அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி
நற்றுணையாவது நமசிவாயவே
பாடல் :
படைப்புந்நிலை இறுதிப்பயன்
பருமையொடு நேர்மை
கிடைப்பல்கணம் உடையான்கிறி
பூதப்படை யான்ஊர்
புடைப்பாளையின் கமுகின்னொடு
புன்னைமலர் நாற்றம்
விடைத்தேவரு தென்றல்மிகு
வேணுபுரம் அதுவே.
திருச்சிற்றம்பலம்
தெளிவுரை
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலும் புரிபவனாய், அதன் பயனாகிய முத்திப் பேற்றினை நல்குபவனாய், விளக்கமாகவும் நீதி நெறிகளைச் செம்மையாக வடிக்கும் வேதத்தை ஓதும் சிவகணங்களை உடையவனாய், பூதப் படை உடையவனாய் விளங்கும் பெருமானுடைய ஊரானது, பாக்கு மரங்களும் புன்னை மலரின் மணமும் மிகுந்து தென்றலாகிய இனிமை பொருந்திய வேணுபுரம் ஆகும்.
திருவேணுபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்.