மனித நேயமிக்க மனிதர்களாக வாழ்வோம் - மகாகவி களிதாஸ்
மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது .. சற்று தூரத்தில் ஒரு துறவி கிணற்றில் தண்ணீர் எடுத்து கொண்டிருந்தார் .. காளிதாசர் அவரைப் பார்த்து ..
" ஐயனே ,தாகமாக இருக்கிறது .. தயை கூர்ந்து .. அருந்துவதற்கு கொஞ்சம் தண்ணீர் தர இயலுமா ?"
என்று கேட்டார் ..
அதற்கு அந்த துறவி ..
"அதனாலென்ன .. தருகிறேன் .. அதற்கு முன் .. தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்களேன் ."
என்றார் ..
உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு .. இந்த துறவியிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து ..
"ஐயனே .. நான் ஒரு பயணி .."
உடனே ..
அந்த துறவி ..
"உலகில் இரண்டு பயணிகள் தான் ..
ஒருவர் சந்திரன் ..
ஒருவர் சூரியன் ..
இவர்கள் தான் ..
இரவு ,பகலென .. பயணிப்பவர்கள் .
தாங்கள் யார் ..??.."
" சரி என்னை " விருந்தினர் " என்று வைத்துக் கொள்ளுங்களேன் ."
என்றார் காளிதாசர் ..
உடனே அந்தப் துறவி ..
"உலகில் இரண்டு விருந்தினர் தான் .
ஒன்று செல்வம் .
இரண்டு இளமை .
இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து .. போகும் ..
தாங்கள் யார் ..??.."
சற்று எரிச்சலான காளிதாசர் ..
" தான் ஒரு பொறுமைசாலி "
என்றார் ..
அதற்கும் அந்த துறவி ..
" அதுவும் இரண்டு பேர்தான் .
ஒன்று பூமி.
எவ்வளவு மிதித்தாலும் .. எவர் மிதித்தாலும் தாங்கும் ..
மற்றொன்று மரம் .யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு .. மலர்களையும், காய்களையும் கனிகளையும் கொடுக்கும் ."
என்றார்.
சற்று கோபமடைந்த காளிதாசர் ..
" நான் ஒரு பிடிவாதக்காரன் .."
என்றார் ..
உடனே அந்த துறவி ..
" உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான் .
ஒன்று முடி ..
மற்றொன்று நகம் .
இந்த இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும்
பிடிவாதமாக வளரும் ."
என்றார் சிரித்தபடி .. தாகம் அதிகரிக்கவே ..
" நான் ஒரு முட்டாள் ."
என்று தன்னை கூறிக்கொண்டார் ..
புன்னகையுடன் அந்த துறவி ..
" உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான் .
ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன் .
மற்றவன் ..
அவனுக்குத் துதிபாடும் அமைச்சன் என்றார் ..
காளிதாசர் செய்வதறியாது அந்த துறவியின் காலில் விழுந்தார் .
அந்த துறவி ..
" மகனே எழுந்திரு .."
என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார் .. சாட்சாத் சிவனே அவர் முன் நின்றார் .. காளிதாசர் கைகூப்பி வணங்கியதும் ..
சிவன் தாசரைப் பார்த்து ..
" காளிதாசா,
எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ .. அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான் ..
நீ மனிதனாகவே இரு ."
என்று கூறி தண்ணீர் காளிதாசர் கையில் கொடுத்து சிவன் மறைந்தார் ..
மனித நேயமிக்க மனிதர்களாக வாழ்வோம்.