நடுத்தர வர்க கதைகள்

naduthara-varga-kathaigal
நடுத்தர வர்க கதைகள்

அறுவது வயசானவன்ன எல்லாருக்கும் வாரகொழப்பம் அவருக்கும் வந்துச்சு 40 வருசம் கவர்மெண்டு குவாட்டர்ஸ்ல வாழ்க்கை ஓடிருச்சு...ரிட்டயர் மெண்ட்வந்தாச்சு... வீட்டைகாலிபண்ணச்சொல்லிருவான் ஆபீஸ்ல...ஏன்னா ரூல்ஸ் 6 மாசம் வரைக்கும் தான் இருக்க அலோவ் பண்ணும்அப்புறம் பொட்டியக்கட்டிட வேண்டியதுதான். 

எல்லா கவர்மெண்ட் ஸ்டாப்பும் சர்வீஸ்ல இருக்கையில வருமான வரிச்சலுகைக்காக லோன் போட்டு ஒருவீட்டை கட்டுவானுக... அது ஆகச்சிறந்த மடத்தனம்ன்னு பின்னாடி தெரிய வரும்.. ஏன்னா அதை கட்டும்போது சொந்த ஊருல கட்டிப்புடுவானுக... இவனுக ஊரை விட்டு வந்து பல நாள்  ஆயிருக்கும் அங்க ஒரு பயலையும் இவனுகளுக்குத்தெரியாது,,,,

சொந்தக்காரனுகதான் இருப்பானுக... வேலையில இருக்குறவரைக்கும் பந்தா காமிச்சி அவனுகளை இவனுக கண்டுக்கவே மாட்டானுக... கெத்தைகாமிப்பானுக....மதிக்க மாட்டானுக... ஒறவு அந்து போய்கெடக்கும்...
ரிட்டயர் ஆனவன்ன அங்க போறதுன்னா திகிலா இருக்கும்... அது கிராமமா இருக்குற துனால வசதி  கொறைவா இருக்கும் , இவனுகளோட புள்ளைகளுக்கு வேலை நகரங்கள்ல இருக்கும் எவனும் வரமாட்டான்...பொண்டாட்டியே சொந்தபந்தங்கள் புடிங்கித்தின்னும்ன்னு பயப்படுவா.....  இது பெரும்பாலோருக்கு நடக்குறதுதான்.......

இதுதான் அவருக்கும் நடந்தது.. ஊருல கடவாங்கி வீட்டைக்கடிருந்தாரு... ஆனா அங்க போக யாரும் வீட்டுல ஒத்துக்கல  வாடகை வீடுக்கு போறதுன்னு முடிவாச்சு ஏன்னா இப்ப வீடு சென்னையில வாங்கணும்னா 70 லட்ச்சத்துக்கு மேல சொல்றான்.... கடனும் வேலையில இல்லாததால தரமாட்டான் கையிலயும்  அம்புட்டுகாசு இல்ல....
அப்ப வீடு தேடுறதுன்னு முடிவெடுத்து தேடினப்ப  ஒரு நோட்டீஸ் ஒஅட்டிருந்துச்சு.. வீடு வாடகைக்கு 2BHK 3BHK இந்த எண்ணுக்குதொடர்பு கொள்ளவும்ன்னு...

இவரு அந்த நம்பருக்கு போன் அடிச்சாரு.. அந்த மொனையில  எடுத்தவர் முனுசாமின்னு பேர் சொன்னாரு... இவர் பேரு சொன்னார்... அவர் எங்க இருந்து கால்பண்ணுறீங்கன்னு கேக்க இவர் சொன்னார்...
அந்த மொனையில சார் நீங்கதான அது ஒங்ககூட வேலபாத்த முனுசாமிதான் சார் நான் என்னைத்டெரியலயான்னு கேட்டார் 
இவருக்கு முனுசாமி நெனப்பு வந்துச்சு.... ஆமா அந்த மெக்கானிக்கல் செக்சன் முனுசாமியான்னு கேக்க இல்ல சார் நான் ஸ்ட்டோர் முனுசாமிசார் ஹெல்ப்பரா இருந்து அப்புறம் ப்ரொமோசன்ல டெக்னீசியன் ஆனேனே உங்களுக்குக்கூட ரேசன் கார்டுல அட்ரெஸ் மாத்திக்குடுத்தேனே நெனப்பில்லையா சார்...னு சொன்ன வன்ன நாவகம் வந்துச்சு...தெரியிது நல்லாருக்கியாப்பான்னு கேட்டார்... 

அவர் சொன்னார் நல்லாருக்கேன் சார் வீடு நம்பளுதுதான் வாங்க சார் பாக்கலாம்னு சொன்னார்...
இவருக்கு முனுசாமி சர்வீஸ்ல இருக்குற ப்ப பண்ணுன விசயங்கள் நாவகம் வந்துச்சு... 

முனுசாமின்னாலே யாருக்கும் நல்ல ஒப்பீனியன் கெடையாது... ஏன்னா அவன் யாரைப்பாத்தாலும் கடன் கேப்பான்....  15 தேதிக்கு மேல கடன்லதான் அவன் பொழப்பே நடக்கும்.... சார் ஒரு 100 ரூ குடுங்கசார் ஒண்ணாந்தேதி திருப்பித்தந்துற்றேன் ந்னு மண்டையச்சொறிவான்.....  இல்லைன்னாலும் விடமாட்டான்... 50 குடுங்கசார்ன்னு கேப்பான்...

வாங்குனதை அவனா வந்து திருப்பிக்குடுத்தா யோசன வரும் அடுத்து எதோஒரு பெரிய தொகை கடனா வாங்க அடிப்போடுறான்னு அதேமாதிரி 15 ஆம் தேதி வந்து நிப்பான் சார் பையனுக்கு ஃபீஸ் கட்டனும் ஒரு 2000 இருக்கு மாசார் ஒண்ணாந்தேதி குடுத்துறு வேன்னு  வந்து நிப்பான்.... தப்பித் தவறிக்குடுத்தா அதை வாங்குற துக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடும்....

அவங்க செக்சன் பாஸ்கிட்டயே வாங்குவான் சார் ஓவர்டைம் போட்டுக்குடுங்கசார்...உங்க கிட்ட வாங்குனதை அதுக்கான பணம் வந்த வன்ன திருப்பிக்குடுத்துடுவேன்னு பேரம் பேசுவான்....

ரேசன் கார்டுல பேர் அட்ரெஸ் மாத்துறது பழைய சைக்கிள் பைக் வாங்கிக்குடுக்குறது வித்துக்குடுக்குறது  இதெல்லாம் கமிசன் பேஸ்ல செய்வான்.... செலபேருகிட்ட அதிக லாபம் வைச்சி வித்துருவான்....அவன் ரிட்டயர்டு ஆகி 10  வருசம் ஆகிப்போச்சு தொடர்புல இல்ல....

இப்ப அவன் வீடுன்னவன்ன கொஞ்சம் பயம் வந்துச்சு... வீடு எப்படி  இருக்குமோ அங்க போனவன்ன கடன் கேப்பானோ..இல்ல ஏமாத்துவானோன்னு யோசனை வந்துச்சு. சம்சாரமும்சொன்னா அது சரிப்படாதுங்க ஏமாத்துனாலும் ஏமாத்துவான் நாம கேர்ஃபுல்லா இருக்க வேண்டிய நேரமிதுன்னு

சரின்னு முனுசாமிக்கு  வேணாம்பா ந்னு சொல்லலாமுன்னு  போன் பண்ணினாரு... ஆனா அவன் சொன்னான் சார் வந்து பாருங்க வீட்ட புடிச்சிருந்தா வாங்க இல்லாட்டினா பக்கத்துல கூட ரெண்டுமூணு வீடுக இருக்கு பாருங்க என் வீட்டுக்கு வரனும்ன்னு கட்டாயப்படுத்தலன்னான்.....

சரி போய்த்தான் பாப்பமேன்னு கெளம்பு னாரு... சார் மெயின் ரோட்டில வந்து கால் பண்ணுங்க நான் வந்து கூட்டிட்டுப் போறேன்னார் முனுசாமி...

மெயின் ரோட்டிலவந்துகால்பண்ணவேண்டிய அவசியமே இல்ல அங்கயே தயாரா நின்னான் இவருக்கு திக்குன்னு ஆயிப்போச்சு இன்னிக்கி என்னமோ பண்ணப்போறான்னு தோணிச்சி 

இவரு என்னாப்பா முனுசாமி நல்லாருக்க யான்னு விசாரிச்சாரு. சாருங்க புண்ணியத்துல நல்லாருக்கேன் சார்ன்னார் 70 வயசு ஆனா ஆக்டிவாசுறுசுறுப்பா இருந்தார் வைரம் பாஞ்ச கட்டையாச்சே... ஏமாத்தி வளத்த ஒடம்பாச்சேன்னு தோணிச்சு...

வாங்கசார் இங்க பக்கத்துல யே ஒரு வீடு இருக்கு பாக்கலாமுன்னு கூட்டிட்டுபோனார் அந்தவீடு2BHK  நல்லத்தான் இருந்துச்சு ஆனா மாடி வீடு மேல எதுவும் வீடுஇல்ல சம்மர்ல ஏசி இல்லாம இருக்கமுடியாது.... அதுனாலவேற பாக்கலாம்ன்னு சொன்னார்

அடுத்து ஒரு வீடுகாமிச்சார். அதுவும்2BHK தான் ஆனா ரூம் சைஸ் 10x8 ரொம்ப சின்னதா இருந்துச்சு வெஸ்டன் டாய்லெட் இல்ல அதுனால வேணான்னு சொல்லிட்ட்டார்...

அடுத்து அந்த வீடுதான் நம்ம வீடுன்னு காமிச்சார் கைய நீட்டி அங்க இவரோட நெலமைக்கு ஒரு வீடும் தெரியல ஆனா மூணு மாடி வைச்சி த்தனியா  காம்பவுண்ட் எல்லாம் கட்டி கார்பார்க்கிங் வசதியோடஒரு பெரிய வீடு இருந்துச்சு...இதுவாஉன் வீடுன்னு கேட்டார் .. ஆமாங்க சார் 4 செண்டுல் வீடு ரெண்டு மாடி மொட்டமாடில ஒரு சின்ன ரூம் போட்டுருக்கேன்.... உள்ள வாங்கன்னு கூட்டிட்டுப்போனார்...

கீழதனியா மூணு ரூம்பெரிய ஹால் பெரிய அடுப்படி 1700 சதுர அடில வீடு ரூம் 14x12 வெஸ்ட்டன் டாய்லெட்மாடுலர் கிச்சன்ன்னு கலக்கலா இருந்துச்சு... இதுல நாங்க இருக்குறொம்ன்னார்...மேல வாங்கன்னு கூட்டிட்டுப்போனார்..

மேலயும் அதேமாதிரிதான் சேம் சைஸ் இதுதான் சார் உங்களுக்குச்சொன்னது ந்னார் நெஜமா இது உன்வீடுதானான்னு கேட்டார்...

அப்ப அவர் கோவப்படாமச்சொன்னார்...நீங்க கேக்குறதுல ஞாயம் இருக்குசார்... நான் இதுமாதிரி வீடுகட்டுறமாதிரி பொழப்பு பொழைக்கல.... நான் உழுந்து பொறண்டு என் மூணு பிள்ளைகளைப்படிக்க வைச்சேன்  இங்க  லோன் போட்டு எடம் அஞ்சரை செண்டு 20 வருசத்துக்கு முன்னாடி வாங்கிப் போட்டு ருந்தேன், 

என் புள்ளைக ரெண்டு பேரும் நல்லாபடிச்சி சாப்ட்வேர்ல அமெரிக்கா போனாங்க பொண்ணு இங்க சாப்ட்வேர்ல இருக்கு... அவங்க சம்பாத்தியத்துல கட்டுனதுதான் இந்தவீடு...40 வருசம் சின்ன வீட்டுல வாழ்ந்துட்டோம் நம்ம பிள்ளைக அதுமாதிரி இருக்கக்கூடாதுன்னு கட்டுனதுதான் இந்த வீடு நாளைக்கி பிள்ளைக அனுப்புன காச வீணாக்கிட்டோம்ன்னு இருக்கக்கூடாதுன்னு  இதை நானே பக்கத்துல இருந்து கட்டுனேன்..... நீங்கன்றதால உங்களுக்குத்தாறேன் ஏன்னா வாடகைன்னு காசப்பாத்து  யார்கிட்டயாவது குடுத்தா வீடுவீணாகிப் போய்டும்..... 
 அதான்னார்

அப்ப இவர் சொன்னார்.. நீ எவ்வளவு கஸ்ட்டப்பட்டன்னு எனக்குத்தெரியும் உன் கஸ்டம் வீணாகல உன் பிள்ளக உன்ன நல்லா வைச்சிட்டாங்க.... பெருமையா இருக்குன்னு சொன்னவன்ன....

என்னா பெருமைசார்...அந்த சின்ன வீட்டுல பொண்டாட்டி புள்ள குட்டிகன்னு சந்தோசமா இருந்தோம் காசு இல்ல ஆனா சந்தோசம் இருந்துச்சு... இப்ப சம்சாரம் இல்ல போய்ட்டாபுள்ளைக அமெரிக்காவில நான் மட்டும் தனியா இங்க வாட்ச்மேன் மாதிரி என்ன பொழப்புசார் இது.....  சின்ன அடுப்படில அவ இருந்தா பிள்ளைக பக்கத்துல இருந்தாங்க கஞ்சியோ கூழோ அவகையில வங்கிக்குடிச்ச சந்தோசம் இப்ப இல்ல இனி கெடைக்கவே கெடைக்காதுன்னு கண்ணுல நீர் தழும்பச்சொன்னார்.... அவர் சம்சாரம் போட்டா அங்க மாலையோட இருந்துச்சு....
இவர் கண்ணும் கலங்கிடுச்சு...... 

அ.முத்துவிஜயன்