நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை பாடலுக்கு ஏற்ப பெண் குழந்தைகளை வளர்க்கவும்.

bharathiyar-kavithai-nimirtha-nannadai-nerkonda-paarvai
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை பாடலுக்கு ஏற்ப பெண் குழந்தைகளை வளர்க்கவும்.

சுயமரியாதை உணர்வுகளோடு வளரும் பெண் குழந்தைகள் தனக்குள் உள்ள  வலிமையையும் சக்தியையும் உணர்ந்து உயர்ந்து காட்டுபவர்கள்.
 
பெண் குழந்தை பருவம் முதலே ஏகப்பட்ட கட்டுப்பாட்டுக்குள் சிக்கி இதை மட்டுமே பெண்கள் செய்ய வேண்டும் என  விஷயங்களை சொல்லி வளர்க்கிறார்கள்.  
 
பெண்கள் இயல்பாகவே சுதந்திரமானவர்கள்.  சூழ்நிலை, சமுதாயம், சமூகக் கட்டமைப்பு இவர்களை முடக்கப்பட்டு விடுகின்றன.  தான் யார் எனும் உண்மையை பெண் குழந்தைகள் அறியும்  வாய்ப்பு மிக அரிதாகவே கிடைக்கிறது.

பெண்ணிடம் ‘இதை நீ செய்யாலாம் , ‘இதை நீ செய்யக் கூடாது’ என்று சொல்லிச் சொல்லியே நம்மில் பெரும்பாலானோர் நம்மிடம் உள்ள திறனைக் காணத் தவறிவிட்டோம்.

பெண்கள் உயர்ந்த குறிக்கோள்களையும் கனவுகளையும் கொண்டிருக்க வேண்டும் . ஆனால் பலர், நாம் வளர்க்கப்பட்ட விதம் காரணமாக கனவு காண கூட தவறிவிடுகிறார்கள்.

பெண்ணை காலாகாலத்தில் கல்யாணம் செய்துகொடுக்க வேண்டும்  என்கிற பந்தயத்தில் நிறைய பெண்கள்  அடையாளத்தை தொலைத்து விடுகிறார்கள்.

காதல், திருமணம் என்ற பெயரில் அவர்களின் சுதந்திரம் பறிபோகிறது.  உணர்வுகளை அங்கீகரிக்கப்பதே இல்லை.
வெற்றி பெற்ற பெண்களை காட்டி வளரும் பெண் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.   

ஆணாதிக்க சமூகத்தில் பிறந்து, கட்டுப்பாட்டுகளுடனே வளர்ந்தாலும், அவற்றை மீறி, வேலிகளைத் தாண்டி வளர்ந்து வெற்றியின் உச்சத்தை எட்டிய பெண்களை போலவே நம்   பெண் குழந்தைகளையும்  நாம் வளர்க்க முன் வரவேண்டும்.