மனித முகத்தில் விநாயகர் அருகில் முருகர் திருக்கோயில் அதிசயங்கள்!
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமாகாளம் மகாகாளநாதர் திருக்கோயில், ஆன்மீக அதிசயங்களின் சங்கமம்! பொதுவாக நாம் விநாயகரை யானை முகத்துடன் தான் தரிசித்திருப்போம். ஆனால், இத்தலத்தின் மிகமுக்கிய அதிசயம் "ஆதி மனிதமுக விநாயகர்".
இந்த கோயிலின் டாப் 5 அதிசயங்கள்:
மனித முக விநாயகர்: சோமாசிமாற நாயனார் நடத்திய யாகத்திற்காக, விநாயகர் தும்பிக்கை இல்லாமல் மனித முகத்துடன் காட்சி தந்து அருளிய தலம் இது. இன்றும் அதே அபூர்வ கோலத்தில் நாம் அவரை தரிசிக்கலாம்.
ஆதி ஸ்கந்தர்: விநாயகரைப் போலவே, முருகப்பெருமானும் இங்கு மிகத் தொன்மையான "ஆதி ஸ்கந்தர்" வடிவில் எழுந்தருளியுள்ளார்.
காளி வழிபட்ட ஈசன்: அம்பன், அம்பாசூரன் என்ற அசுரர்களை வதம் செய்த பின் காளி தேவி தன் தோஷம் நீங்க வழிபட்ட தலம். அதனால் தான் இவருக்கு "மகாகாளநாதர்" என்று பெயர்.
மோட்ச லிங்கம்: மரண பயம் உள்ளவர்களும், தீவிர உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்களும் இங்குள்ள மோட்ச லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.
அச்சம் தவிர்த்த நாயகி: பயக்ஷர்ம்பிகை அம்மன்! பயத்தைப் போக்கி பக்தர்களுக்கு அபயம் அளிக்கும் அன்னை. திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு அம்மனுக்கு மாலை சாத்தி வழிபட்டால் விரைவில் நல்ல செய்தி தேடி வரும்.