மகா கவி பாரதியார் பிறந்த தினம் பகிர்வு!

maha-kavi-bharathiyar-happay-birth-day
மகா கவி பாரதியார் பிறந்த தினம் பகிர்வு!

தம் தாயைப் பற்றிப் பாரதியாருக்கு நல்ல ஞாபகம் இருந்ததில்லை. அந்த வகையில் தமது அனுபவம் நிறைந்து பூர்த்தியாக இருக்கவில்லையே என்று அவர் மனம் வருந்துவார்; அண்டை வீட்டுக் குழந்தைகளுக்கு இருந்த தாயின் சலுகை தமக்கு இருந்ததில்லையே என்று மனம் வாடுவார். தாயார் இந்த உலகத்தை விட்டுச் சீக்கிரம் அகன்றதாலேயே, பாரதியார் சாகுமளவும் குழந்தையாயிருந்து வந்தார். நேற்றைய தினம் பிறந்த பெண் குழந்தையும் பாரதியாருக்கு அம்மாதான். வயதுக் கணக்கு அவருக்குத் தொந்தரவு கொடுத்ததேயில்லை.

அம்மா, அம்மா" என்று அவர் தமது பாட்டுகளில் கூவி அழைத்திருப்பதை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்.
வீதியிலே, ஒரு குழந்தையைத் தாயில்லாப் பிள்ளை என்று எவரேனும் சுட்டிக் காட்டிவிட்டால், பாரதியார் அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்றுவிடுவார். அவர் மனதில் என்ன என்ன எண்ணங்கள் தோன்றி மறையுமோ, அவைகளை நான் யோஅறிந்ததில்லை. 'என்ன ஓய்! எனக்கு அம்மா மயக்கத்திலிருந்து ஒரு நாளும் விடுதலை இல்லையா?" என்று பக்கத்திலிருக்கும் நண்பரை வினவிவிட்டுச் சிறிது நேரத்துக்கெல்லாம், 'அம்மா, அம்மா என்று இசையில் கூவுவார். ஆகவே, கணிதத்தில் புலமை வாய்ந்த உயிருள்ள தகப்பனார், தம் பையனைக் கணித சாஸ்திரியாகச் செய்ய முடியவில்லை. மறைவிலிருந்தே தாய், பாரதியாரைக் கவியாக வளர்த்துவிட்டாள்.

- வ.ரா.எழுதிய 'மகாகவி பாரதியார்' நூலில் இருந்து...


தமது எண்ணங்களாலும், எழுத்துக்களாலும், விடுதலைக் கனல் மூட்டிய புரட்சியாளர், சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை பேசிய சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர், நம் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று.

இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் அன்றே எழுதிய தீர்க்கதரிசி. வாழ்க்கை முறைகளையும், நன்னெறிகளையும், தன் எழுத்துக்களால் சுடர்விடச் செய்தவர். பாரதம் உலகின் குருவாக விளங்க வேண்டும் என்ற மகாகவியின் கனவு இன்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் நனவாகிக் கொண்டிருப்பது, அவருக்கான அர்ப்பணிப்பாகும்.

தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரெனக் கொண்டிருந்த மகாகவி பாரதியாரின் புகழை போற்றி வணங்குகிறோம். மண் உள்ள காலம் வரை அவரது புகழ் நிலைத்திருக்கும்.


நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா - திறம்பாட வந்த மறவன் - அறம்பாட வந்த அறிஞன் - படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள் இன்று!
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காண்போம்" என
தமிழுக்குத் தொண்டுசெய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடுவோம்.


மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் இன்று இந்நாளில் நாம் அனைவரும் வீர வணக்கம் செலுத்திடுவோம்!*
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.

இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர்,பத்திரிக்கையாசிரியர்,சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர்.

தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார்.

விடுதலைப் போராட்ட காலத்தில்,இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்தக் காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் பிறந்தநாளில் கோகுல மக்கள் கட்சியின் சார்பில் மண்ணின் மானம் காக்க தியாக உணர்வோடு சபதம் ஏற்போம்....வாரீர்!

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

- பாரதியார்

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!
தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

— மகாகவி பாரதியார்

எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!

- பாரதியார்