திருப்பதி ஏழுமலையான் சிலைக்கு பின்னால் ஏழு மர்மங்கள்?

tiruppati-ezhumalaiyan-secrets
திருப்பதி ஏழுமலையான் சிலைக்கு பின்னால் ஏழு மர்மங்கள்?

கருவரை எவ்வளவு குளிர்ச்சியாக இருந்தாலும் ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரிஃபாரன்ஹீட் வெப்பத்திலேயே இருக்கும் சிலையின் மேல் வடியும் வியர்வையை அர்ச்சகர்கள் துடைத்துக் கொண்டே இருப்பார்கள் பொதுவாக பச்சை கற்பூரம் கருங்களை சிதைக்கும் தன்மை கொண்டது ஆனால் தினமும் சாத்தப்பட்டும் இந்த சிலை பல நூற்றாண்டுகளாக சிதையாமல் இருப்பது ஒரு மிகப்பெரிய அதிசயம்.

சிலையின் பின்னால் காது வைத்து கேட்டால் ஆர்பரிக்கும் கடல் அலைகளின் ஓசை இன்றும் கேட்கிறது அந்த சிலையில் இருக்கும் தலைமுடி கல்லால் செதுக்கப்பட்டது அல்ல அது நிஜமான மனித தலைமுடி போலவே மென்மையாக இருக்கும் இதற்கு பின்னால் நீலாதேவியின் தியாக கதை இருக்கிறது அதுமட்டுமல்ல அங்கே எரியும் தீபங்கள் பல 100 ஆண்டுகளாக அணையாமல் இருக்கின்றன.

அவருக்கு சாத்தப்படும் பூக்கள் வாடாமல் 20 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் நீர்நிலைகளில் கண்டெடுக்கப்படுகின்றன மேலும் ஏழுமலையான் சிலை நடுவில் இருப்பது போல தெரிந்தாலும் உண்மையில் அது கருவரையின் வலதுபுற ஓரத்தில் தான் இருக்கிறது.