ரீல் விடுற ஆட்சி இது.. தவெக அரசை விமர்சித்த இபிஎஸ்!
விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று (ஆக.14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மேகேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காவிரியில் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும் அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
இதைக் கண்டித்தும், விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார்.அதன்படி, தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு இன்று காலை 9.30 மணியளவில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கி பேசுகையில்,தேர்தல் வாக்குறுதியில் விஜய் தலைமையிலான தவெக விவசாயிகளின்பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தார்கள். ஆக இன்றும் நடைபெறும் பொதுக்கூட்டம் என்பது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதின் நோக்கம். விவசாயிகளின் கோரிக்கையும் அதுதான்.
இது குறித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவில் பெறப்பட்ட பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தவெக அரசை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் இந்த அரசு செவி சாய்க்கவில்லை. இதன் காரணமாக தான் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறோம். தற்போது உள்ள அரசாங்கம் விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகிறது விவசாயிகளை வஞ்சுக்கும் அரசாங்கமாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து வரட்சி நிலவு வருகிறது இதனால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியவில்லை.விவசாயிகள் மீது இரக்கம் காட்டி பயிர்க்கடன் தள்ளுப்படி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் 11 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து இருக்கப்பட வேண்டும். மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை என்று இன்றைய அரசு கூறுகிறது.
தவெக பொறுப்பேற்றுகிறது மக்கள் மீது கவனம் செலுத்தி இருந்து கர்நாடகத்திலிருந்து உரிய நீரை பெற்று இருக்க வேண்டும் ஆனால் அதனை செய்யவில்லை. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ரீல்ஸ் போடுவதில் அரசு தீவிரம்; நீரை பெற முயற்சிக்கவில்லை. விவசாயிகளைப் பற்றி அரசு கவலைப்படவில்லை; ரீல்ஸ், ரீல் விடுவது என காலத்தை வீணடிக்கின்றனர்.
லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நடக்கும் காவிரி படுகையில் 2 லட்சம் ஏக்கரில் பாசனம் நடக்கிறது
குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
வேளாண் பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை தவெக அரசு வெளியிடவில்லை
மேலும் விவசாயத்திற்காக தவெக அரசு மும்முனை மின்சாரத்தை உரிய முறையில் வழங்கவில்லை இதனால் விவசாயத்திற்கு நீர் பாவிச்ச முடியாமல் விவசாயிகள் தத்தளித்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.