கிருஷ்ணன் ராதை காதல் திருமணத்தில் முடியாதது?

krishnan-raathai-love-marriage
கிருஷ்ணன் ராதை காதல் திருமணத்தில் முடியாதது?

கிருஷ்ணனுக்கு 8 மனைவியர் அரசிகள் மற்றும் 16,000 - 16,100 மனைவியர்கள். = 16,108 மனைவிகள் !

8 அஷ்டபர்யாக்கள் 1.அரசியர்களாகிய ருக்மணி லட்சுமியின் அவதாரம்.
2.சத்யபாமா என்ற பூமாதேவி.
3. ஜாம்பவதி என்ற நீலாதேவி.
4. காளிந்தி என்ற யமுனா நதி.
5.மித்ரவிந்தா.
6.நாக்னாஜிதி.
7.பாத்ரா.
8. லக்ஷமனா. இந்த லக்ஷமனா ராமாயண லட்சுமனன் இல்லை. பெண்.

கிருஷ்ணா த்ரேத யுக ராமனுக்கு அடுத்த யுகமான துவாரக யுகத்தில் லட்சம் வருடங்களுக்குப் பின்பு பிறந்த அரசன். பின்பு விஷ்ணு அவதாரம் என்றனர். பலவாறாக உருட்டுகள் உண்டு.

கிருஷ்ணன் நரகாசுரன் அசுரன் வசமிருந்த ஆயிரக்கணக்கான பெண்களை மீட்டு ஆயிரக்கணக்கான பெண்களை மணந்து கொண்டான். அப்படி என்றால் இவனுக்கும் நரக அசுரனுக்கும் என்ன வித்தியாசம்.

பகவத புராணம் , மகாபாரதம் கிருஷ்ணனுக்கு 16000 மனைவியர் என்கிறது. விஷ்ணுபுராணம், ஹரிவம்சபுராணம் 100 சேர்த்து 16,100 என்கிறது.  இந்த 16,100 இல் ராதை விட்டுப் போயிட்டாளா ? மிகவும் அவசியமான கேள்வி ? அதற்கப்புறம் மீரா, ஆண்டாள், விட்டுவீட்டீர்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்து எம்எஸ்எஸ் கூட கிருஷ்ணபக்தையே.

அதாவது கோபியர் கொஞ்சும் ரமணன். இந்த கோபியர் என்ற பால்கறக்கும் பெண் ராதை கீழ்சாதியாம். கிருஷ்ணர் அரசகுல மாடுமேய்க்கும் யாதவனாம். அதனால் சாதிவிட்டு கல்யாணம் முடிக்க தடை. இது ஒரு பதில்.

அடுத்து ராதை கிருஷ்ணனை விட மூத்தவளாம். இது ஒரு காரணம். அப்படியென்றால் 16,100 பெண்களின் வயதுகளைக் கணக்குப் பார்த்தா கல்யாணம் முடித்தான்.

துவாரகாவில் 16108 அரண்மனைகள் சோழனைப்போல மனைவியர்களுக்கு கிருஷ்ணன் வைத்திருந்தான். ஒவ்வொரு மனைவி வீட்டுக்கும் ஒரு நாள் ரவுண்டு அடித்தால் ஒரு சுற்றை முடிக்க 16108/365 = 50வருடங்கள் ஆகும். கிருஷ்ணன் 120 வருடங்கள் உயிர் வாழ்ந்தானாம். நீங்களே கணக்குப் போடுங்கள். ப்ராஸ்ட்ரேட் கிளாண்டு பஞ்சர் ஆகிவிடும். !

பலவாறாக புராணங்கள் பலகாலங்களில் திரித்தவை. கிருஷ்ணன் ஏன் ராதையை மணக்கவில்லை ?

கிருஷ்ணனும் ராதையும் வேறு வேறு அல்ல. ஒரே ஆன்மா. மோகினி வேறு விஷ்ணு அல்ல. ஒரு ஆன்மா. ஆகையால் கிருஷ்ணனும் ராதையும் ஒருவரே. ராதையின் காதல் தெய்வீகக் காதல் !

இஸ்கான் பண்டிதர் என்ன சொல்கிறார் ?

ராதை கிருஷ்ணனின் காதல் புனிதமான தெய்வீகக்காதல். இவர்கள் காதலின் காமத்தின் புனிதச்சின்னம். போடு அப்படி.