எமபயம் நீக்கும் அற்புத முருகன் கோவில்
அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகளால் புகழ்ந்து பாடல் பெற்ற முருகன் கோவில். #பெரும்பேர் கண்டிகை என்ற இடத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில். முதலில் இந்த ஆலயம் எங்குள்ளது,
எப்படி செல்லலாம் என்று பார்க்கலாம். இந்த ஆலயமானது தொழுப்பேட்டியில் இருந்து 2.5கிமீ, அச்சரப்பாக்கத்தில் இருந்து 8km, மேல்மருவத்தூரில் இருந்து 12km தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இப்பொழுது இந்த கோயிலோட வரலாறு மற்றும் சிறப்புகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். பெரம்பூர் #கண்டிகை கிராமத்தில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட அதிகமான பழமை வாய்ந்த கோயில்கள் இருக்கிறது. இங்குள்ள எல்லையம்மன் கோவில் ஊருக்கு முதலில் நுழைந்ததுமே நமக்குக் காண முடியும்.
1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ரேணுகாம்பாள் எல்லையம்மன் கோவில் தமிழகம் எங்கும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறது. இதே ஆலயத்தில் தலை விரிசமாக பிரம்மாண்ட வேப்ப மரம் உள்ளது. இது 1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள். மற்றும் இதே கிராமத்தில் 5000 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வர சிவகோயிலும், இந்த தலத்தில் ஞானகுருவாக முருகப்பெருமான் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். ஆறுமுகக் கடவுளை அருணகிரிநாதர், #பாம்பன்சுவாமிகள் புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளனர். முருகப்பெருமானின் திருவுருவத்திற்கு முன்பாக சத்ரு சமார எந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. முருகனுக்கு முன் இருக்கும் வேலுக்கு சக்தி வேலாயுதம் என்று பெயர். வேலாயுதம் அம்பாளின் அம்சமாகவே இங்கு வழிபடப்படுகிறது.
வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு மட்டும் வேலாயுதத்துக்கு சிறப்பு வழிபாடாக இருபத்தஞ்சு மூல நக்ஷத்திர பீஜாசார அர்ச்சனை செய்யப்படுகிறது. எந்திரம் மற்றும் சக்தி வேலுக்கும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் பிரம்மதேவர் முருகப் பெருமானை வழிபடுகிறார் என்பதை உணர்த்தும் விதமாக சக்தி வேலுக்கு அருகில் ஓர் அன்னப்பறவை காணப்படுகிறது. மற்றும் இந்த ஆலயத்தில் சத்ரு சமார எந்திர யோகம், சத்ரு சமார திரிசதி யோகம் ஆகியவை செய்யப்படுகின்றன. இவற்றைச் செய்யும்போது எமபயம் நீங்கும், நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், கல்வி ஞானம் பெருகும், சித்த சுவாதினம் தெளிவடையும், சத்ருக்களின் தொல்லைகள் விலகும். பௌர்ணமி தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவது மிகவும் விசேஷம். முன்னொரு காலத்தில் முத்துசாமி என்ற நபர் இந்தக் கிராமத்திற்கு வந்தார். அவர் ஒரு மலையில் தினமும் அமர்ந்திருக்கும் ஒரு சன்னியாசியைக் கண்டார்.
அவர் எப்போதும் திருப்புகழ், திருவாசகம், தேவாரம் போன்றவற்றை பாடிக்கொண்டே இருப்பதை கண்டறிந்தார். ஆனால் சில நாட்களாக சன்னியாசி இங்கு வராததால் முத்துசாமி மலையில் சன்னியாசியைத் தேடினார். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக சன்னியாசி அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு வேல் கண்டுபிடிக்கப்பட்டது. முத்துசாமி வேலுக்கு பூஜைகளைச் செய்யத் தொடங்கினார். பின்னர் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலை அகஸ்திய முனிவர், தும்பி முனிவர் மற்றும் சுகர் முனிவர் ஆகியோர் வழிபட்டதாக நம்பப்படுகிறது.
சண்முகநாத சுவாமிகள், கிருபானந்த வாரியார், பாம்பன் சுவாமிகள் மற்றும் விளாங்காடு துரைசாமி பிள்ளை ஆகியோரும் இந்தக் கோயிலை வழிபட்டுள்ளனர். திருச்செந்தூரில் சூரசமாரத்திற்கு பிறகு திருத்தணி செல்லும் வழியில் ஆறுமுகரும், வள்ளி, தேவசனாவும் தங்கி இருந்த முதல் கோயில் இது என நம்பப்படுகிறது. இப்பொழுது இந்த ஆலயத்தோட அமைப்பை பத்தி பார்க்கலாம். மலை மீது வந்ததும் மிக உயரமான வேல் நம்மை அழகாக வரவேற்கிறது. மயில் வாகனம், அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் அர்த்த மண்டபத்தில் உள்ளனர். மூலவர் ஆறுமுகர் ஆறு தலைகள் மற்றும் பன்னிரண்டு கைகளுடன் மயில் வாகனத்தில் இருக்கிறார். இந்த சக்தி வாய்ந்த பழமை வாய்ந்த முருகன் கோயிலை நீங்களும் வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சென்று தரிசனம் செய்யுங்கள்.