ஓம் ஶ்ரீ சாய் ராம் சத்குருவாணி - 25
ஓம் ஶ்ரீ சாய் ராம்
(ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவின் அருள்வாக்கு)
நான் ஒரு விஷயம் சொல்கிறேன். நிதானமாகக் கேளுங்கள். லோபம் (பொருள், சொத்து), டாம்பீகம் (ஆடம்பரம்), மனஅழுக்கு, கபடம், அசத்தியம் முதலியன யாரிடம் இருக்கின்றனவோ, அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இடத்திற்கு நான் போகமாட்டேன்.
அப்படிப்பட்டவர்கள் என் தரிசனம் பெற்றா லும், அவர்களுக்குக் கிடைக்கும் பலன் தாமரை இலை மீது நீர்த்திவலை போன்ற தே. அவைகளை வெளியேற்றிய மறுநிமி டமே அவர்கள் என் அனுக்கிரகத்தை பெறு வார்கள். அஷ்டோபசார, ஷோடோபசார பூஜைகளுக்கு நான் கட்டுப்படுபவன் அல்ல.
யார் என்பால் விருப்பமும், ஆர்வமும் கொண்டு விளங்குவார்களோ, யார் என் மீது எப்போதும் அன்பு செலுத்துவார்களோ, அவர்களின் யோக ஷேமங்களையும், பாரத்தையும் நானே வகிக்கிறேன்.
அவர்களுக்கு என்னைத் தவிர வேறு யாரும் தென்படுவதில்லை. எனக்கும் அவர்களைத் தவிர்த்து வேறு யாரும் இல்லை. ருணானுபந்தத்தால் நாம் சந்திக்க நேர்ந்துள்ளது.
இந்த பந்தம் நிரந்தரமாக இருக்கவேண்டு மானால் வேறுமார்க்கமில்லை, நீங்கள் என்னைப் பரிபூரணமாக நம்புங்கள். ஒளிவு, மறைவு, விளையாட்டுக்கள் என்னிடம் வேண்டாம்.
எண்ணெய்பட்ட தரையின்மேல் தண்ணீர் ஒட்டாததுபோல், நான் அழுக்காறு உள்ள இடத்தில் இருக்கமாட்டேன். யாருடைய இதயக் கதவுகள் எனக்காகத் திறந்துள்ள னவோ, அவர்களுடைய இதயத்தில் நானே இருப்பேன்.
என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வை..
ஓம் ஶ்ரீ சாய் ராம்...
நேசமுடன் விஜயராகவன்...