நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை - அதிரடி காட்டிய ஐகோர்ட்!.
திருக்கடையூர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
மயிலாடுதுறை அருகேயுள்ள திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த திருக்கோயிலுக்கு கடந்த மாதம் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். மேலும் கோ பூஜை, கஜ பூஜையிலும் கலந்து கொண்ட அவர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன், விநாயகர், காலசம்ஹாரமூர்த்தி, அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தும் வழிபட்டார்.
அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் அபிராமி சாமி படம் மற்றும் கோயில் பிரசாதம் வழங்கினார். முன்னதாக கட்சிப் பிரமுகர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர்.