திருப்பதிமலை மீது ஏறுவதற்கு ஸ்லோகம் உண்டா?
திருப்பது க்ஷேத்திரத்தில் அமைந்திருக்கும் {ஏழு} மலைகளே ஸ்ரீ பகவானின் ஸ்வரூபம்.
ஆகவே அதன்மீது நாம் ஏறும்போது அந்த மலைகளை கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்தித்துக் கொண்டு நமஸ்காரம் செய்துவிட்டு ஏறுவது மிக உத்தமம்.
ஸ்லோகம் –
ஸ்வர்ணா{அ}சல! மஹாபுண்ய! ஸர்வதேவ நிஷேவித!
ப்ரஹ்மாதயோ {அ}பி யம் தேவா: ஸேவந்தே ஸ்ரத்தயா ஸஹ
தம் பவந்தம் அஹம் பத்ப்யாம், ஆக்ரமேயம் நகோத்தம.!
க்ஷமஸ்வ ததகம் தேவ தயயா பாப சேதஸ:
தவம் மூர்த்த நிக்ருதா{அ}வாஸம் மாதவம் தர்சயஸ்வமே.
பொருள் –
மஹா புண்யத்தைத்தருவதாகவும், அனைத்து தேவர்களாலும் வணங்கப்பட்டதாகவும், பிரகாசிக்கும் ஸ்ரீநிவாசனுக்கு இருப்பிடமான தங்கமயமான ஹே {திரு}மலையே! ப்ரும்மா முதலான தேவர்களும் கூட ஸ்ரத்தையோடு எந்த வேங்கடமலையை ஸேவிக்கின்றார்களோ அந்த மலையரசனான உன்னை நான் கால்களால் ஏற {மிதிக்க}ப்போகின்றேன்.
அறிந்தே {காலால்மிதித்தல் என்னும்} பாபத்தை செய்யும் என்னை இரக்கத்தோடு மன்னித்து எனது பாவங்களை போக்கி உனது தலை மீது அமர்ந்து இருக்கும் {வாஸம் செய்யும்} மாதவனாகிய லக்ஷ்மீபதியை எனக்கு தர்சனம் செய்து வை. என்னும் ஸ்காந்தபுராண ஸ்லோகம் சொல்லி திருமலையின் மீது ஏறுவது உத்தமம்.
{பஸ் அல்லது மற்ற வாஹனம் மூலம் மலை ஏறும் போதும் இதை சொல்லலாம்}