Breaking News :

Friday, April 26
.

வீட்டிலே "கப் கேக்" செய்வது எப்படி?


கேக் என்றாலே சிறுவர் முதல் பெரியர் வரையிலும் அனைவருக்கும் பிடித்தமான உணவு. இதற்கு வீட்டில் மைதா மாவு, சர்க்கரை, முட்டை, ஆகியவை இருந்தாலே போதும். உடனே கப் கேக்  பல விதமாக செய்யலாம், வாங்க இந்த கேக்கை வீட்டிலே எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்...

தேவையான பொருட்கள்:-

மைதா மாவு - ஒன்றரை கப்

பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்

வெண்ணெய் - ஒரு கட்டி

சர்க்கரை - ஒரு கப்

முட்டை - 3

வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

பால் - 1 கப்

உப்பு - சிறிதளவு

செய்முறை :-

வீட்டில் இருக்கும் மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து அத்துடன்,3 முட்டைகளை உடைத்து அந்த மாவில் ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் அடித்துக் கொள்ளவும்.

பின்னர், வெண்ணிலா எசன்ஸ் கலந்ததும், சலித்த ரெடியாக உள்ள மாவு பாதியை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். பின்னர், பால் சேர்த்து கலந்து மீண்டும் மீதமுள்ள மாவு சேர்த்து கேக் மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

இக்கலவையை மஃபின் கப்களில் ஊற்றி பின்னர், ஏற்கனவே சூடு செய்த ஓவனில் 180 டிகிரி செல்சியசில் 20 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும். சுவையான வெண்ணிலா கப் கேக் தயார். ஓவன் இல்லாதவர்கள் சாதாரண குக்கரிலேயே ஒரு சில்வர் பவுலில் வைத்து ஒரு விசில் விட்டு எடுத்தால் சுவையான கேக் ரெடி...


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.