சென்னை வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்

vadapalani-murugan-kovil-kumbabishekam
vadapalani murugan kovil kumbabishekam

சென்னை வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் இன்றி சிறப்பாக நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பதால் குடமுழுக்கு விழா நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதற்கான யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமையன்று தொடங்கின. கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளில் இருந்தும், ராமேஸ்வரம் தீர்த்தக்கிணறு, அறுபடை முருகன் கோயில்கள் என 15 இடங்களில் இருந்தும் புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. 

ஆறு கால பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. வானத்தில் கருடன்கள் வட்டமிட்டு ஆசி வழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களான யூ-டியூப், பேஸ்புக் என அனைத்திலும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது .

Tags