தேய்பிறை அஷ்டமி திரியம்பகாஷ்டமி!

astami-theipirai-kalabairavar-poojai
தேய்பிறை அஷ்டமி திரியம்பகாஷ்டமி!

பைரவரை வணங்கி அன்னதானம் செய்யுங்க..

பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை திரியம்பகாஷ்டமி என்று கூறுவர். இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், அன்ன தானம் செய்து சொர்ண ஆகர்ஷ பைரவரை வழிபட்டு அவரின் அருளாசியை பெறுவது அவசியமாகும்.

அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் திரும ணம் கிரகப்பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள் ளனர். ஆனால், இந்த திதிகள் தெய்வீக காரியங்களுக்கு தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை உகந்தவை.

தேய்பிறை அஷ்டமி திதியில் மகாதேவர் என்கிற சிவபெருமான் பைரவர் அவதாரம் எடுத்து பூமிக்குவந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும் வேண்டும் என் று ஆயுளையும், அழிவில்லா பொருளையு ம், ஆன்ம சாந்தியையும் தரும் சனிதேவர் பணிந்தார்.

பைரவருக்கு தீபம்

ஸ்ரீபைரவருக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி திதிக்கு பின்பு வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், செய்யும் தொழிலில் வளர்ச்சி காணவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வச் செழிப்போடு வாழவும், தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.

தேய்பிறை அஷ்டமி

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரண்டு தடவை அஷ்டமி திதி வந்தாலும், தேய்பிறை அஷ்டமி திதி யே பைரவருக்கு மிகவும் உகந்ததாகும்.

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை ஏன் வணங்க வேண்டும் என்றால், அஷ்ட லட்சு மிகளும் அஷ்டமி அன்றுதான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தி யை பெற்று மக்களுக்கு செல்வங்களை வாரி வழங்கி வருகின்றனர் என்பது ஆன் றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.

குழந்தை பாக்கியம்

பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை திரியம்பகாஷ்டமி என்று கூறுவர். இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

இன்று பங்குனி மாத திரியம்பகாஷ்டமி தினம் என்பதால், நீண்ட நாட்களாக குழந் தை பாக்கியம் இல்லாதவர்கள், அன்ன தானம் செய்து சொர்ண ஆகர்ஷ பைரவ ரை வழிபட்டு அவரின் அருளாசியை பெறு வது அவசியமாகும். நாமும் அதுபோல் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசி கிடைப் பதோடு, பைரவரின் பூரண ஆசிகளும் வரங்களும் ஒரே சமயத்தில் கிடைத்து விடும்.

ராகு கால வழிபாடு

தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ ரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடை க்கும்.

மேலும், நமது ஏழு ஜென்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களின் பாவ வினைகள் தீரத் துவங்கும். அப்படி பாவ வினைகள் தீரத் துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.

கடன் தீரும்
தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வணங்குவதால் நீண்ட நாட்களாக வராம ல் நிலுவையில் உள்ள வரவேண்டிய பண ம் வந்துவிடும்.

அதேபோல், நாம் யாருக்காவது தரவேண் டிய கடன் இருந்தால் அந்த ப் பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்கும் நிலை உருவாகிவிடும். எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

நோய்கள் நீங்கும்
வயதானவர்களுக்கு நோயினால் உண்டா ன உபாதைகள் தீரும். வலியும், வேதனை யும் பெருமளவு குறையும். சனி பகவானி ன் கொடூர பார்வையின் தாக்கம் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சம்பள உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக் கொண்டே செல்லும். பணம் சார்ந்த பிரச்சனைக ளும் தீர்ந்துவிடும்.

ஓம் ஸ்ரீ காலபைரவா போற்றி...
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!