ஆடிப் பூரம் வளையல் வழிபாடு!
ஆடிப் பூர நாளில், அம்பிகை நிறை வளையாம் பிகையாகப் பூவுலகில் தரிசனம் தந்தமையாலும், கையில் தேவ கங்கணங்க ளுடன் ஆண்டாள் தோன்றியமையாலும், ஆலயங்களில் இறைவிக்கு வளையல் சார்த்தி ஆற்றும் பூஜை அதியற்புத வழிபாடாகக் குடும்பத்திற்குப் பல விதங்களிலும் நல்வரங்களை அளிக்கும் அன்றோ! அன்னை பராசக்தியே நிறைவ ளையாம்பிகை எனப் பெயர் பூண்டு அருள்கின்றாளெனில் என்னே இதன் மஹிமை!
கடவுள் தரிசனங்களைப் பெற்றோர் பாடிய இறைத் துதிகள் வேத மாமறைகளைப் போல் மிகவும் சக்தி வாய்ந்தவை! இதனால்தாம் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், அருட்பா, திருமந்திரம் அனைத்துமே தமிழ்மாமறைகளாகப் போற்றப் பெறுகின்றன.
திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சிப் பாக்களை மார்கழியில் மட்டும் தான் பாட வேண்டும் என்பதில்லை! தினமுமே சூரிய உதயத்திற்கு முன் இவற்றை ஓதி வந்தால் தம் பெண் பிள்ளைகளைப் பற்றிப் பெருங் கவலையு டன் இருக்கும் தாய்மார்களின் மனச்சுமை தணிய உதவுவதை துரிதமான பலன்களாக நன்கு கண்டிடலாம்.
கன்னிப் பெண்களுக்கு, தினசரியே ஆற்றும் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சித் துதிப் பாராயணம் நல்ல பலன்களை அளித்துக் காக்கும். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவியர், பணிக்குச் செல்லும் இளம் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான ரட்சா சக்திகளைப் பெற, தினமும் விடியற் காலையில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சிப் பாக்களை ஓதி வழிபட்டு வர வேண்டும்.
கன்னிப் பெண்கள், உரிய பருவத்தில் திருமண நல்பாக்யத்தைப் பெறவும், நல்ல கணவனைப் பெற்றிடவும், தினமும் ஆண்டாள் சன்னதியில் ஸ்ரீவாதிராஜரின் மங்களாஷ்டகத் துதிகளை ஓதி, அடிப் பிரதட்சிணம் செய்து வழிபட்டு வர வேண்டும்.
வளையல்கள் ஒலிப் பூர்வமாக இறை சக்திகளை நிறையச் செய்பவை ஆதலின், அம்பிகைக்கு ஆயிரக் கணக்கில் வளையல் கள் சார்த்தி, வருடம் முழுதும் வளையல் களைப் பிரசாதமாக பக்தர்களுக்கு ஆலயங்களில், இல்லங்களிலும் அளித்து வரும் திவ்யமான சேவை, முற்காலத்தில் நிலவியமையால், அனைத்து இல்லங்களி லும், அம்பிகைக்குச் சார்த்திய வளையல் பிரசாதம் மங்கள சாதனமாகவே இல்லத்தில் எப்போதும் பொலியும்.
வளையல்களில் சூரிய, சந்திர சப்தாமிர்த சக்திகள் உண்டு. மோஹினி அவதாரத்தின் போது பெருமாளின் கங்கண வளையல்க ளில் அமிர்தம் வழிந்து திவ்யமான சுமங்கலித்வ சக்திகளை வளையல்களுக்குப் பெற்றுத் தந்தது.
தற்காலத்தில் கைக்கு ஒன்றாகத் தங்க வளையலோடு பெண்கள் நிறுத்திக் கொண்டு விடுகின்றார்கள். இது தவறு. கைகளில் வளையல்கள் நிறைந்திருந்தால் தான் குடும்பத்தில் சாந்தம் பூரிக்கும்.