பிறழ்வு - சிறுகதை

pirazhvu-short-story
பிறழ்வு - சிறுகதை

அந்த அடுக்குமாடிக்கட்டிடத்தில் 12வது மாடியில் வீட்டுக்கு வெளியே நின்று அவன் கத்திக்கொண்டிருந்தான். ப்ளீஸ் கதவைத் தொறடி வெளிய நிக்க அசிங்கமா இருக்குடி   . எதுனாலும் நீ சொல்றதைக்கேட்குறண்டி கதவை மட்டும்தொறடி வீட்டுக்குள்ள வந்துரு றண்டி  எல்லாரும் என்னையே பாக்குறாங்கடி கதவைத்தொறடிஇந்தஅர்த்தராத்திரிலவெளியே எங்கயும் போகமுடியாதுடி  பர்ஸ் கூடஇல்ல டி காசும் இல்லடி பசிக்குதுடி  கதவைதொறடி ப்ளீஸ்ன்னு கதவுல முட்டிக்கிட்டு இருந்தான்...

ஆனா உள்ள இருந்து ஒரு ரியாக்சனும் இல்ல. கொஞ்சநேரத்துல மிரட்ட ஆரம்பிச்சான். நீ கதவைத்தொறக்கலைன்னா இங்க இருந்து குதிச்சி செத்துப்போயிருவேண்டி அப்புறம் நீ தான் கஸ்ட்டப்படனும்  கடைசியா சொல்லிட் டேன் இதோ குதிக்கப்போறேன்னு கத்திக்கிட்டு இருந்தான் கீழ இருந்து வாச்மேன் நிமிந்து பாத்துட்டு இது வழக்கம்தான்ற மாதிரி உள்ளாற போய் ஒக்காந்துக்கிட்டான்..

வீட்டுக்குள்ள அவளும் முழிச்சிட்டுத்தான் இருந்தா. அவளும் அவளோட ஒரே மகளும் பாத்துட்டேதான் இருந்தாங்க. அப்ப அவ சொன்னா நான் திறக்கட்டுமான்னு.அதுக்கு அவளோட மகள் சொன்னாள்  வேணாம்மா  வெளிய ராத்திரிப்பூராம்கெடக்கட்டும் அப்பயாவது புத்திவருதான்னு பாப்போம்னு சொன்னா... 

அந்த மனநல மருத்துவர் முன்னாடி  அவ ஒக்காந்திருந்தா.பக்கத்துல அவளோட மகளும் இருந்தா, அவர் கேட்டுக்கிட்டு இருந்தார் சொல்லும்மா என்னதான் உன் பிரச்சனைனு.. அதுக்கு அவ சொன்னா எனக்குப்பிரச்சனை என் புருசந்தான்.   எப்பப்பாத்தாலும் சண்டைதான். ரெண்டுமூனுநாள் பேசாமக்கூட இருப்பாரு.. எல்லாம் மகமூலமா இல்ல எழுதிக்காமிச்சித்தான் எல்லாம் நடக்கும். சண்டையின் உச்சம் நான் பொண்ணுன்னுகூட பாக்காம அர்த்தராத்திரியில  12வதுமாடில வெளிய தள்ளி கதவைப்பூட்டிக்கிறாரு..  நான் அழுதாலும் கெஞ்சினாலும் மிரட்டினாலும் அவர் கதவைதொறக்கிறதில்ல.
நான் ஒரு பொண்ணு அந்த நேரத்துல வெளிய எங்க போகமுடியும். என்ன பண்ணமுடியும் என்னத்தள்ளினதுகூடப்பரவாயில்ல. எங்க மகளையும் வெளியதள்ளிக்கதவைச்சாத்திட்டு தொறக்கமாட்டேன்னு அடம்பிடிக்கிறாரு.. ரொம்பநேரம் கழிச்சி அழுது ஓஞ்சபின்னாடி எங்க ரெண்டுபேரையும் முட்டிபோட்டு கெஞ்சச்சொல்றாரு... அதப்பாத்துச்சிரிகிறாரு அப்புறம் போனாப்போகுதுன்னு கதவைதொறந்து உள்ளாற கூப்புட்டு முட்டி போடச்சொல்றாரு...இந்தக்கொடுமைய எங்க போய் சொல்ல யார்கிட்ட சொல்ல.   என் அக்காதான் உங்களைப்பாக்கசொன்னாங்க அதுனால வந்துருக்கோம்ன்னு சொன்னா..

அப்ப அவர் சொன்னாரு. அவரை எப்புடி யாவது இங்க கூட்டிட்டு வாங்க பேசிப் பாப்போம்னு சொன்னார்
அடுத்தவாரம் அவளோட புருசன் கிட்ட தனக்கு மனப்பிரழ்வுமாதிரி இருக்கு யாராவது மனநல மருத்துவரைப்பாக்கக் கூட்டிட்டுப்போங்கன்னு சொன்னா. எனக்குத்தெரிஞ்ச ஒரு டாக்டர் இருக்காரு அங்கதான் நான் சின்ன ப் பிள்ளை யா இருக்குறப்ப போயிருக்கேன் . அங்க கூட்டிட்டுப்போங்கன்னு சொன்னா. 
அதைக்கேட்டதும் அவன் சொன்னான் நான் நெனைச்சேன். நீ லூசாத்தான் இருந்து ருக்கனும்னு இப்ப உன் வாயிலயே வந்திருச்சு. கூட்டிட்டுப்போறேன் கட்டா யமான்னு சொல்லிக்கூட்டிட்டு போனான். 

அவர் மொதல்ல அவளைக்கூப்புட்டு கொஞ்ச நேரம் அவனை வெளியே இருக்கச் சொல் லிட்டு  பேசிக்கிட்டு இருந்துட்டு அவனை உள்ளாற வரச்சொன்னாரு. அவன் உள்ளாற போனதும் அவளை வெளியே போகச் சொல்லிட்டு அவனை ஒக்காரச் சொன்னாரு...

இப்ப அவன் கிட்ட அவர் கேட்டாரு. உங்க சம்சார்த்துக்கிட்ட என்ன பிரச்சனைன்னு கேட்டார். அவன் சொன்னான் எப்பப் பாத்தாலுமென்கூட சணடைபோடுறா அதுக்கு அவளோட மகளும் சப்போட்டு என்ன  உள்ளாற விட்டு வெளியேபோய் கதவைசாத்திக்கிடுறா  நான் என்ன சொல்லிக்கூப்புட்டாலும் வரமாட்டேன்றா. வெளியே நின்னு அழுகுறா சத்தம்போட்டு ஊரைக்கூட்டுறான்னு சொன்னான்...

இப்ப அவன்கிட்ட அவர் கேட்டார் நீங்க வெளில லாக்கிங் வசதிய எடுத்துட வேண்டியதுதானே உள்ளாற லாக் பண்ணிக்கலாம் வெளியே போகும்போது சாவிவைச்சி லாக் பண்ணிக் கலாமேன்னாரு. அதுக்கு அவன் சொன்னான் அப்ப அவள் சாவிவைச்சி என்ன உள்ளாற பூட்டிடுவான்னு சொன்னாரு 
வெளியே அனுப்பிப்பூட்டுறதால தான் செஞ்சதப்ப உணறலாம்லன்னான். அவங்க உங்களை அதுமாதிரி செய்யிறதுனால என்ன ஆயிடப்போகுது உங்களுக்கு நீங்க ஆம்பிளைதான.. நு கேட்டப்ப அவன் மூஞ்சி மாறுச்சு. தப்பு செஞ்சவங்க தண்டனை அனுபவிக்கனும். அப்புறம் அதை உணர்ந்து மண்டிபோட்டு மன்னிப்புக்கேக்கனும் அப்பத்தான் திருந்துவாங்க இது தான் அவங்களுக்குச்சரிப்படும்ன்னு சொன்னான்...

அப்ப அவர் அவனை ஆழ்நிலை மயக்கத் துக்குக் கொண்டு போய்  கவுன்சிலிங் பண்ணுனாரு. அவன சின்ன வயசுல அவனோட அக்காமாருக அடிக்கடி வெளியே தள்ளி கதவைச்சாத்தி தண்டனை குடுத்துருக்காங்க. அவனோட அம்மா அப்பாரெண்டுபேரும் டீச்சருங்க.  அவங்க இல்லாதப்ப அடிக்கடி நடந்துருக்கு. அவன் அழுது பொலம்புனாலும் உள்ளாற விடுறதில்ல. அப்புறம் மண்டிபோட்டு மன்னிப்பு கேட்டபின்னாடிதான் உள்ளாற விட்டுருக்காங்க.
அது அவன் மனசுல ஆழமாப்பதிஞ்சிடுச்சு. அது ஒரு தண்டனை அது அடுத்தவங்களுக்குக் குடுக்குறதில தப்பே இல்லை ந்னு பதிஞ்சிடுச்சு அவன் அவங்க அக்காமார்களை அதேமாதிரி செஞ்சி பழிவாங்க முயற்ச்சி பண்ணிருக்கான் அது நடக்கல. அதுனால பெண்கள்ன்னாலே அதுமாதிரி தண்டனை குடுக்கனும்ன்னு அவன் ஆழ்மனசுல பதிஞ்சிடுச்சு... இது அவனுக்குப்புரியனும்னா ஒரு தடவை நீங்க அதுமாதிரி அவன வெளியே தள்ளிகதவை ச்சாத்தி வெளியே இப்ப இருக்குறதோட கஸ்ட்டத்தை உணறவைச்சிட்டு திரும்ப கூட்டிட்டு வாங்க திரும்ப நான் கவுன்சிலிங் பண்ணுறேன் அப்புறம் சரியாகிடும்னு சொன்னாரு....

அந்தத் ட்ரீட்மெண்ட்தான் இப்ப குடுத்துட்டு இருந்தா அவ தன் புருசனுக்கு.. கொஞ்ச நேரத்துல அவ கதவைதொறந்தா. அப்ப அவன்மூஞ்சி செவந்து அழுது வீங்கிப் போயிருந்துச்சு.. நேர போய் எதுவும் பேசாம உள்ளாற போய் படுத்துட்டான்...

மறுநாள் அவங்க டாக்டர்கிட்டப்போனாங்க. வழக்கம்போல அவ பேசிட்டு அவன உள்ளாற அனுப்புனாங்க. இப்ப அவரோட கவுன்சிலிங்ல அவன் மனசு மாறிருக்குறத அவர் தெரிஞ்சிக் கிட்டாரு... இப்ப வன் சொன்னான் அது ஒரு கொடுமையான தண்டனை எதிரிக்கிக்கூட கொடுக்கக்கூடாதுன்னு சொன்னான் அதே நேரத்துல அவ அதுமாதிரி செஞ்சிருக் கக்கக்கூடாதுன்னு சொன்னான்..

அப்ப அவன் நிதானத்துல இருக்கும்போது அவர் சொன்னார் சின்ன வயசுல நீங்க அதுமாதிரி கொடுமைய அனுபவிச்சிருக்கீங்க ஆனா வளந்தபின்னாடி மறந்துட்டீங்க அது உங்களோட ஆழ்மனசுல இருந்தது. அதைச் சரிபண்ணத்தான் நான் அப்படிச் செய்யச் சொன்னேன்... இப்ப அதை நீக்கியாச்சு உங்களுக்கு ஒன்னும் பிரச்சனையில்ல... ன் னாரு

அப்ப அவளை டாக்டர் உள்ளாற கூப்புட்டாரு அவன் கண்கள் கலங்கி இருந்துச்சு. உன்ன நான் பலமொறை வெளியே தள்ளிக் கதவைச் சாத்திருக்கேன் அது எவ்வளவு கொடுமைன்னு உணர்ந்துட்டேன் என்னை மன்னிப்பாயான்னு கண்ணில் நீர்வழியக்கேட்டான். அவள் அதெல்லாம் மறந்து புதியவாழ்க்கைதொடங்க லாம்ன்னு கண்ணீர்வழிய சொன்னா.

அப்ப டாக்டர் சொன்னார். பிரச்சனை வரலாம்சண்டைபோடலாம்.ஆனால் அது வீட்டுக்குள்ள இருக்கனும். மூணாவது நபர் வந்து சொல்றமாதிரி இருக்கக்கூடாது... சண்டை போட்டாலும் சாமாதானத்துல முந்திக்கனும்... அந்த சண்டையில தோக்குறவ்ங்கதான் உண்மையில ஜெயிக்கிறவ்ங்க....... சண்டைபோட்டுப்பின் வருகிற சமாதானத்துக்கு அப்புறம் இல்லறம் ரொம்பவே ருசிக்கும்..... ஆனா அப்பவே சணடையும் சமாதானமும் நடந்துறனும்....அதைத்தான் வள்ளுவர் குறள்ல சொல்லிருக்காரு
"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்"

அப்படின்னு 1330வது குறள்லசொல்லி முடிச்சி ருக்காரு.....  முடிச்சார்.  அப்ப அவங்க ரெண்டுபேரும் தலைகவிழ்ந்தாங்க...... லேசா சிரிச்சிக்கிட்டு

அ.முத்துவிஜயன்