ஆற்றிலே ஓர் கால் சேற்றிலே ஓர் கால் விளக்கம்?
பொதுவாக இந்த சொற்றடரை சொல்லும் காரணம் "இரண்டு குதிரைகளை ஓட்ட முயலாதே" என்பது போல இரண்டு வெவ்வேறு நிலைகளில் ஒரே சமயத்தில் காரியத்தில் இறங்காதே என்று இருக்கலாம்.
ஓடும் ஆற்றில் ஒரு கால் மட்டும் வைத்தால் அதன் வேகத்தில் வழுக்கி இழுத்து செல்லப்படலாம், அதுபோல சேற்றில் ஒரு கால் சருக்கி வழுக்கி விடலாம் என்ற பயத்தில் இருக்கலாம்.
"அயத்தில ஒரு கால், ஜெகத்துல ஒரு கால்" வைக்காதே என்பது மருவி இருக்கலாம் என்பர். அயம் என்றால் குதிரை, ஜெகம் என்றால் பூமி என பொருள் படும். குதிரை ஏறும் போது வேகமாக ஏறாவிட்டால் அது ஓட ஆரம்பித்து , சவாரி செய்பவர் திடீரென கீழே விழுந்து விடலாம் என்பதும் இருக்கலாம்.
கடைசியாக "அறத்தில் ஒரு கால் சேர்த்தலில் ஒரு கால்" வைக்க வேண்டும் என்பது மருவி இருக்கலாம். அறத்தில் ஒரு கால் என்றால் நாம் ஈட்டிய பொருளில் ஒரு கால்பங்கு தர்மத்திற்காக (அறம்) வை, பிற்காலத்துக்கு சேர்க்கும் நிதியில் ஒரு கால் வை என்று பெரியோர்கள் அறிவரையாக சொன்னது மருவி இருக்கலாம்.