60 ஆண்டுகளுக்கு ஒரு முறை சக்தி பெறும் அதிசய பெருமாள்!
திருக்கடித்தானம் அற்புத நாராயணன் தகோயிலில் வட்ட வடிவமான ஒரே கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள்.
தூய்மையான மனத்துடன் இறைவனை நினைத்து இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால், எடுத்த காரியத்தில் வெற்றியும், மோட்சமும் கிட்டும் என்பது ஐதீகம்.
இத்தல பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடும் என்றும் கூறுகிறார்கள்.
இந்த பெருமாளை ருக்மாங்கதன் மற்றும் தேவர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
முகவரி:
அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம் 686 105 கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
போன்: +91 481244 8455
இருப்பிடம்:
கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து[21கி.மீ.) திருவல்லா செல்லும் வழியில் செங்கணாச்சேரியில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ. ஆட்டோவில் செல்ல வேண்டும்.