போராடியவர்கள் என் குழந்தையாக இருந்தால்? – நீட் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகைகள்!

cjp-protest-against-neet-tamil-actress
போராடியவர்கள் என் குழந்தையாக இருந்தால்? – நீட் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகைகள்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. டெல்லி ஜந்தர் மந்தரில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி, ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அடக்குமுறையைக் கண்டு கொதித்தெழுந்த பிரபல தமிழ் நடிகைகள், சினிமா எல்லையை தாண்டி தாயுள்ளத்தோடு குரல் கொடுத்திருப்பது பெரும் கவனத்தை பெற்று வருகிறது..!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா தளம் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டங்களை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்..

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம்

கடந்த 3 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் வலுவடைந்துள்ளது.. அவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக டெல்லி போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசுவது, தடியடி நடத்துவது, கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் கூட சில இடங்களில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன..

இந்த போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், ஏராளமான பிரமுகர்கள், நடிகர்கள், நடிகைகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள், நேரில் சென்றும், சோஷியல் மீடியாவில் தங்களுடைய ஆதரவை பதிவிட்டும் தெரிவித்து வருகிறார்கள்..

நடிகை ரேவதி - வியப்பு

சென்னையில் நடத்தப்பட்ட போராட்டத்தில், பிரபல நடிகையும், இயக்குநருமான ரேவதி பேசும்போது, தடியடியின் போது காலில் விழுந்து அடிக்காதீர்கள் என மாணவர்கள் கெஞ்சினார்கள். அந்த வீடியோக்களையெல்லாம் பார்க்கும்போது மனம் வெதும்பியது. 16 வயது சிறுவன் ஒருவன், "நான் தவறு எதுவும் செய்யவில்லை, என் உரிமைகளுக்காகவும் டாக்டர் கனவுக்காகவுமே இங்கு நிற்கிறேன்" என்று தைரியமாக வாதிட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

முந்தைய தலைமுறையினர் பயந்து கொண்டு தட்டிக் கேட்கத் தயங்கிய பல விஷயங்களை, இன்றைய ஜென்-ஜி தலைமுறையினர் பயமுமின்றி, துணிச்சலாக கேட்கின்றனர். காவல்துறையினர் அடிக்க வரும்போது, தேசிய கீதத்தைப் பாடி அவர்களை அமைதியடைய செய்யும் அவர்களின் புத்திசாலித்தனமான அணுகுமுறை உண்மையிலேயே பாராட்டுக்குரியது" என்று நெகிழ்ந்து பேசியிருந்தார்.

அது என் குழந்தையாக இருந்தால்?

சமூக வலைதளங்களில் நேற்று பதிவிட்ட நடிகை அபிராமி, "ஜந்தர் மந்திரில் நடப்பது பற்றி என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.. பல வருடங்கள் படித்து ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் குரலுக்கு தடியடியே பதிலாக கிடைத்துள்ளது.. ஒருவேளை அது என் குழந்தையாக இருந்தால்??? உள்ளூர் போராட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்.. அனைவரும் தனது குரலை ஒலிக்க செய்யுங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.


அதுபோலவே பிரபல தமிழ் நடிகை தேவதர்தர்ஷினியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் அபேசிய தேவதர்ஷினி, "இந்த ஜெனரேஷனை பார்க்கும்போது, எனக்கு பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.. சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் காயம் அடைந்ததையும், பாதிக்கப்பட்டதையும் பார்த்தபோது, ஒரு தாயாக என் மனது துடிதுடித்துப்போனது.

எனக்கும் ஒரு குழந்தை இருக்கிறாள். அவளது பாதுகாப்பு குறித்து அச்சமும் கவலையும் எனக்கு ஏற்பட்டது பாதுகாப்பு என்பது நம்முடைய அடிப்படை உரிமை.

அதேபோல, ஒரு தேவையை அறவழியில் முன்வைக்கும் போது, அதை வீடாக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி, செவிசாய்த்துக் கேட்க வேண்டிய உரிமை நமக்கு இருக்கிறது.. அறவழியில் போராடும் அனைத்து இளைஞர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பெருமிதத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உருக்கமாக பேசியிருந்தார்.

வெளிப்பட்ட தாய்மை

நடிப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கிவிடாமல், சமூகத்தின் வலிக்கு துடிதுடித்து ஓடோடி வந்து குரல் கொடுக்கும் ரேவதி, அபிராமி, தேவதர்ஷினி போன்றோரின் இந்த எமோஷனல் வார்த்தைகள் வெறும் நடிகைகளின் குரல் மட்டுமல்ல, மாறாக, வீதியில் அடிபட்டு நிற்கும் பிள்ளைகளைக் கண்டு பதறும் ஒரு தாயின் உண்மையான வலியும் அக்கறையும்தான் அதில் வெளிப்படுகிறது.

சொந்த குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்போது துடித்துப்போகும் எந்தவொரு சராசரி தாயின் உணர்வுகளையே அவர்களின் வார்த்தைகளும் பிரதிபலிக்கின்றன. அதிகாரத்தின் அடக்குமுறைகளுக்கு மத்தியில், மாணவர்களின் அறவழி போராட்டத்திற்கு இந்த தாய்களின் ஆதரவு பெரும் பலமாக இன்று மாறியுள்ளது....!!!! அதேநேரம், நீட் கற்றுக்கொடுப்பதில் சிறப்பாக செயல்படும் கல்லூரி என்று, ஒரு காலேஜ் விளம்பரத்தில் இதே தேவதர்ஷினி நடித்திருந்ததை நெட்டிசன்கள் வெளியிட்டு கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.