தீக்குள் விரலை வைத்தால் - சிறுகதை

theekkul-viralai-vaithal-short-story
தீக்குள் விரலை வைத்தால் - சிறுகதை

காலையிலே கிளம்பிவிட்டார் சின்னான் ”ஏண்டா இன்னும் எந்திரிக்கலை” வெரசாப்போனாத்தான பாக்கமுடியும் உள்ளாற போய்ட்டாப்பாக்கமுடியாதுல எந்த்திரிடா ” என்று சுடலையப்பாடாப்படுத்திக்கொண்டிருந்தார்  சுடலை அசைவதாயில்லை போதாத்தா ஒனக்கு என்னையப்புடிக்கல மகபிள்ளை பேத்திதான் உசுறு கூடயே இருந்தாலும் என்ன கேவலமாத்தான் திட்டுவ என்று சலித்துக்கொண்டான் .ஏண்டா நீயும் அவளும் ஒன்னாடா நீ மாடுமேய்க்கிறபய அந்தப்புள்ள அப்படியா ...என்றார் .போதாத்தா நானா மாடுமேய்க்க ஆசைப்பட்டேன் எங்கப்பு சீக்கிரமே மண்டயப்போட்டுடுச்சு படிக்கவைக்க ஆளில்ல நீ கஞ்சிஊத்துறதே அதிகம் அப்பாலே எப்புடி படிக்கவைக்கிறது 

அதான் நானாவே ஒரு சோலியத்தேடிக்கிட்டேன் அதுதான் மாடுமேய்க்கிறது அது உனக்குக்கேவலமா இருக்கு என்று கண்கலங்கச் சொன்னான்  சின்னான் அவனை அணைத்துக்கொண்டார்  நீ பக்கத்துலயே இருக்குறீயே ராசா நெதம் உன்னப்பாத்துட்டுத்தான இருக்கேன்  நீதான சொன்ன தாத்தா உன் மகபுள்ளபேத்தி இங்கிலீஸ் பள்ளிக்கொடத்துல படிக்குது நான் பாத்தேன் நு அதான் ஒரு ஆசை போய் பார்த்துட்டு வரலாம் நு கூட்டிட்டுப்போடான்னா ரொம்பத்தான் பேசுற நீ என்றார் சரி கிளம்புதாத்தா நான் மூஞ்சைக்கழுவிட்டு வாறேன் என்று குடிசைக்கு வெளியே சென்றவன் ஈர உடையோடு திரும்பிவந்தான் என்னடா குளிச்சியா என்றார் சின்னான் ஆமா தாத்தா பள்ளிக்கொடம் போறம்ல குளிச்சிட்டுப்போக்லாம்  நுதா  என்று சொல்லியபடி உள்ளே சென்றவன் போன பொங்கலுக்கு வாங்கிய டவுசர் சட்டைபோட்டு  வந்தான் தாத்தா எப்படி இருக்கு நல்லா இருக்குதா என்று சிரித்தான் ஒனக்கென்ன ராசாடா நீ இரு வறேன் என்று உள்ளே சென்று  அவரின் ஒரே சட்டையை போட்டபடி வந்தார் வாடா போகலாம் என்றவரின் கைகளில் இருந்த மஞ்சப்பை சுடலையின் கவனத்தைக் கவர்ந்தது  என்ன தாத்தா பேத்திக்கா  வாங்குனதை சொல்லவே இல்லை  ஒளிச்சுவைச்சிருந்தயா நான் எடுத்து தின்னுபுடுவேன்னு என்று  சொல்லிச் சிரித்தான்  இனிப்பாச்சே எலி திண்ணுடப்போகுதுண்ணு பானைக்குள்ள வைச்சிருந்தேன்  உனக்கும் வைச்சிருக்கேன் போய்ட்டுவந்து தாறேன்  என்றார்  சரிவா தாத்தா டவுன் பஸ் வர்ற நேர்மாச்சு என்றான் இருவரும் பஸ்டாண்டு போகவும் பஸ் வரவும் சரியாக இருந்தது பஸ்சில் இருவதும் ஏறிக்கொண்டனர்..பஸ்கிழம்பியது தாத்தா தன் முடிச்சிலிருந்து காசு 

எடுத்துக்கொடுத்தார் எங்கே போகனும் என்றார் கண்டக்டர்    சுடலை சொன்னான் பெரியபஸ்டாண்டுக்கு என்று அதுக்குக்காசு கம்மியா இருக்கே என்றார் கண்டக்ட்டர்  அதுல இருக்கதுக்கு டிக்கெட்குடுங்கய்யா எங்க எறங்கனும் நு சொல்லுங்க எறங்கிக்கிறேன் என்றார்  சரி சொல்றேன் என்று சொல்லி டிக்கெட் இரண்டு கொடுத்தார் கண்டடர் தாத்தா கண்டகடரையே பார்த்துக்கொண்டிருந்தார் எப்பா இறங்கச்சொல்லுவார என்று கண்டக்டர் அவர் வேலையில் மூழ்கியிருந்தார் பஸ்ஸில் பள்ளிசெல்லும் பிள்ளைகள் சில ஏறின ஆசையாகப்பார்த்தார் தாத்தா. பேத்தியும் இப்படித்தான் இருக்கும் என்று சிரித்துக்கொண்டார்  சுடலை வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கி யிருந்தான் அதற்குள்பெரியபஸ்டாண்டு வந்திருந்தது தாத்தா கண்டக்டரைப்பார்த்து எறங்குற எடம் சொல்லவே இல்லையே என்றார் கண்டக்ட்டர் அதான் வந்திரிச்சில்ல பஸ்டாண்ட் இறங்குங்க என்றார் சிரித்தபடி கீழே இறங்கி தாத்தா உனக்கு பள்ளிக்கொடத்துக்கு வழிதெரியுமாடா என்றார் வாங்கபக்கம்தான் போகலாம் என்றுத்தாத்தாவின் கையைப்பிடித்தான் சுடலை தாத்தா கைய விடுடா நான் வந்துருவேன் என்று உதறினார்  பள்ளியை 

நெருங்கிவிட்டிருந்தனர் இருவரும் ,,இந்தமரத்தடியிலே இருப்போம் பிள்ளைகளெல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க அந்தபிள்ளையும் அவுக அம்மாவும் இப்போ வந்துடுவாக உள்ளநம்மல விடமாட்டாக என்றான் சுடலை கொஞ்சநேரத்துல பள்ளிவாசல்ல கார் ஒன்னு வந்து நின்னது அதுல இருந்து ஒருபொண்ணு இறங்க சுடலை இந்தா வந்துட்டாக என்று மகிழ்ச்சியில் சத்தமாகச்சொன்னான் யாருடா எங்கே என்றார் தாத்தா .தாத்தாவின் கையப்புடிச்சு சுடலை அந்தப்பெண்ணிடம் அழைத்துச்சென்றான்  அதற்குள் அந்தகுழ்ந்தையின் அம்மா காரில் இருந்து இறங்கி அந்தக்குழந்தையைப் பார்த்து ஸ்டெல்லா சீக்கிரம்போ டைம் ஆயிடுச்சு என்றாள் .அதற்குள் தாத்தா 

குழந்தைகைபிடித்திருந்தார்...மஞ்சள்பையை குழ்ந்தைகையில்திணித்து உனக்க்த்தான் வாங்கிவந்தேன் என் பேத்தி என்பேத்தி என்று அணைத்துக்கொண்டார்..அந்தக்குழந்தையின் அம்மா விரைந்து வந்து பலவந்தமாக குழந்தையை விடுவித்து பையை பிடுங்கி எரிந்துவிட்டு ஸ்டெல்லா நீ வேகமா ஸ்கூல்க்கு போ என்றார்...குழந்தைக்கு ஒன்றும் புரியவில்லை அது விழித்தது ஒன்றும் புரியாமல்  இந்ததாத்தா யாரு என்றது அதற்கு அவள் அது யாரோ ஆள்தெரியாம வந்துட்டாரும்மா நீ போ என்றாள் குழந்தை யோசித்தபடி உள்ளே சென்றது .இப்பொழுது 

அந்தப்பெண் தாத்தாவைப்பார்த்து இங்கே யாரு உங்களை வரச்சொன்னது யாராவது பார்த்தா என் ஸ்ட்டேட்டஸ் என்னாகும் எங்களைப்பத்தி என்ன நினைப்பாங்க ஒங்கசாகவாசமே வேணாம்தான இருக்கோம் இங்கேவந்து ஏன் எங்களைக்கேவலப்படுத்துறீங்க என்று கத்தினாள் அங்கே அனைவரும் அவர்களைத்திரும்பிப்பார்க்கவும் அவள் கைப்பயில் இருந்து 50பணத்தை எடுத்து தாத்தாகையில்  எறிந்துவிட்டு ஒழுங்கா ஊர்போய் சேருங்க என்று சொல்லிவிட்டு கார்கதவை டமால் என்று சாத்திவிட்டு கிளம்பினாள் தாத்தாவின் கண்களில் நீர் வழிந்தது.....சுடலை என்ன தாத்தா இப்புடி இருக்கு உன் மக என்றான் அதுக்குதாத்தா டேய் இப்போதான் மனசு சந்தோசமா 

இருக்கு...பேத்தி என்னமா பெரியசாதிக்காரப்புள்ளமாதிரி போகுது ,,,என்றார் சுடலை உன்னத்தொடவிடலயே ஓம்மக என்றான் அதுக்கு தாத்தா என் பேத்தி படிச்சு பெரியாஆளா வந்துருவா  அப்புறம் என்பேத்திய யாரும் என்ன சொன்னமாதிரி சொல்லமாட்டாகல்ல தொடாதேன்னு  அதுபோதும் அவுகளாவது இந்த கேவலத்துல இருந்து தப்பிச்சி நல்லாஇருக்கட்டும் நா தூரத்துலைருந்துபாத்துசந்தோசப்படுறேன......அதுபோதும் எனக்கு நீ வாடா போகலாம் என்று நடக்கத்தொடங்கியிருந்தார் கீழேவிழுந்த மஞ்சள்பையை சுடலை எடுதுக்கொண்டு தாத்தாபின்னால் நடக்க 50 ரூபாய் காற்றில் பறந்தது.... சுதந்திரமாக..

- அ.முத்துவிஜயன்