மொக்கச்சாமி - சிறுகதை

mokka-samy-short-story
மொக்கச்சாமி - சிறுகதை

மொக்கச்சாமிக்கு எப்பவும் கேலியும் கிண்டலும்தான் அவரோட பொண்டாட்டி கருப்பாயிக்கு அது ரொம்பப்புடிக்கும். அவரு பேசுறப்ப சிரிப்பு சிரிப்பா வரும். எம் ஜி ஆர் படம் ந்னா அவருக்கு உசுறு. எப்பாடுபட்டாவது பாத்துப்புடுவாரு. என் தலைவன் போல ஆகுமா வள்ளல் நா அவருதான் வள்ளலுன்னு சொல்லுவாரு. அவருக்கு சரோஜாதேவி நடிப்ப கிண்டல் பண்ணலன்னா தூக்கம் வராது...அவரை மாதிரி பொண்டாட்டிக்கிட்ட நடிச்சிகாமிப்பாரு. 

ஆனா கருப்பாயிக்கு சிவாஜிதான் புடிக்கும். அவர மாதிரி நடிக்க முடியாதுன்னு மல்லுக்கட்டுவா. ஆனா மொக்கச்சாமி பொண்டாட்டிக்காக சிவாஜிபடமும் பாப்பாரு. பாத்துப்புட்டு வந்து கோளாறு சொல்லுவாரு. அவர் சிவாஜி எப்பப்பாத்தாலும் அழுதுக்கிட்டு இருப்பாரு. ஒரே அழு மூஞ்சி ஆனா எம் ஜி ஆர் சண்டை போட்டாக்கூட சிரிச்சிக்கிட்டே சணடை போடுவாரு. சரோஜாதேவிய அன்பேவால பாத்துப்புட்டு படம்பாக்குறப்பவே திட்டுனாரு. 

என் தலைவனை கூட்டத்தை கூட்டிட்டு வந்து வெரட்டப்பாக்குறா. நாடோடி போகவேண்டும் ஓடோடின்னு. விடுவாரா தலைவரு.... மறுபடி பாடி கிரிக்கெட் ஆடி சரோஜாதேவிய உண்டு இல்லைன்னு பண்ணிப்புடுவாருல. ஆனா சிவாஜி அவ பின்னாடியே திரிவாரு மெல்ல நட மெல்ல நடன்னு....போனா போடின்னு விடவேண்டியதுதானம்பாரு

ஆனா கருப்பாயி சொல்லுவா ஆமா ஒங்க ஆளுக்கு அழுகக்கூடத்தெரியாது. ஆனா போய் தூண்ல போய் முட்டிக்கிடுவாரு

சோகமாருந்தா அத மொகத்துல காமிக்க வேண்டியதுதான அத விட்டுப்புட்டு தூணுல போய் மொகத்த எதுக்குத்தேய்க்கனும்,

எங்க ஆளு மாதிரி வசனம் பேசமுடியுமா. மூச்சுத்தெணறுமுல்ல ஒங்க ஆளுக்கு. காதலிச்சி கனவல்லாம் பாட்டுப்பாடி கட்டிப்புடிச்சி இல்லாத சேட்டையெல்லாம் பண்ணிப்புட்டு அப்புறம் தங்கச்சிம்பாரு உங்க ஆளு அதுவும் அவர் கனவு கான மாட்டாராமாம். பொம்பளைகதான் கனவு காணனுமாம்...... எங்க ஆளு அப்புடி இல்ல. உருகி உருகி காதலிப்பாரு கனவு காணுவாரு. சோகத்துல கட்டிப்புடிச்சி அழுது ஆறுதல் சொல்லுவாரு.....ன்னு மாத்தி மாத்தி பேசிக்குவாக

அன்னிக்கி மொக்கச்சாமிய வம்புபண்னி புதிய பறவை படுத்துக்கு கூப்புட்டு போனா. கருப்பாயி.  படம் முழுக்க சரோஜாதேவிய கிண்டல் பண்ணிட்டே இருந்தாரு. கருப்பாயி படத்தோட ஒன்றி அழுதுகுமிச்சா,..  

மக்யாநாளு தோட்ட வேலை முடிஞ்சவன்ன மொக்கச்சாமி வம்பு இழுத்தாரு. சரோஜாதேவி வெக்கப்படுறமாதிரி நடிச்சி போங்க கோபால் உங்களுக்கு குறும்பு அதிகம்ன்னு பண்ணிக்காமிச்சாரு. கருப்பாயிக்கு சிரிப்பு வந்துடுச்சு. பேசாம ஒன்னய சோடியா போட்டுருக்கலாம்  அம்புட்டு வெக்கம் மூஞ்சில ந்னு சொன்னா. அதுக்கு ஆமா சாரோஜாதேவியா வாறேன் நீ சிவாசியா வா. வெளங்கிடும். கல்லாலயே அடிப்பாக பாக்குறவுக. அது அத அவுக அவுக பண்ணாத்தான் நல்லாருக்கும்

நாம பண்ணா சிரிப்பா சிரிச்சிப்புடும் சனங்கன்னாரு

என்னாதான் ஏட்டிக்குப்போட்டியா இருந்தாலும் கருப்பாயிக்கு அவ புருசன் மொக்கமாயன் உசுறுதான்.
ஒருத்தரு கேட்டாரு அடுத்த சென்மத்துலயும் நீங்க பொறந்தா இதே புருசன் வேணுமுன்னு கேப்பிகளான்னு. அதுக்கு கருப்பாயி சொன்னா ஆமா நிச்சயமா கேப்பேன் ஏன் தெரியுமான்னு சொல்லிக்கிட்டு  மொக்கமாயன ஓரக்கண்ணால பாத்துக்குட்டு கொஞ்சம் தள்ளிப்போய் சொன்னா. தெரியாத தேவதையக்காட்டிலும் தெரிஞ்ச பிசாசே மேல்ன்னு மொக்கச்சாமி சிரிச்சிக்கிட்டே அடிக்க ஓடுனாரு ஆமா நீ பேயி நான் பிசாசு இந்தபிசாசுக்கு அந்தப்பேய்மேலதான் ஆசைன்னு

அப்பபாக்கனுமே கருப்பாயிக்கி சிரிப்பையும் மொக்கச்சாமிக்கி வெக்கத்தையும்.....குடுத்துவைச்சிருக்கனும் அதுமாதிரி இருக்க

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்