தோஷங்களை அகற்றும் ஆடி பௌர்ணமி வழிபாடு!

aadi-pavurnami-poojai
தோஷங்களை அகற்றும் ஆடி பௌர்ணமி வழிபாடு!

இந்த பிறவியில் அறியாமல் பல பாவங்களை செய்து, அது தோஷமாக மாற்றம் பெற்றிருக்கும்.

அதனை ஜோதிடர்களால் கூட துல்லியமாக கணிக்க இயலாது. 
இதுபோன்ற சூட்சமமான தோஷங்களை அகற்றுவதற்கு ஆடி மாத பௌர்ணமியன்று சந்திர பகவானை வழிபட வேண்டும் .

ஆடி பௌர்ணமி தினத்தன்று நம்முடைய வீடுகளில் உள்ள மொட்டை மாடி பகுதிக்குச் சென்று, மாலை 6:00 மணி அளவில் அல்லது அதற்கு மேல் கல்கண்டு பொங்கலை தயார் செய்து, நிலவாக ஜொலிக்கும் சந்திர பகவானுக்கு படைத்து வணங்க வேண்டும். 

இதனை மேற்கொள்ளும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது குடும்ப தலைவர் அறியாமல் செய்திருக்கும் பாவங்கள் விலகி நற்பலன்கள் கிடைக்கும்.

கல்கண்டு பொங்கல் பிரசாதத்தை எம்முடைய வீட்டிலிருந்து , திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்றிருக்கும் பெண்மணியை வீட்டிற்கு வரவழைத்து, சகோதரர்கள் வழங்கவேண்டும்.அத்துடன் அவர்களுக்கு பிடித்த பொருட்களை பரிசாகவும் வழங்க வேண்டும். 

புகுந்த வீட்டில் சென்று இல்வாழ்க்கை நடத்தும் பெண்கள் தங்களது தாய் வீட்டிற்கு ஆடி பௌர்ணமி தினத்தன்று வருகை தந்து நிலவொளியில் தயாரிக்கப்பட்ட கல்கண்டு பொங்கலை சாப்பிட்டு, அந்த வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு ஆசி வழங்கினால் அந்த வீட்டில் மகாலட்சுமி தங்கி, வாசம் செய்து முன்னேற்றத்தை அருளுவாள்.

அதனால் ஆடி பௌர்ணமி வழிபாடு என்பது முக்கியமானது. ஆடி பௌர்ணமி வழிபாட்டினால் ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் விலகி அவர்களது ஆரோக்கியம் மேம்பட்டு, ஆயுள் விருத்தி அடையும். 

இதனால் ஆடி பௌர்ணமி தினத்தன்று சந்திர பகவானை வணங்கி அருள் பெறுவோம்.