கும்பகோணம் அபிமுகேஸர் திருக்கோயில்!
அபிமுகேசர் ஆலயம் துலாம் ராசிக்கு உரிய தலம்.
சுயம்புவாக சிவலிங்கமாக கிழக்கு நோக்கி இருந்தார்.
நவ நதியாகிய கன்னியர்கள் மகாமக தீர்த்த குளத்தில் தங்கள் பாவங்களை தொலைக்க
ஸ்ரீ சிவபெருமான் அழைத்து வந்து நீராடிய போது அவர்கள் அபிமுகசரரை தங்கள் பாவம் போக்க வேண்ட, அவர்களுக்கு அருள, கிழக்கு முகமாக இருந்தவர் மேற்கு நோக்கி முகத்தை மாற்றி மகாமக குளத்தை நோக்கி அமருகிறார். அதனால் அபிமுகேசர் ஆனார்.
அபிமுகேசர் என்றால் நேர் முகம் என அர்த்தம்.
இந்த தலத்தின் தல விருட்சம் தென்னை, நெல்லி மரம்.
இத்தல இறைவனை வணங்கி நெல்லிகாயை இறைவனுக்கு சமர்பித்து பூஜைகள் செய்து அதனை தானமாக தர வியாதிகள் நீங்கும்.

இந்த தலம் நோய் தீர்க்கும் தலமாக உள்ளது.
காஷ்மீரில் வாழ்ந்தவர்கள்
சுதபன்
சீலவதி.
இவர்களின் மகள் சுமதி.
சிறிய வயதிலேயே சுமதிக்கு தொழுநோய் வந்தது.
தங்களது மகளின் ஊழ்வினையால் தொழுநோய் வந்ததை அறிந்த அவரது பெற்றோர் சுதபன், சீலவதி கடும் தவம் மேற்கொண்டனர்.
தவத்தை மெச்சிய பிரம்மா
நேரில் காட்சி தந்து, குடமூக்கு எனும்
கும்பகோணம் சென்று மகாமக குளத்தில் நீராடி அபிமுகேஸ்வரரை வழிபட்டால் உனது மகளின் தொழுநோய் குணமாகும் என்றார்.
கும்பகோணம் வந்த
சுதபன்
சீலவதி,
சுமதி மகாமககுளத்தில் நீராடி தினம் அபிமுகேஸ்வரரை வழிபட்டு வந்தனர்.
சில நாட்களில் சுமதியின் தொழுநோய் நீங்கியது.
சுமதிக்கு தகுந்த மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்வித்து
மகிழ்ந்த சுதபன்
சீலவதி
இறைவனின் திருவடியை அடைந்தனர்.
மச்சதேசத்து மன்னர் ஒருவரின் மகன் ஊமையாக இருந்தார்.
அந்த இளவரசரின் ஊமையை மகாமகத்தன்று அபிமுகேஸ்வரர் நீக்கி அவரை பேச வைத்த தலம் இது.