடல் எடையைக் குறைக்க உதவும்.
மாதுளம் பழத்தில் பாலிபீனால் மற்றும் லினோலெனிக் ஆசிட் போன்ற கொழுப்பை எரிக்கும் பொருட்கள் உள்ளதால், நமது உடலில் ஏற்படும் கொழுப்பை குறைக்கும். .
மாதுளம் பழங்களில் பொட்டாசியம் விட்டமின் சி, ஈ மற்றும் ஃபோலேட் போன்றவை விட்டமின் சி, கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் இரும்புச்சத்தைக் கிரகிக்க உதவுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு திடீரென்று உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் கூடும். நஞ்சுக்கொடியைச் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளை மாதுளையில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ரீ ராடிக்கல்களின் குறைக்கும்.
மாதுளம் பழம் உடலின் இரத்த உற்பத்திக்கு உதவுவதோடு இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்க உதவும்.
மாதுளையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவும்.
இந்தப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகளவில் உள்ளதால் தசைப் பிடிப்பு பாதிப்பு வராமல் போகும்.
கருவில் வளரும் குழந்தைகளுக்குப் போலிக் சக்து இன்றியமையாதது. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணிகளின் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க உதவும்.