நாற்றம் - சிறுகதை

naatram-short-story
நாற்றம் - சிறுகதை

டேய் அப்புடியே நேரடியா உள்ளவந்துராத கொள்ளைப்பக்கமா போய் கெணத்துல தண்ணி எறைச்சு சோப்புப்போட்டு நல்லா குளிச்சிட்டு அங்கயே ஒரு துண்டு காயுது அதை எடுத்துத் தொடைச்சிட்டு உள்ளாறவா நு வாசல்கிட்ட நின்னுக்கிட்டு வாசலை மறைச்சபடி சொன்னா அவளோட ரெண்டாவது மகன்கிட்ட

அப்ப அவன் கேட்டான் எனக்கு அது தெரியாதா நீ சொல்லித்தான் நான் செய்யனுமா குளிச் சிட்டே வாறேன்னு சொன்னான் அவன், போறப்ப இதைநீஒன்மூத்தமகன்கிட்டசொல்லு பாப்போம் நெசமா எங்க ரெண்டு பேரையும் நீயே பெத்திருந்தான்னு சொல்லிக் கிட்டே போனான்

அது அவளுக்குச் சுறுக்குன்னு பட்டுருச்சு. அதுக்கு அவ சொன்னா அவன் ஒன்னமாதிரி கவுச்சி நாத்தம் அடிக்கிற வேலையா பாக்குறான் வெள்ள பேண்ட் சட்டைபோட்டு கருப்பு கோட்டும் போட்டு வக்கீலாவுள்ள இருக்குறனான் அவன அப்புடிச்சொல்ல முடியுமா

நீ மீன் கடை வைச்சிருக்க உள்ளாற வரும்போதே நாத்தம் கொடல உருவி வெளிய கொண்டாருது அதான் நேர போய் குளிச்சிட்டு வரச்சொல்றேன் எல்லாம் உன் நல்லதுக்குத் தான் , நீ பாக்குறவேலைக்கி அப்புடி சுத்தமா இல்லைன்னா நோவு நொடி வந்துரும் அதான் கறாறா சொல்றேன், அவன் வெள்ளையும் சொள்ளையுமா இருக்கான் அது தேவையில்ல அவன் வரும்போது மல்லிகை செண்ட் ஆளத்தூக்கும் ஆனா நீவரும்போது செத்த மீன் வாசம் கொடலைப்பொறட்டுதுன்னா

அதான அவனத்தலையில தூக்கிவைக்கிட்டு ஆடுவியே, ம்ம் குளிச்சிட்டு வாறேன்னு சொல்லிட்டு கொள்ளப்பக்கமா போனான் அவன், ”

என்ன இருந்தாலும் அவனப்போல வருமா அவன மகன் சொல்லிக்கிறதே ஊருக்குள்ள பெருமையா இருக்கு, நீயும் மகன் தான்னாலும்  யாரவது நீ என்ன பண்ணுறன்னு கேட்டா யோசிச்சி சொல்லவேண்டியதா இருக்கு என்ன பண்ண நீயும் ஒழுங்கா படிச்சிருந்தா நல்ல நெலமைக்கி வந்துருக்கலாம்”  நுசொன்னா

அதுக்குள்ள வெளிய இருந்துசொன்னான் நானா படிக்கமாட்டேன்னு சொன்னேன் நீ தான அவனுக்கே படிக்கவைக்க காசு பத்தல  நு சொல்லி என்னய  மேல்படிப்புக்கு சேக்கல நான் படிச்ச படிப்புக்கு என்ன வேலை கெடைக்குமோ அதை ச்செய்யிறேன் அதுக்கு என்ன கலெக்டர் வேலையா குடுப்பானுக கெடைச்சதைச் செய்யிறேன்னு சொல்லிக் கிட்டே தொடச்சிக்கிட்டு உள்ள வந்தான். 

இருந்தாலும் இந்த நாத்தமெடுக்கிற வேலைய விட்ட வேற வேலை கெடைக்கலயா ஒனக்குன்னு சொல்லிக்கிட்டே தட்டு எடுத்து வைச்சி சாப்பாடு போட்டா அவ 

இவன் என்ன கொழம்புன்னு கேக்க அவ சொன்னா  மீன் கொழம்புதான்னு , அதுக்கு இவன் சொன்னான் வேற யோசனையே இல்லயா மனுசன் திம்பானா இதை ஒரு வத்தக்கொழம்பு மாதிரி வைச்சிருக்கலாம்ல நு சொல்லிக்கிட்டே சாப்புட்டான்

சாப்புட்டுட்டு கொஞ்சம்ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கலையில மூத்த மகன் வந்தான் , அவன் நேரடியா அடுப்படிக்கு வந்து என்ன கொழம்பும்மான்னு கேட்டுட்டு அதான் வாசம் மூக்கத்தொளைக்குதே மீன் கொழம்பு இன்னிக்கி ஒரு புடி புடிச்சிர வேண்டியது தான் னு சொல்லிட்டு ஒக்காந்து சாப்புட ஆரம்பிச் சான், அப்ப இவன் சொன்னான் இப்பத் தெரியுது அய்யாவுக்காகத்தான் மீன் கொழம்பானு கிண்டல் அடிச்சான் இவன்

மறுநாள் வெள்ளனா வேலைக்கிக் கெழம்பிட்டான் இவன் போய் மீன்கடையில  வேலையில இருந்தப்ப  இவனுக்கு போன் வந்துச்சு அம்மாவ ஆஸ்பத்திரில சேத்துருக்குறதாவும் மூத்தவனுக்கு போன் போட்டா எடுக்கலன்னும் ஒடனே ஆஸ்பத்திரிக்கி வரச்சொல்லியும் பக்கத்து வீட்டுக்கார அண்ணன் ஒருத்தர் போன் பண்ணினாரு,

ஒடனே தான் வேலபாத்துக்கிட்டு இருந்த மீன்கடையில சொல்லிட்டு வண்டி எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கி போனான் ஒரே பதை பதைப்பா இருந்துச்சு. அம்மாவுக்கு என்னாச்சோ எதாச்சோன்னு கவலையோட அங்க போனான். விசாரிச்சதுல அவசரசிகிச்சைப்பிரிவில அவங்க இருக்குறதா சொன்னாங்க  

அடிச்சிப்புடிச்சி அங்க ஓடினான், அங்க சொன்னாங்க வீதில வருறப்ப லாரிக்காரன் அடிச்சிப்போட்டுட்டான் நல்ல அடி ரொம்ப ரத்தம் போயிடுச்சு ஒடனே மூணு யூனிட் ரத்தம் வேணுமுன்னு சொன்னாங்க இவன் ஒடனே அண்ணனுக்குப் போன் பண்ணினான். அவன் எடுக்கல.  ஆஸ்பத்தில எந்த குரூப் வேணுமின்னு கேக்கையில எதுனாலும் கொண்டாங்க  நாங்க ஏத்துக்கிறோம்னு சொன்னாங்க 

அதுக்குள்ள மூத்தவன்  அங்க வந்துட்டான், என்ன எப்புடி இருக்காங்க அம்மான்னு கேட்டான் மூணு யுனிட் கேட்டாங்களே கெடைச்சிருச்சான்னு கேட்டான் இல்லனு சொன்னவன்னஅப்ப மூத்தவன் சொன்னான் நானும் டிரை பண்ணுனேன் என்கூட இருக்கும் நண்பர்கள் சொன்னாங்க அங்கயே போய் பாரு காசுக்கு ரத்தம் குடுக்குறவங்க இருப்பாங்க சொன்னா வந்து குடுப்பாங்க காசு குடுத்தாப்போதும் வருவாங்கன்னு சொன்னாங்க அதான் வந்து பாத்தேன்னு ஒருத்தரையும் காணோம் கொஞ்சம் பிளட் பேங்குகளுக்கு போன் பண்ணி டிரை பண்ணுறேன்னு சொல்லிட்டு எங்க எங்கயோ போன் போட்டு ரத்தம் கேட்டுக்கிட்டுஇருந்தான் ஆனா ஒன்னும் செட் ஆகலை ரத்தம் கெடைக்கிறதாத் தெரியல 

ஆனா சின்னவன் இருங்க என்னோட வேலைசெய்யிற ஆளுக இருக்காங்க  ஒடனே நான்  வேலை செய்யிற மீன் கடைக்கி ப்போய் அங்க இருக்குற தன்னோட வேலை செய்யிறவங்க கிட்ட கேட்டுப்பாக்குறேன்னு சொல்லிட்டுப்போய்ட்டு அங்க இருந்து மூணுபேரைக் கூப்புட்டு வந்தான், எல்லாம் செக்பண்ணி அதுல ரெண்டு பேரும் இவனும்  ரத்தம் குடுத்தாங்க, உள்ளாற ஆப்பரேசன் நடக்குது  ,  கொஞ்ச நேரம் ஆகும்னு நர்ஸ் சொன்னாங்க
அப்ப வெளிய போயிருந்த மூத்தவன் வந்து என்ன ஆச்சு ரத்தம் கெடைச்சதான்னு கேட்டான், 

 அதுக்கு இவன் சொன்னான் குடுத்தாச்சு நானும் என்னோட வேலை செய்யிறவங்க ரெண்டு பேரும் குடுத்துட்டோம் அவங்க திரும்பி கடைக்கிப்போய்ட்டாங்கனு சொன்னான், 

அப்ப நர்ஸ் வந்து சொன்னாங்க ஆப்பரேசன் முடிஞ்சிருச்சு இன்னும் நெனவு திரும்பல கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு  டாக்டர் சொன்னவன்ன நீங்கஉள்ளாற போய் பாக்கலாமுனு சொன்னாங்க 

அதுக்குள்ள டாக்டர் வெளிய வந்து   நீங்க  உள்ளாற போகலாம்னு சொன்னாரு, ரெண்டு பேரும் உள்ளாற போனா அம்மா கண் தொறந்தி ருந்தாங்க அப்ப  நர்ஸ் சொன்னாங்க ஒங்க பையன் தான் சரியான நேரத்துலதன்னோட  ஆளுகளோட வந்து ரத்தம் குடுத்து ஒங்களைக் காப்பாத்துனான்னு

அம்மாவோட கண்ணுல கண்ணீர் கசிஞ்சிச்சி அப்ப இவன் தயங்கி நின்னான் ஆனா அவனை வரச்சொல்லி கையப் புடிச்சிக் கிட்டாங்க. அவங்களுக்குபேச முடியல 

அதுக்குள்ள அவன்கூட வந்து ரத்தம் குடுத்தவங்க  வந்தாங்க அவங்க மேல மீன் நாத்தம் அடிச்சதால அவங்களே இல்ல நாங்க இங்க இருந்தே பாத்துக்கிறோம் அம்மா நல்லா ஆனாப்போதுனு சொன்னாங்க,அப்ப அவங்களையும் உள்ளாற வரச்சொன்னாங்க

அப்ப மூத்தவன் ” இப்ப மீன் நாத்தம் உங்க ஒடம்புக்குள்ள ஓடுது அவங்ககுடுத்த ரத்தமான்னு” கிண்டலா சொன்னான் 

 அம்மா அவங்க கைகளைப்புடிச்சி கண்ணீர் விட்டாங்க. அந்தக்கண்ணீர்ல ஆயிரம் அர்த்தம் இருந்துச்சு. அந்தக்கண்ணீர்  நாத்தம் மனசுக்கு இல்ல நு சொல்லாமச்சொல்லிச்சி

அ.முத்துவிஜயன்