கொலுசு - சிறுகதை

golusu-short-story
கொலுசு - சிறுகதை

இது ஒரு பேரழகியைப்பற்றிய கதை, ரொம்ப சீரியஸ் ஆன கதையெல்லாம் இல்ல அதுனால ஜாலியா வாசிக்கலாம் ,அந்தப்பொண்ணுன்னு சொல்றதா இல்ல அந்த அம்மான்னு சொல்ற தான் னு தெரியல,நான் பாக்கும்போதே ஒரு 26 அல்லது 28 வயசு இருக்கும், பேரெல்லாம் நமக்கெதுக்கு ஆனா வயசுப்பயலுக அந்தப்பொண்னுக்கு வைச்சிருந்த பெயரு மயிலு, 

அதுக்கு ரெண்டு காரணம் மொதலாவது அது மயில் மாதிரி அழகா இருந்தது ரெண்டாவது 16 வயதினிலே படம்பாத்தது  காரணம் மயில் மாதிரியே கொரலும் இருந்தது அது னால மயிலு வந்தாச்சா மயிலு போயாச் சான்னுதான் விசாரிப்புகள் எல்லாமே

ஆனா அழகுன்னா உங்கவீட்டு அழகு எங்க வீட்டு அழகுஇல்ல. பேரழகு நல்ல மஞ்சள் நெறம் ஒல்லியும் இல்லாம குண்டும் இல்லாம பூசின ஒடம்பு  தெற்றுப்பல்லு ஓரளவு இடுப்பத் தொடுற முடி, கருப்புஉடைபோட்டுட்டு வந்துச் சுன்னா அன்னிக்கி பாதிப் பேர் அவுட்  பொலம்ப ஆரம்பிச்சிடுவானுக

வெள்ளிக்கெழமைன்னா கேக்கவே வேணாம் மஞ்சள் மேல லேசா மஞ்சள் பூசி தலைய லூசா விரிச்சி விட்டு அதுல மொழம் மல்லிகைய சொருகி எல்லார் மனசையும்சொருகிட்டுப் போய்டுவா

அவ வேலைக்கிக் கெளம்பிப்போறப்ப பத்து பஸ் வந்தாலும் அவ போற பஸ்ல ஏறுறதுக் குன்னே பயலுக காத்துக்கெடந்து ( இம்புட்டுக் கும் மத்த பஸ் எல்லாம் உக்கார சீட் இருந்தும் ) இதுல நின்னுக்கிட்டே போவானுக  அந்தப் பொண்ணுக்கு பின்னாடி சீட் புடிக்கப் போட்டியோ போட்டி போட்டு எடம் பிடிச்சி வாசம் புடிச்சிக்கின்னே போவானுக.  இதேதான் திரும்பி வாரப்பயும் நடக்கும் முன்னாடியே எறங்க வேண்டிய பஸ்ட்டாப்  இருந்தாலும் அந்தப்பொண்ணு எறங்குற பஸ்ஸ்டாப் வரை வந்து எறங்கி திரும்பி நடந்து போவானுக

இது அந்தப்பொண்ணுக்கும் தெரியும். எம்புட்டு வயசனாலும் பயலுக பின்னாடி விழுந்து விழுந்து சுத்துறத ரசிக்காத பொண்ணுக கம்மிதான், ஏதாவது ஒரு காரணத்துனால  அன்னிக்கி அவ வார பஸ்ல அந்தக்கூட்டம் இல்லைன்னா வாடிப்போயிடும் மூஞ்சி அந்தப்பொண்னுக்கு,

இங்கதான் இப்புடின்னா வேலை பாக்குற எடத்துல அதுக்குமேல, லிஃப்ட்டுல நின்னு அந்தப்பொண்ணு போறப்ப 5 வது மாடி வரை அது தலையில வைச்சிருக்குற மல்லிப்பூ வாசம் புடிச்சிக்கிட்டே கூட்டமா கொண்டு போய் விட்டுட்டு வருவானுக பயலுக, இது மத்த பொண்ணுகளுக்கு ஒரே காண்டா இருந்துச்சு நாங்க எல்லாம் பொண்ணுக இல்லையா நு பொகை விடுவாங்க

ஏதாவது ஒரு காரணத்தை வைச்சிக்கிட்டு அந்தப்பொண்ணு ஒரு அதிகாரிக்கு பிஏ( பெர்சனல் அசிஸ்ட்டண்டு) வேலை பாத்துச்சு

அந்தப்பொண்ணுகிட்ட இருக்குற வேற பொண்ணுக கிட்ட பேச்சுக்குடுப்பானுக பார்வை அந்தப்பொண்ணு மேலயே இருக்கும்

பலபேர் வேலையக்கெடுத்து அது பின்னாடி சுத்திக்கிட்டுக்கெடந்தானுக.

ஆனா யாருக்கும் பக்கத்துல நெருங்குற தைரியம் வரல அதுக்குக் காரணம் கொஞ்ச நாளைக்கி முன்னாடி நடந்த ஒரு சம்பவம். ஒருத்தன் நல்ல கருப்பு , அந்தப்பொண்ணுக் கிட்டப்போய் ( நம்ம வடிவேலு தலை நகரம் படத்துல கேட்ட மாதிரி) மாமன் ரொம்ப அழகில்ல சுமார்தான்  உங்க வீட்டுக்குப் பொண்ணு கேட்டு வரவான்னு கேக்க அவ சொன்ன பதில்தான் எல்லாரையும் யோசிக்கவைச்சிருச்சு அவ சொன்ன பதில்
”உன் மூஞ்சியக் கண்ணாடில பாத்துருக்கியா”

ஆனா அவன் இதெல்லாம் சமாளிக்கக் கூடியவன் தான் அவன் சொன்னான் உங்க வீட்டுக்குக்கு வந்து உங்கவீட்டுக்கண்ணாடில பாக்கட்டுமான்னு கேட்டான். 

ஆனா அது கம்ப்ளெயிண்ட் ஆகி அவனுக்கு வார்னிங் லெட்டர் குடுக்குற அளவுக்குப் போயிருச்சு, ( அதுக்குக் காரணம் அந்தப்பொண்ணோட பாஸ் ரொம்பக் காண்டானது அவர் அது தன்னோட சொத்துன்னு நெனைச்சதும்) 
இது மட்டுமா அங்க அங்க அவளோட பெயர் தான் சொவத்துலயும் எல்லா கிறுக்கனு களும் கிறுக்குற கழிவறையிலயும்   மயிலு அய் லவ் யூதான்  கிறுக்கிக்கெடந்தது

அது மட்டுமா அவ போற லிஃப்டுலயும் மயிலு அய் லவ் யூன்னு கிறுக்கிக் கிறுக்கி நிர்வாகம் அதுக்கு பெயிண்ட் அடிச்சி லிப்டில் கிறுக்குபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்னு எழுதிஒட்டுனாங்க நம்ம ஆளுக விடுவானுகளா அந்த நோட்டீசுல யே நோட்டீஸ் ஒட்டுன ஒங்கள யார் தண்டிக்கிறதுன்னு கிறுக்கி வைச்சாங்க நிரவாகம் காண்டாயி செலவு பண்ணி லிப்டுல ஒரு கண்காணிப்புக் கேமரா பொறுத்த வேண்டியதாப்போச்சு. நம்ம மயிலுக்கு நிர்வாகமே அம்புட்டு செலவு பண்ணுச்சு. ஆனாலும் கழிவரை ஓவியங்கள் எல்லாம் அவள் புகழைத்தான் பாடின.
இப்படி பாக்தாத் பேரழகியாத் தன்ன கொண்டாடிக்கிட்டு இருந்தவங்க எல்லாரும் அவமேல  இரக்கப்படுறமாதிரி ஒரு செய்தி வந்து சேந்துச்சு. அவளுக்குக் கல்யாணம் நடக்கப்போறதா, இது பல பேருக்கு  அதிர்ச்சி ஏன்னா அவனுக எல்லாம் இலவு காத்த கிளி மாதிரி காத்துக்கிட்டு கெடந்தவனுக. ஒரு வாரம் லீவு போட்டுச்சு கலியாணத்துக்கு (நெருங்கிய ஏற்கனவே கல்யாணம் ஆன) கூட வேலைசெய்யிற ஆம்பளைகளுக்கும் பொம்பளைகளுக்கும் பத்திரிக்கை குடுத்துச்சு

இப்ப எல்லாருக்கும் ஒரு ஆவல் இந்தப் பெரழகியோட கணவன் எந்த ராஜகுமாரனோ அவனை பாக்கனும் நு ஆவலா இருந்தாக, அதுக்காகவே கலியாணத்துக்கும் போனாக 

போய்ட்டு வந்து ரொம்ப (போலியான) வருத்தத்தோட சொன்னானுக இப்பவும் அது மயிலுதாம்பா அவ புருசன் சப்பாணி மாதிரி சகிக்கல. எங்கபோய் புடிச்சாங்கன்னு தெரியல இந்தப்பெரழகிக்கு அவன் கால் தூசி தாங்க மாட்டான்பானு  (கொஞ்சம் வருத்தம் மனசுக்குள்ள ரொம்பச்சந்தோசம்) சொன்னாங்க
அந்தப்பொண்ணும் கலியாணம் முடிஞ்சும் கல்யாண ஆல்பம் எல்லாரும் கேட்டும் சால்ஜாப்பு செஞ்சிக்கிட்டு கொண்டு வரல

இப்ப நல்ல கருப்பன்( வடிவேலு) ஒரு தடவ அந்தப்பொண்ணப் பாத்து நக்கலா ஏம்மா ஒங்க வீட்டுல கண்ணாடி இருக்கான்னு அந்தப்பொண்ணுக்கு பக்கத்துல இருக்குற பொண்ணுக்கிட்ட( ரொம்ப தைரியமா)ப் போய் கேட்டுவந்தான். பழைய கதை தெரிஞ்ச அந்தப்பொண்ணும்  இருக்கு இருக்கு  ஆனா அது இந்த மொகரைக்கட்டைக்கெல்லாம் பாக்குறதுக்கு இல்லனு நக்கலா சொல்லிச்சி

இது இப்படிப்போய்கிட்டு இருந்துச்சு நம்ம ஹீரோக்கள் இந்தக் கல்யாணம் தாங்காது புட்டுக்கும்ன்ற கற்பனையிலயே வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க. அதுனால பழைய விசயம் எல்லாம் தொடர்ந்துச்சு. 
ஒரு நா அந்தப்பொண்ணோட கால்ல போட்டுட்டு வந்த கொலுசுல ஒரு கொலுசு காணாமப்போயிருச்சு. அதக்கேள்விப்பட்டு துக்கம் விசாரிக்கிற சாக்குல பலபேர் போய் வழிஞ்சானுக, அதுவும் சோகமா சொல்லிச்சி கலியாணத்துக்கு வாங்கினது மனசுக்குக் கஸ்டமா இருக்குன்னு சொல்லிச்சி

அப்ப ஒரு பொண்ணு ஒரு யோசனை சொல்லிச்சி  ஒன் மேலதான் எல்லாருக்கும் ஒரு இது( மரியாதை) இருக்குல்ல பேசாம உன் கொலுசக்காணோம்னு ஒரு லெட்டர் எழுதி நோட்டீஸ் போர்டுல போடு உன்னதுன்னு தெரிஞ்சா எடுத்தவங்க  குடுத்துருவாங்க நு

அது நல்ல யோசனையாப் பட்டுச்சு. அதுவும் யோசிக்காம ஒரு நோட்டீஸ் போட்டுச்சு இது மாதிரி என்னோட கொலுசு காணாமப்போச்சு கண்டு பிடிச்சி குடுக்குறவங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்னு
அதைப்பாத்துட்டு எல்லாரும் அதைப் பத்தியேதான் பேசிக்கிட்டு இருந்தாங்க , ஏதோ அமெரிக்க விண்கலம் காணாமப்போன மாதிரி கவலைப்பட்டாங்க. எல்லாரும் அங்க அங்க கெடக்குற குப்பையில எல்லம் கோழி கிண்டுன மாதிரிகிண்டிப்பாத்தாங்க

ஆனா விசயம் வேறமாதிரிபோய்டுச்சு,  கிட்டத்த எட்டுப்பேரு கொலுசோட அந்தப்பொண்ணப்போய் பாத்தானுக மேடம் இது இங்க கெடந்துச்சு அங்க கெடந்துச்சுன்னு செலபேர்  வீட்டுல சுட்டுக்கிட்டு வந்தும் சில பேர்  புதுசா கடையில வாங்கிட்டு வந்தும்  தேவிக்குக் நேத்திக்கடன் செலுத்துற மாதிரி காணிக்கையா கொண்டு போனானுக.
அந்தப்பொண்ணுக்குச் சிரிக்கிறதா அழுகுறதான்னு தெரியல அது பாட்டுக்குக்கு கொலுசுகள் வந்துக்கிட்டே இருந்துச்சு  பக்கத்துல இருந்த ஒரு பொண்ணு கிண்டலா சொல்லிச்சி  நீ கொலுசுன்னு போட்டதுக்கு தங்க நெக்லஸ்னு கூட போட்டுருக்கலாம் நல்ல வராவாயிருக்கும்னு ,  வேற வழியில்லாம அந்தப்பொண்ணு கொலுசு கிடைத்து விட்டதுன்னு( உண்மையில போனது கிடைக்கவே இல்ல)  நோட்டீஸ் போட வேண்டியதாப்போச்சு.
இதப்பாத்துட்டு கொஞ்சம் பொறாமையில  கொஞ்சம் சுமாரான அழகான பொண்ணு தன்னோட பணம் காணாமப்போச்சுன்னு ஒரு நோட்டீஸ் ஒட்டுச்சு. அதுக்கு கமெண்ட்டா ஆழந்த அனுதாபங்கள்னு ஒருத்தன் கிறுக்குனதத் தவிர ஒன்னும் வரல...

இதுல ஒரு ட்விஸ்ட் இல்லாட்டினா எப்புடி உண்மையில அந்தக்கொலுச கண்டு எடுத்தவன் நம்ம ஹீரோதான் ( அதான் கண்ணாடில பாக்கச்சொல்லி வாங்கிக்கட்டுனவன்)  ஆனா அவன் அதை தன்னோடயே வைச்சிக்கிட்டான் கொண்டுபோய் குடுக்க மனசில்லாம அவளோட ஞாவகமா அவன் கடைசி வரை கலியாணமே பண்ணிக்கல
இதெல்லாம் படிச்சிட்டு நம்மள இதுமாதிரி எவனும் விரும்பலையேன்னு வருத்தம் வேணாம் ஒலகத்துல எல்லாருமே அழகானவங்கதான் அதுனாலதான எல்லாருக்கும் கலியாணம் நடக்குது பக்கத்துல ஒருத்தர் சொல்றாரு அதெப்படி கல்யாணத்துக்கு முன்னாடி தேவதையா இருக்குறதெல்லாம் அப்புறம் எப்படி பேயா பிசாசா மாறுதுன்னு அப்பாவியாக்கேட்டார் பதில் தெரிஞ்சா சொல்லுங்க கோவப்படாம.

( ரொம்ப சீரியசாவே எழுதுறேன்னு ஒரு கம்ப்ளெயிண்ட் அதான் ஒரு மாறுதலுக்காக)

அ.முத்துவிஜயன்