"பரமேசுவரன் சொன்ன மாதிரி இருந்தது" - காஞ்சி மகா பெரியவா

kanchi-maha-periyava
"பரமேசுவரன் சொன்ன மாதிரி இருந்தது" - காஞ்சி மகா பெரியவா

புல்லரிக்கும் இரண்டு ஸ்வாரஸ்ய சம்பவங்கள்.


பசு மாட்டுக்குத் தயிர் சாதம்,பால் கலந்த சாதம்  மற்றும்   சொப்பனத்திலே  அடிக்கடி எம  தரிசனம்

முதல் சம்பவம்-தர்மம் நுண்மையானது.
ஓர் அன்பர், "தயிர் சாதம் ரொம்ப மிஞ்சிப் போயிருந்தது. பசு மாட்டுக்குக் கொடுத்தேன் திருப்தியா சாப்பிட்டது" என்று சொன்னார்.

"பசு மாட்டுக்குத் தயிர் சாதம்,பால் கலந்த சாதம் கொடுக்கக் கூடாது. தயிர்,பாலிலேந்து கிடைக்கிறது, பால், மாட்டிலிருந்து கிடைக்கிறது."
"அபசாரம் பண்ணிட்டேன்...மன்னிக்கணும்" என்று தவித்தார், அன்பர்.

"போகட்டும், இனிமே செய்யாதே. பால்,நெய்,தயிர் சேர்ந்த அன்னத்தை நாய் போன்ற பிராணிகளுக்குப் போடலாம்; மாட்டுக்குப் போடக்கூடாது."

தர்ம சூக்ஷ்மங்களை, மனத்தில் பதியும்படி எடுத்துக் கூற, பெரியவர்களால் மட்டும்தான் முடியும்!
சம்பவம்-இரண்டு-அட்வான்ஸ் நோட்டிஸ்


ஒரு பெரியவர்,நமஸ்காரம்,செய்துவிட்டுக் கவலையோடு நின்று  கொண்டிருந்தார்.
"என்ன-ன்னு கேளுடா..."
சிஷ்யர் போய்க் கேட்டார்.

"சொப்பனத்திலே அடிக்கடி எம தரிசனம், எருமை மாடு தரிசனம் ஆகிறது.பயமா இருக்கு..."
பெரியவா சொன்னார்கள்;

"இது உங்களுக்கு அட்வான்ஸ் நோட்டீஸ்! உங்க வாழ்க்கை சீக்கிரம் முடியப் போறது, இனிமேலாவது புண்ணிய காரியம் செய்து நல்ல கதியை தேடிக்கொள்" -என்ற அறிவிப்பு"
"நான் என்ன செய்யலாம்?"

"ஏதாவது பூர்த்த தர்மம் பண்ணுங்கோ,ஒரு க்ஷேத்திரத்திலே,கிடாக் கன்றுடன்,கறவை எருமை மாட்டை தானம் பண்ணுங்கோ.தினமும் சிவ தரிசனம் நித்ய கர்மா, மாத - விரதம், பாராயணம் பண்ணுங்கோ.."
முதியவரின் கவலைகள் மறைந்தன; தெளிவு ஏற்பட்டது."பரமேசுவரன் சொன்ன மாதிரி இருந்தது" என்று சிஷ்யர்களிடம் சொல்லிவிட்டுப் போனார்..

சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்