சாகுல் அமீதும் தமிழரசனும் -சிறுகதை

sahul-amithum-tamil-arasanum-short-story
சாகுல் அமீதும் தமிழரசனும் -சிறுகதை

சாகுல் அமீது அந்தபழனி பஸ்டாண்டுல .செம்பட்டி வழி மதுர மதுர மதுரன்னு கூவிக்கிட்டு இருந்தாரு.. பக்கத்துல தனியார்பஸ் நின்னுக்கிட்டு இருந்துச்சு இன்னும் பஸ் புல்லாகல கெளம்புறதுக்கு இன்னும் பத்துநிமிசம் தான் ஒவ்வொருத்தரா வந்து ஏறிக்கிட்டு இருந்தாக.பஸ் டிரைவரு இப்பவே 

கெளம்பப்போறமாதிரி பஸ்ஸை கொஞ்சம் கொஞ்சமா நகத்திட்டு இருந்தாருகண்டக்டரு பாய்நல்லாகூவுங்கஅப்பத்தான்நாலுபேருக்குகேக்கும்னாருபக்கத்துல டீக்கடையில ரேடியோவைச் சத்தமா வைச்சிருந்ததால இவரு கொரலு கேக்கல

அவருக்கும் வயசாயிப்போச்சு இருமல்வேற அதுனால கத்தமுடியல கண்டக்டர்கிட்ட டீ குடிக்க காசுகேட்டாரு சாப்பிட்டா கொஞ்சம் தெம்பா இருக்கும் காலையிலவேற சாப்புடல பசி காத அடைச்சிச்சி. கொஞ்சம் பொறுபாய் கெளம்புறப்ப குடுக்குறேன்னாரு கண்டக்டர்

ஒருவழியா பஸ் புல்லாகிக்கெளம்புச்சு கண்டக்டர் அஞ்சு ரூவாயக்குத்துட்டுப்பஸ்எடுத்தாரு சாகுல் காசவாங்கிட்டு சோசப்புகடையில டீ யும் பன்னும் சொன்னாரு . அதைக்கைல வாங்கி
பன்ன டீல தொட்டுச்சாப்புடும்போது அவனக்கவனிச்சாரு 

பத்துபன்னண்டு வயசுதானிருக்கும் அழுக்குச்சட்ட சாப்புட்டு ரெண்டு நாளாயிருக்கும்போலபன்ன ஏக்கத்தோட பாக்குறதப்பாத்தாரு
பசிக்குதான்னு கேட்டுட்டு அவனுக்கு ஒருபன்னு டீ ஆடர் பன்னுனாரு அவன் கை காலெல்லாம் புண்ணா இருந்துச்சு டவுசரும் சட்டையும் கிழிஞ்சிருந்துச்சு. வாங்கி வேகமாச்சாப்புட்டான்

எந்த ஊருன்னு கேட்டாரு அதெல்லாமில்ல நான் அனாதைன்னான். 
மூணுநாளைக்கி முன்னாடிவர ஒரு ஓட்டல்ல வேலை பாத்தேன்

 கைல கால்ல புண்ணு வந்தவன்ன வெறட்டீட்டாக ரெண்டுநாளா இந்த பஸ்டாண்டுலதான் கெடக்கேன்னான்சாகுல் அமீதுக்கு பஸ்டாண்டுல டிக்கட் ஏஜண்ட் வேல பஸ்ஸுக்கு முன்னாடி நின்னு கத்தனும் . அப்புறம் பஸ்ல வார லக்கேஜ் எறக்கனும் ஏத்தனும் அதான் வேல 

வருமானம் கைக்கும் வாய்க்கும்தான் அஞ்சு மகளுகவேற .குடும்பம் இவரோட வருமானத்தத்தான் நம்பி இருந்துச்சுஅந்தப் பையனப். பாத்தா ப் பாவமா இருந்துச்சு. பேரு என்னான்னு கேட்டாரு தமிழரசன்ன்னு சொன்னான். சரி என்கூட இருக்குறயான்னுகேட்டாரு சரின்னான்
அன்னிக்கி அவன கூடவைச்சிக்கிட்டாரு சாப்பாடு வாங்கிக்குடுத்தாரு ஒனக்குன்னு ஆருமில்லயான்னு கேட்டாரு இல்லன்னான்

சரி என் வீட்டுக்கே வந்துரு ந்னு கூட்டிட்டுப்போனாரு வீட்டுல எல்லாருக்கும் சொன்னாரு இவன் இனிமே நம்மளோடதானிருப்பான் எனக்கு இன்னொரு புள்ளய அல்லா குடுத்திருக்கான்ன்னாரு அவரோட சம்சாரம் ஆயிசா ஆமா பாத்தாப்பாவமா இருக்கு எந்த ஊருன்னு கேட்டாக . 

சாகுல் சொன்னாரு அவன் நேத்துவர அனாத இன்னிக்கி என்னோட வளர்ப்பு மகன்ன்னாரு அவனக்குளிக்கவைச்சி புண்ணுக்கெல்லாம் மருந்துபோட்டு டிரஸ் வாங்கிக்குடுத்து புதுமனுசனா மாத்துனாரு

மறுநால்ல இருந்து பஸ்ட்டாண்டுக்குக் கூட்டிட்டுப்போயி தொழில் சொல்லிக்குடுத்தாரு அவனும் நல்லாக்கத்துக்கிட்டான் சீக்கிரமே பஸ்டாண்டுல எல்லாருக்கும் தெரிஞ்சவனாயிட்டான் 
பஸ் கண்டக்டர் டிரைவர் கிட்ட அண்ணே அண்ணேன்னு பாசமாப்பழகுனான் கேக்காமலே டீயெல்லாம் வாங்கிக்குடுத்தான்

எல்லாருக்கும் அவனப்புடிச்சிப்போச்சிவீட்டுல எல்லார்கிட்டயும் பாசமாப்பழகுனான் சாகுல அப்பான்னும் ஆயிசாவ அம்மான்னும் மகளுகளை அக்கா தங்கச்சின்னும் கூப்புட்டான் குடுமபத்துல ஒருத்தனாகிப்போனான் தனியா ஒரு விபூதிப்பை வைச்சிருப்பான் காலையில குளிச்சிட்டு விபூதி பூசிக்கிட்டு சாகுல் கூட தொழிலுக்குப்போவான்

இப்புடி ஆறு வருசமோடிப்போச்சு . குடுமபத்துல அவந்தான் எல்லாம் இப்ப அவனுக்கு பதினெட்டுபத்தம்போது வயசிருக்கும் அப்ப பக்கத்துல இருக்கவுக சொன்னாக வயசுப்பையன வீட்டுல வைக்கிறது நல்லால்ல பொண்ணுக இருக்குறவீட்டுலன்னு அதுக்கு சாகுல் சொல்லிட்டாரு அவன் என்னோட மகன்னுஅதைக்கேட்டதும் தமிழோட கண்ணு கலங்கிடுச்சு 

அப்ப சாகுல்ட்ட சொன்னான் அப்பா ஒங்களுக்குத்தான் நல்லா பிரியாணிசெய்யத்தெரியுமேபேசாமஒருகடையப்போடலாமேன்னான்அதுவும் நல்ல யோசனையாப்பட்டது ,ஜோசப்பு இவரோட நல்ல பிரண்டுதான் அவரோட டீக்கடையோரத்துல கடை போட்டாரு ஜோசப்புக்கு கொஞ்சம் வாடகக்குடுக்குறதுன்னு முடிவாச்சுபிரியாணி வியாபாரம் நல்லாப்போச்சு

பிரியாணிவியாபார்த்தை  சாகுல்பாத்த்க்கிட்டாரு ஏஜண்டு வேலைய இவன் பாத்துக்கிட்டான்ஒருநா சாகுலக்கு ஒடம்புக்கு முடியல

எச்சில ரத்தம் வந்துச்சு ஆசுப்பத்திரிக்கிப்போயிப்பாத்ததுல
அவருக்கு நொரையீரல்ல புத்துநோயி வந்துருக்கதா சொன்னாக எல்லாரும் பதறிப்போயிட்டாக அப்ப தமிழு முழுப்பொறுப்ப எடுத்துக்கிட்டான் அவரையும் பாத்துக்கிட்டான்

கடை சூடுபிடிச்சிச்சு நல்லப்போகவும் பஸ்டாண்டுல தனியா சாகுல் பிரியாணிக்கடைன்னு போர்டுபோட்டு தொடங்குனான். சாகுலோட மூத்தமகளுக்கு நல்ல இடத்துல மாப்பிள வந்துச்சு தமிழு கலியாணத்தை நல்லா நடத்தினான் அவளும் தமிழ்கைப்பிடிச்சு அழுதா. தம்பி அல்லாதான் ஒன்ன எங்களக்காப்பாத்த அனுப்பிருக்காருன்னா

சாகுல் நெலம ரொம்ப மோசமாச்சு
கடைக்கிவாரதில்ல முழுப்பொறுப்பும் இவனே பாத்துக்கிட்டான்
ஒருநா மதுரையில இருந்து வார பஸ்சில பத்துப்பேரு பழனிக்கு சாமிகும்புட வந்தவுக பிரியாணி சாப்புட வந்தாக

அவுகளப்பாத்ததும் தமிழு வேகமா கடைக்கு உள்ளார போயிட்டான் அவுக சாப்பிட்டுப்போறவரைக்கும் வெளியே வரல.ஆனா அதுல ஒருத்தரு இவன உத்துப்பாத்தமாதிரி இருந்துச்சு
.மறுநா காலயில கடைக்கி முன்னாடி ஒரு கூட்டமே வந்து நின்னுச்சு அதுல ஒரு அம்மாஏய் முருகா நீ இங்கயா இருக்க ந்னு அவனக்கட்டிப்புடிச்சி அழுதுச்சு பக்கத்துல இருந்தவரு சொன்னாரு அவங்கதான் தமிழோட அம்மான்னு கூடவந்திருந்தவுக சொன்னாக கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி ஏதோ தப்பு செஞ்சதுக்கு அவனோட அப்பா இவன அடிச்சிப்புட்டாரு அன்னைக்கி வீட்ட விட்டு ஓடியாந்துட்டான் அவுகளும் ஊரு ஊரா தேடுனாக இவன் யாரு கண்ணுலயும் மாட்டல நேத்து இவங்க மாமா பாத்துட்டுப்போன் பண்ணாரு

அது நாலதான் கூட்டிட்டுப்போக வந்தோம்ன்னாக இவனுக்கும் அம்மாவப்பாத்ததும் அழுக வந்துச்சுஅப்பா எப்புடியிருக்காருன்னு கேட்டான்அவருக்கு மனநில சரியில்ல ஒங்க அண்ணன் தான் குடும்பத்தை பாத்துக்கிறான் நீ ஒடனே கெளம்பு நம்ம வீட்டுக்குக்குப்போகலாம்ன்னாக
அப்ப சாகுல் வந்தாருஆயிசா மகளுக எல்லாம் வந்தாக இவுக சொல்றது உண்மையான்னு கேட்டாரு தமிழு ஆமான்னான். நீ உடனே அவங்ககூடக்கெளம்புன்னாரு

அப்ப தமிழு சொன்னான் அவங்களோட மகன் முருகன் இப்ப இல்ல தமிழரசன் சாகுலோட மகன் தான் இருக்கான் எனக்கு அப்பா சாகுலப்பாத்துக்கணும் தங்கச்சிகளை கட்டிக்குடுக்கணும் கடமை இருக்கு இதவிட்டுட்டு என்னால வரமுடியாதுன்னான் சாகுல் ஆயிசா மகளுக கண்ணுல இருந்து கண்ணீர் ஊத்துச்சு.

சாகுல் சொன்னாரு என் குடும்பத்தை நான் பாத்துக்கிடுறேன் நீ கெளம்புடா நீயாருடாஎன்ன பாத்துக்கன்னு கோவமா சொன்னாரு

அப்ப தமிழு சொன்னான் அப்பா நான் ஒன்னோட மகன் ஒன்னோட வாயி போன்னு சொன்னாலும் கண்ணு அழுகுதேப்பா. தங்கச்சிகளை இந்த நெலமையில விட்டுட்டு போக நான் அவ்வளவு பொறுப்பில்லாதனில்லன்னான்அப்ப அவனோட அம்மா அழுதுக்கிட்டே சொன்னாங்க எம்புள்ளய இத்தன நாளு கூடவே வைச்சிக்காப்பாத்துன ஒங்களை கையெடுத்துக்கும்புடுறேன் .அவன் எங்கயாவது உசுறோட நல்லா இருந்தாப்போதும்

அவன் காணாமப்போனதாவே நெனச்சி இருந்துக்கிறோம் அவன் இங்குணக்குள்ளயே நல்லா இருக்கட்டுனு சொல்லிட்டுகண்ணத்தொடச்சிட்டு பஸ்நோக்கிப்போனாக
தமிழும் கண்ணத்தொடச்சிக்கிட்டான் ,சாகுல் அவங்களைக் கையெடுத்துக் கும்பிட்டாரு .....ஆயிசாவோட கண்ணும் கலங்கிடுச்சு ..அப்ப சாகுலோட மக நூருதமிழோட கையப்புடிச்சிட்டு கண்ணீர்விட்டா அண்ணே எங்களை விட்டுப்போகாதண்ணேன்னு அதுக்கு தமிழு சொன்னான் இனிமேஎங்கயும்போகமாட்டேன் தங்கச்சின்னு கண்ணத்தொடச்சிக்கிட்டு சொன்னான் ..இப்புடியும் மனுசங்க இருப்பாங்களான்னுடீக்கடை ஜோசப்பால நம்பவேமுடியல அவரு கண்ணதொடச்சிக்கிட்டாரு.......

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்