தர்மம், அர்த்தம், காமம், மோக்‌ஷம் ஏன்? எப்படி?

tharmam-artham-kamam-motcham
தர்மம், அர்த்தம், காமம், மோக்‌ஷம் ஏன்? எப்படி?

தர்மமன்னா நாம சம்பாதிப்பதில் ஒரு பகுதியவது தர்மம் செய்யணும்.

ஆனா தர்மம் செய்ய பொருள் வேணுமே?

அதனால தான் அர்த்தத்தை ரெண்டாவதா வெச்சாங்க. சம்பாதிப்பது. சம்பாதிக்கணும்ன்னா கல்வி வேணும் இல்லையா?

அதனால தான் இளமையில் கல்ன்னு சொன்னாங்க.
கல்வி ரெண்டு வகையில் உதவும்.

ஒண்ணு பணம் சம்பாதிப்பது, ரெண்டு மொதல்ல சொன்ன தர்மத்தை கன்னா பின்னான்னு செய்யக்கூடாது. ஆத்துல  போட்டாலும் அளந்து போடுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க இல்லையா?

இந்த சிந்தனை வரணும்ன்னா கல்வி வேணும்.
கல்வி மனித சிந்தனையை மேம்படுத்தும்.

ஆகவே முதலாவதாக சொன்ன தர்மத்தை சரியாக செய்ய இரண்டாவதா பொருள் ஈட்டுவதை வைத்து அதன் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள்.

மூணாவதா, காமம்.

காமம்ன்னா செக்ஸ் மட்டுமில்லை. நம்முடைய ஆசைகள் எல்லாத்தையும் காமத்தின் கீழ் கொண்டு வருகிறார்கள்.

அனைத்துக்கும் ஆசைப்படுவதை நம் தர்மம் தடுக்கவில்லை.

பேராசை வந்துவிடக்கூடாது என்பதில் மட்டும் மிக அக்கறையாக தர்மத்தை முதலில் வைத்தார்கள்.
தர்ம சிந்தனையுடன் இருப்பவர்களுக்கு நிறைய ஆசைகள் இருந்தாலும் அது பேராசையாக மாறாமல் அந்த சிந்தனையே தடுத்துவிடும்.

சரி எவ்வளவு நாள் ஆசைபட்டுகிட்டே இருக்க முடியும்?
அடுத்த லெவல்க்கு போகவேணாமா?

ஆயுசு மனுஷாளுக்கு கம்மி தானே?

ஆகவே ஆசப்பட்டதெல்லாம் போதும்ன்னு நாலாவதா மோக்‌ஷத்தை வைத்தார்கள்.

மோக்‌ஷம் என்றால் என்றுமே குன்றாத பேரின்ப நிலை.
இறைவனை அடைவதின் மூலம் மட்டுமே கிடைப்பது.

எல்லாத்துக்கும் ஆசைபட்ட, அனுபவிச்ச, ஆனா இனி உனக்கு இறைவனை அடைவது என்ற ஒரு ஆசை மட்டுமே இருக்கவேண்டும்.

அப்போதான் இந்த ஜென்மாவுல இல்லைன்னாலும் ஏதாவது ஒரு ஜென்மாவுல மோக்‌ஷம் கிடைக்கும்.

பகவான் கிருஷ்ணர் சொன்ன மாதிரி, ஜென்மாவுக்கு ஜென்மா, தொடர்ச்சி தானே தவிர, ஒரு ஜென்மா என்பது முடிவு கிடையாது என்ற தத்துவத்தை அனுசரித்து, மோக்‌ஷத்தை கடைசியா வெச்சாங்க.

ஒரு மனுஷனுக்கு அந்த அந்த வயசில் என்ன என்ன அனுபவிக்கணமோ, அதை தர்ம சிந்தனையோடு அனுபவித்து, பின் கடவுளை நாடி, இறைவனை அடையும் நோக்கோடு ஆன்ம முன்னேற்றத்தை குறிக்கோளாக வைத்து முயற்சி செஞ்சு ஜென்மாவை முடிக்கும் படியாக நம்முடைய வாழ்க்கையை வடிவமைத்து கொடுத்துள்ளது சனாதன தர்மம்.