திருக்கடையூர் அபிராமி அம்மன்
அம்பிகையை தரிசிக்க சரபோஜி மன்னர் வரு கிறார்' என்று கோயிலே பரபரத்துக் கிடந்தது. ஆனால் உலக நினைவேயின்றி சுப்ரமணிய பட்டர் அம்பிகையின் முக ஜொலிப்பில் மெய் மறந்திருந்தார்.
அவர் ஸ்ரீவித்யை உபாசனையில் ஈடுபட்டு பரா சக்தியையே எப்போதும் பூஜித்து தன் நினைவு இன்றி இருந்து வந்தார் அப்போ து தஞ்சையை ஆண்டு வந்த முதலாம் சரபோஜி மன்னர் தன் பரிவாரங்களுடன் திருக்கடையூர் வந்திருந்தார்.
அன்று தை அமாவாசை. நேர்த்திக் கடன்க ளை நிறைவேற்றிய பின்னர், மன்னர் பட்டரைப் பார்த்து விட்டு, அங்கிருந்தவர்க ளிடம் "யார் இவர்?'' என்று கேட்கிறார். "இவர் ஒரு பித்தர், ஒரு துர்தேவதையை உபாசித்து எப்போதும் இப்படியே மெய் மறந்து கிடக்கிறார்'' என்றனர்.
மன்னர் அவரைப் பரிசோதிக்க எண்ணி, "இன்று என்ன திதி?''என்று கேட்கிறார். முழு நிலவுபோல் ஒளிவீசிய அன்னையின் முக வதனம் கண்டு பட்டர் "இன்று பெளர்ணமி திதி!'' என்கிறார்.
மன்னர், "இன்று நிலவு உதயமாகவில்லை எனில், உனக்கு மரண தண்டனை!'' என்று அறிவித்து விடுகிறார்.
"தாயே, உன் நினைவில் ஆழ்ந்தே நான் இன்று பெளர்ணமி என்றேன். நீயே என்னை காப்பா ற்ற வேண்டும்!'' என்று பட்டர் அம்பாளைப் பிரார்த்தனை செய்து, ஆழமாய் ஒரு குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி தீ மூட்டினார். மேலே ஒரு விட்டமும், அதில் நூறு கயிறுகளால் உறி யையும் கட்டினார். அதில் அமர்ந்து அம்பி கை மேல் அந்தாதி பாட ஆரம்பித்தார்.
ஒவ்வொரு பாடலாய் பாடப்பாட ஒவ்வொரு கயிறாய் அறுத்துக் கொண்டே வந்தார்.
எழுபத்தி ஒன்பதாவது பாடலான "விழிக்கே அருளுண்டு...' என்ற பாடலைப் பாடும்போது அம்பிகை தோன்றுகிறாள். அவள் காது தாடங்கம் ஒன்றைக் கழற்றி வானில் எறிய, நிலவாகப் பிரகாசிக்கிறது. மன்னர் பிரமித்து, மகிழ்ந்து பட்டரைப் போற்றி, அவருக்கு இறை யிலியாக நிலங்கள் அளிக்கிறார்.
அம்பிகையின் உத்தரவின் பேரில் சுப்ரம ணிய பட்டர் நூறு அந்தாதிப் பாடல்களைப் பாடி மகிழ்கிறார். தமிழ் இலக்கியத்தில் 'அபிராமி அந்தாதி' ப் பாடல்கள் தனிச் சிறப்புடன் விளங்குகின்றன.