பெருமாள் கோயில் தீர்த்தப் பொடி: தீர்த்த பரிமளம்:

perumal-temple-tirtha-podi-tirtha-parimalam
Perumal Temple Tirtha Podi: Tirtha Parimalam

புனித தீர்த்தம் நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து
1 – ஏலம்,
2 – இலவங்கம், 
3 – வால்மிளகு, 
4 – ஜாதிப்பத்திரி,
5 – பச்சைக் கற்பூரம் 

இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.

முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தை யும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பதனம் செய்து பூஜை அறையில் வைக்கலாம். 

இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும். 

சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து் ,. வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம். இருதயம், இரைப்பை பலம் பெரும், கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும்,

 நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .

இது நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட, அனுபவத்தில் கை கண்ட அரிய சஞ்சீவி மருந்து ஆகும்.

Tags