முதுகில் காட்சி தரும் நரசிம்மர் - பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்

sri-prasanna-venkatesa-perumal-koil
முதுகில் காட்சி தரும் நரசிம்மர் - பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்

உடல் முழுவதும் நவகிரகங்கள்... முதுகில் காட்சி தரும் நரசிம்மர்... எங்கும் காணாத அதிசய விநாயகர்.

விநாயகர் என்றாலே விக்னங்களை தீர்ப்பவர் என்று நமக்குத் தெரியும். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் அமிர்தபுரியில் வீற்றிருக்கும் விநாயகர் மிக மிக விசேஷமானவர். உலகிலேயே எங்கும் காணக் கிடைக்காத சில அபூர்வ ஆன்மீக ரகசியங்கள் இக்கோயிலில் ஒளிந்துள்ளன!
உடல் முழுவதும் நவகிரகங்கள்!

பொதுவாக நவக்கிரக தோஷம் நீங்க நாம் நவக்கிரக சன்னதியைத் தேடிச் செல்வோம். ஆனால், இத்தலத்து விநாயகர் 'நவக்கிரக வரசித்தி விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். இவரது திருமேனியிலேயே ஒன்பது கிரகங்களும் சூட்சுமமாக அடங்கியுள்ளன.

உங்கள் ஜாதகத்தில் எந்த கிரக தோஷம் இருந்தாலும், பிறந்த நேரம் அல்லது நட்சத்திரம் சரியாகத் தெரியாவிட்டாலும் கவலையில்லை இந்த ஒரு விநாயகரைச் சரணடைந்தால், நவக்கிரகங்களின் அருளால் அனைத்து தோஷங்களும் நீங்கி, எடுத்த காரியங்கள் வெற்றியாகும் என்பது ஐதீகம்.

முதுகில் காட்சி தரும் நரசிம்மர் :
சைவத்திற்கும் வைணவத்திற்கும் பாலம் அமைக்கும் ஒரு உன்னத காட்சி இங்கே அரங்கேறுகிறது.
பொதுவாக சக்கரத்தாழ்வார் பின்னால் தான் நரசிம்மர் இருப்பார். ஆனால் இத்தலத்தின் மகா அதிசயம் என்னவென்றால், விநாயகரின் முதுகில் ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்த நிலையில் யோக நரசிம்மர் திருக்காட்சி தருகிறார்!

சிவனின் புதல்வனும், திருமாலின் அவதாரமும் ஒரே திருமேனியில் இணைந்திருப்பது, "அரியும் சிவனும் ஒன்று" என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்துகிறது. இந்த அமைப்பைத் தரிசிப்பவர்களுக்கு மனவலிமையும், பயமில்லாத வாழ்வும் கிட்டும்.

நீல நிறமாகும் பால் அதிசயம்:
இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரைச் சுற்றி நவநாகங்கள் உள்ளன. அவரது திருக்கரத்தில் உள்ள வாசுகி பாம்பிற்கு பால் அபிஷேகம் செய்யும் போது, அந்தப் பால் நீல நிறமாக மாறுவது இன்றும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் பெரும் அதிசயமாகக் கருதப்படுகிறது.

பரிகாரம் :
கால சர்ப்ப தோஷம் மற்றும் நாக தோஷங்கள் நீங்க...
தடைபட்ட சுபகாரியங்கள் கைகூட...
வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாக...
கல்வியிலும், வழக்குகளிலும் வெற்றி பெற்றிட...

அமைவிடம்: அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், அமிர்தபுரி, செங்கல்பட்டு (அருகில்), காஞ்சிபுரம் மாவட்டம்.

நவகிரக விநாயகரின் அருளும், நரசிம்மரின் பாதுகாப்பும் அனைவருக்கும் கிடைக்கட்டும்